NEELAKANDA BRAHMACHARI , FREEDOM FIGHTER BORN 1889 DECEMBER 4
NEELAKANDA BRAHMACHARI , FREEDOM FIGHTER BORN 1889 DECEMBER 4 நீலகண்ட பிரம்மச்சாரி (Neekakanda Brahmachary) (4 திசம்பர் 1889 - 4 மார்ச் 1978) 1911ஆம் ஆண்டில் மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டபோதுதான் நீலகண்டனின் பெயர் நாடு முழுவதும் பிரபலமானது.[1]. இந்திய விடுதலை இயக்கப் போராட்டத்தில் இளம் வயதில், 20,000 போராளிகளை ஒன்று திரட்டி, புரட்சி இயக்கம் ஒன்றை தோற்றுவித்துப் போராடியவர். வாழ்வின் பெரும்பகுதியை இந்தியா, பாகிஸ்தான், மியான்மர் நாட்டுச் சிறைகளில் கழித்தவர். வாழ்வின் பிற்பகுதியில் விரக்தியுற்று சந்நியாசம் பெற்று மைசூர் அரசில் நந்தி மலையடிவாரத்தில் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு ஸ்ரீ ஓம்காரானந்த சுவாமி என்ற பெயரில், தனது 88ஆவது வயதில் 4 மார்ச் 1978இல் காலமானவர். இளமை[மூலத்தைத் தொகு] சீர்காழியை அடுத்த எருக்கஞ்சேரி எனும் கிராமத்தில் சிவராமகிருஷ்ணன் –சுப்புத்தாயி தம்பதிகளுக்கு 4 டிசம்பர் 1889ஆன் ஆண்டில் மூத்த மகனாகப் பிறந்தவர். சீர்காழி இந்து உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம்...