POORANI ,WRITER BORN 1913 OCTOBER 17- NOVEMBER 17,2013
POORANI ,WRITER BORN 1913 OCTOBER 17- NOVEMBER 17,2013 பூரணி (17 அக்டோபர் 1913 - 17 நவம்பர் 2013[1]) தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் 80 ஆண்டுகளுக்கும் மேலாக கவிதை, கட்டுரை, சிறுகதைகளை எழுதி வந்தார். பூரணி - கவிதைகள், பூரணி நினைவலைகள், பூரணி சிறுகதைகள், செவிவழிக் கதைகள் போன்ற பல நூல்கள் வெளியாகியுள்ளன. வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு] பூரணியின் இயற்பெயர் சம்பூரணம். தந்தை இராமசாமி ஐயர், தாயார் சீதாலட்சுமி. இவர்களின் 10 குழந்தைகளில் சம்பூரணம் ஒன்பதாவதாகப் பிறந்தார். தந்தை ஒரு தமிழ்ப் பண்டிதர். இராமசாமி அய்யர் 1864 இல் பிறந்தவர். தொல்காப்பியத்திற்கு எளிய உரை எழுதியவர். பழநியில் 20 ஆண்டுகளாக ஆண்கள் பள்ளியைத் தன் சொந்தப் பணத்தில் ஆரம்பித்து நடத்தி வந்தார். பின் சொத்துகள் அழிந்து விட்ட நிலையில் அந்தப் பள்ளியை அன்னி பெசண்ட் அம்மையாரிடம் கையளித்தார். \[2] பூரணிக்கு ஒன்பது பிள்ளைகள். பூரணி 1927 இல் கவிதை எழுத .ஆரம்பித்தார். 80 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். 1937 இல் பழனியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த சித்தன் இதழ்களிலும், கோவையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த...