L.R .ESWARI பிரபல பின்னணிப் பாடகி. பிறப்பு டிசம்பர் 7,1939
L.R .ESWARI பிரபல பின்னணிப் பாடகி. பிறப்பு டிசம்பர் 7,1939 எல். ஆர். ஈஸ்வரி ( பின்னணிப் பாடகி. ) தமிழ்நாட்டின் பிரபலமான ஒரு திரைப்படப் பின்னணிப் பாடகி. 1958 ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் பாடி வரும் இவர் ஆயிரக்கணக்கான பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ளார். வாழ்க்கைச் சுருக்கம்[தொகு] பரமக்குடிக்கு அருகே இளையான்குடி என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தோனி தேவராஜ், ரெஜினாமேரி நிர்மலா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார் ஈசுவரி. இவரது தாயார் எம். ஆர். நிர்மலா ஜெமினி ஸ்டூடியோவில் குழுப்பாடகியாக இருந்தவர். ஈஸ்வரியின் இயற்பெயர் "லூர்துமேரி ராஜேஸ்வரி". எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இளம் வயதிலேயே தந்தை (36) இறந்து விட்டார். அமல்ராஜ் என்ற தம்பியும், எல். ஆர். அஞ்சலி என்ற தங்கையும் இவருக்கு உண்டு. திரையுலகில்[தொகு] மனோகரா (1954) படத்திற்காக எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைப்பில் "இன்ப நாளிலே இதயம் பாடுதே" என்ற பாடலை ஜிக்கி குழுவினர் பாடினர். அப்பாடலில் தாய் நிர்மலாவுடன் இணைந்து ஈஸ்வரியும் குழுவினருடன் சேர்ந்து பாடினார்.[1] அன்ற...