STORY TELLING IS AN ART
STORY TELLING IS AN ART உலகில் கதைகள் சொல்லப்படுவது எப்படி? June 12, 2015 வரலாறு உலகம், கதை, கதைசொல்லி, கலாச்சாரம் ஒரே கதையாக இருந்தாலும் ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு சொல்வதே மக்களின் இயல்பு. ஒவ்வொரு கலாச்சாரமும் தனிச்சிறப்பும், வழக்கமும் கொண்டவை. தமிழகத்தில் தெருக்கூத்து முதல் பரதநாட்டியம் வரை பல்வேறு முறைகளில் கதைகளை, உண்மைகளை மக்களுக்கு கொண்டுசெல்வது பல ஆயிரம் ஆண்டுகளாக அரங்கேறி வருகிறது. அதே போல வெவ்வேறு கலாச்சார கதை சொல்லும் முறைகளில் சிறந்ததாக நான் கருதுவதை, நான் வியந்ததை தெரிவு செய்து பட்டியலிட்டிருக்கிறேன். காண்க. யுலா அவாயித் தீவுகள், வடக்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டம். அங்கே வாழும் மூத்த குடிகளாம் பொலினீசியர்கள் உருவாக்கிய நடன வடிவமே யுலா. யுலா இசைக்கருவிகளை சார்ந்த நடனம் இல்லை, அது அவர்களது மொழி சார்ந்த நடனம். மெட்டுகளுக்கு ஆடும் நடனமில்லை, வார்த்தைகளுக்கு ஆடும் நடனம். ஒவ்வொரு வார்த்தையையும் தங்களது முகபாவங்களாலும், உடல் அசைவுகளாலும் காண்போரை சென்றடையச் செய்வதே யுலா நடனக் கலைகர்களின் சிறப்பு. hula சீன நிழல் பொம்மலா...