S.R.PUTTANNA ,KANNADA DIRECTOR
BORN 1933 DECEMBER 1-1985 JULY 5
எஸ்.ஆர்.புட்டண்ணா கனகல் [இயக்குநர்]
இந்தியாவில் பிரபலமான திரைப்பட இயக்குநர்களில் ஒருவர் எஸ்.ஆர்.புட்டண்ணா கனகல். இவர் கன்னடத்திலும், தமிழிலும் பிரபலமானாவர். திரைப்படங்களின் மூலமாக, மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் வேகமான விவேகமுள்ள மனிதர்.
இவரது சகோதரரின் மூலமாக திரு. பந்துலுவிடம் வசனம் சொல்லிக் கொடுப்பவனாக இருபது வயதிலேயே சேர்ந்துவிட்டவர். பி.ஆர்.பந்துலு படத்தை பி.ஆர்.பந்துலு “ஸ்கூல் மாஸ்டர்” படத்தை 1959-இல் மலையாளத்தில் எடுக்கும்போது முதலில் இயக்கும் வாய்ப்பைக் கொடுத்து அந்தப் படத்தின் மூலம் இவரை இயக்குநராக அறிமுகப்படுத்தினார். 1950-இல் தமிழ்நாட்டிற்கு வந்தவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கேயே வசித்து வந்தார். மரணமடையும் போது பெங்களூரில் இருந்தார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 35-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இதில் தமிழில் இருளும் ஒளியும், டீச்சரமா, சுடரும் சூறாவளியும் உள்ளிட்ட 3 படங்களும் அடங்கும். இருளும் ஒளியும், டீச்சரமா போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரைத் தேடிக் கொடுத்தன. தமிழ்ப் படங்களை நல்ல முறையில் இயக்கியிருந்தாலும், இங்கே வரவேற்புக் குறைய ஆரம்பித்ததும், கன்னடத்தில் புகுந்துவிட்டார். இவருக்கென்று சில கொள்கைகள் உண்டு. அதன்படிதான் படத்தை எடுக்கவேண்டும் என்று நினைப்பார். இதற்கு தமிழ்ப்படவுலகம் ஒத்துவரவில்லை. இதற்கு கன்னடப் படத்துறை கை கொடுத்தது. சத்யஜித்ரேக்கு எப்படி அந்த மக்கள் முன் மதிப்பு இருக்கிறதோ, அப்படி கன்னட மக்களிடம் இவருக்கு மதிப்பிருந்தது.
இருளும் ஒளியும் படம் செய்தபோது பாரதிராஜா இவரிடம் வாய்ப்பு கேட்டார். இவரும் கூட இருந்து செய்யும்படி இவரும் கூறவே இருளும் ஒளியும் படத்தில் பாரதிராஜாவும் வேலை செய்தார். இவர்கிட்டே உதவியாளராக இருந்தவர் பின்னர் பெரிய இயக்குநராக ஆனார்.
ரஜினிகாந்த் இன்றைக்கு இவ்வளவு பெரிய உச்ச நட்சத்திரமாக இருப்பதற்கு ஒரு வகையில் இவரும் காரணம். பெங்களூரில் தேர்வுக்குழுவில் இவர் இருந்த சமயத்தில், ரஜினிகாந்தும், அசோக் என்பவரும் விண்ணப்பித்திருந்தார்கள். இவர் ரஜினிகாந்தைத் தேர்வு செய்து சென்னைக்கு அனுப்பி வைத்தார். ‘கதா சங்கமம்’ என்ற படத்தில் ரஜினி முதன் முதலாக நடித்தார். பின்னர் தமிழில் கே.பாலசந்தர் வாய்ப்பு கொடுத்தார்.
மைசூரிக்கு அருகிலுள்ள காவேரிக்கனகாலு என்ற ஊரில் பிறந்த புட்டண்ணா கனகல் ராமசாமி, சுப்பம்மா பெற்றோர்களின் அன்பு மகன்.
இவர் தனது 51-ஆவது வயதில் 5.7.1985 அன்று பெங்களூரில் காலமானார்.
சினிமா எக்ஸ்பிரஸ் 15.6.1982 இதழிலிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது.
No comments:
Post a Comment