ELLIS R.DUNGAN ,AMERICAN DIRECTOR BORN 1909 MAY 11 - 2001,DECEMBER 1
ELLIS R.DUNGAN ,AMERICAN DIRECTOR BORN 1909 MAY 11 - 2001,DECEMBER 1 எல்லிஸ் ஆர். டங்கன் (Ellis R. Dungan, மே 11, 1909 - டிசம்பர் 1, 2001) பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய ஒரு அமெரிக்கர். 1935 இலிருந்து 1950 வரை பதின்மூன்று தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய இவர், எம். ஜி. ராமச்சந்திரன், டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன் ஆகிய நடிகர்களை அறிமுகப்படுத்தினார்.[ பிறப்பும் படிப்பும் டங்கன் ஐக்கிய அமெரிக்காவில், ஒகையோ மாநிலத்தில் பார்டன் என்னும் சிற்றூரில் மே 11, 1909 இல் பிறந்தார். அருகிலுள்ள செய்ன்ட் கிளார்ஸ்வில் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளியின் ஆண்டு இதழுக்குப் புகைப்படங்கள் எடுப்பதற்காகத் தனது முதல் புகைப்படக் கருவியை வாங்கினார். அவ்விதழின் பொறுப்பாசிரியராகவும் அவர் இருந்தார். பள்ளிக் கல்வி முடிந்தவுடன், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த திரைப்படத்துறையில் சேர்ந்தார்[4]. தமிழ்த் திரைப்பட இயக்குனராக அம்பிகாபதி திரைப்படத்தை இயக்குகிறார் டங்கன் கல்லூரியில் டங்கனுடன் மாணிக் லால் டாண்டன் என்ற இந்திய மாணவர் படித்தார்...