MANIMEKALAI -APUTRAN PART 1
MANIMEKALAI -APUTRAN PART 1 மணிமேகலை ஆபுத்திரன் கதை - பகுதி 1 - ராஜம் "மணிமேகலை" என்று சொன்னவுடனே "அமுதசுரபி" என்ற சொல்லும் சிலர் நினவுக்கு வரும். "அமுத சுரபி" நம்மில் பலர் பொதுவாகவும் எளிமையாகவும் புரிந்துகொண்டிருக்கும் வகையில் சொல்லப் போனால்... "அமுத சுரபி" ஒரு பிச்சைப் பாத்திரம். அந்த "அமுத சுரபி"யில் இடப்பட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும். அந்தப் பாத்திரத்தில் பிச்சை பெற்று, அதிலிருந்து கிடைத்த உணவைக் கொடுத்துத்தான் மக்களின் பசிப்பிணியைத் தீர்த்தாள் மணிமேகலை. மணிமேகலை கைக்கு அமுதசுரபி எங்கேயிருந்து வந்தது? ஆபுத்திரன் என்பவனிடமிருந்து வந்தது. நேரடியாகவா? இல்லை... . சுற்றுவழியில் வந்தது. அந்தச் சுற்றுவழி எது? தென்மதுரைச் சிந்தாதேவி --> ஆபுத்திரன் --> மணிபல்லவத் தீவில் கோமுகி --> மணிமேகலை சிந்தாதேவி யார்? ஆபுத்திரன் யார்? கோமுகி என்றால் என்ன? என்று பல கேள்விகள் எழும். பார்க்கலாம். ஆபுத்திரன் - அமுதசுரபி வாராணசியில் வேதம் ஓதுகிற அபஞ்சிகன் என்பவனுக்குச் சாலினி என்று ஒர...