உலக சினிமா உருவான வரலாறு
உலக சினிமா உருவான வரலாறு லூமியெர் சகோதரர்கள் முதலில் சினிமாவை தம்பட்டம் அடித்து காட்டத் துவங்கியவுடன், சென்னை வாசிகளுக்கும் பாரிசிலிருந்து அந்த அதிஷ்டக் காத்து வீசியது . 1897-ல் எம். எட்வ்ர்ட்ஸ் என்ற ஆங்கிலேயர், இரண்டு ”கினிமா” திரையிட்டார். அந்த இரண்டு கினிமாவுமே சில நிமிஷங்கள் தான் ஓடும் “The arrival of the train” மற்றும் ”Leaving the factory” என்ற இந்த இரண்டு ”கினிமா”க்களும் ”விக்டோரியா பொது மாளிகை”யில் திரையிடப்பட்டது. அந்த கட்டிடம் இன்றும் ரிப்பன் பில்டிங் அருகாமையில் உள்ளது. இந்த திரையிடல் மூலமாக மக்களிடையே ஆர்வம் பெருக, பல இடங்களில் பயாஸ்கோப், கினிமாஸ்கோப் என பெயர்களுடன் உலா வந்தது. ”பாரு பாரு பயாஸ்கோப் படத்தப்பாறு, ஒன்றரை பைசா மட்டும் செலுத்தினால் போதும்” என்றவுடன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள் மக்கள். மின்சாரம் இன்றி , லைசென்ஸ் என்று எதுவும் இன்றி. மக்னீசியத்தை வைத்து ஒளிப்பரப்பு செய்தார்கள். 1900-ம் ஆண்டு மக்களுடைய ஆர்வத்தையும் வரவேற்பையும் பார்த்து சென்னையில் வாரிக் மேஜர் (Warwick Major) ஒரு நிரந...