ABOUT GANDHI
ABOUT GANDHI இந்திய அரசியலில் காந்தி செய்த முன்று துரோகங்கள் என்று சொல்லப்படுகின்றவை உங்கள் கவனத்துக்கு வந்திருக்கின்றனவா? 1. அவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை நியாயமற்ற முறையில் கட்சித் தேர்தலில் தோற்கடித்தார் 2. அவர் பகத் சிங் தூக்கிலேற்றப்பட்ட போது அதை ஆதரித்தார் 3. தலித்துக்களுக்கு இரட்டை வாக்குரிமையை ஆங்கில அரசு கொண்டுவந்தபோது அதை உண்ணாவிரதம் இருந்து தோற்கடித்தார் காந்தியின் மேல் கல்லெறிபவர்கள் எல்லாம் யார் ? ரஜினியை அரசியலுக்கு வா வா என்று அழைக்கும் சின்ன பயல்கள் தான் .இவர்களிடம் காந்தியின் சத்திய சோதனையை அறியார் .ஆனால் காந்தியைப்பற்றி தரக்குறைவாக எழுதிய வடக்கத்தி காரனின் தமிழாக்கத்தை படித்திருப்பார்கள் . உடனே அரசியல் பற்றி பேச தனக்கு முழு தகுதி வந்து விட்டதாக நினைத்துக்கொள்ளுவார்கள் . பிரபாகரனை தலைக்கு மேல் வைத்து கொண்டாடிய நீங்கள் கண்ட பலன் என்ன ? பிரபாகரன் மொழியில் சொன்னால் பத்து லட்சம் தமிழ்மக்கள் பேர் பூமியில் விதைக்கப்பட்டு இருக்கிறார்கள் . இதையே தான் நேதாஜியும் செய்திருப்பான் என்று புரியாமல் பேசுகிறார்கள் . ...