C S I CHEATED KOVIL LAND IN ERODE
C S I CHEATED KOVIL LAND IN ERODE ஈரோடு: கோவில் நிலத்தை அபகரித்த சி.எஸ்.ஐ – மோசடி! August 2, 2012 By சு. சண்முகவேல் ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான, சி.எஸ்.ஐ. நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள 40 ஏக்கர் நிலத்தை மீட்கக் கோரி ‘ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் நிலமீட்பு இயக்கம்’ மற்றும் பொதுமக்கள் சார்பாக கடந்த 6 ஆண்டுகளாக, கண்டன ஆர்ப்பாட்டம், மனுக் கொடுத்தல், அடையாள உண்ணாவிரதம், ஒருநாள் கடையடைப்பு, ஒரு லட்சம் கையெழுத்து இயக்கம், பேரணி, பால்குட ஊர்வலம், திருவிளக்கு பூஜை, சாகும்வரை உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். கோவில் நிலத்தை மீட்க பக்தர்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு பகுதி காண்க: ஈரோடு: மாரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி! ஈரோட்டில் ஒன்றுபட்ட இந்து மக்கள் சக்தி: ஒரு விரிவான அலசல் இந்நிலையில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உரிமை கொண்டாடி வரும் ஈரோடு சி.எஸ்.ஐ. நிர்வாகத்தின் முகத்திரையைக் கிழித்திருக்கிறது, அண்மையில் வெளியான நக...