Wednesday 4 December 2019

REMEMBER DECEMBER 3-BHOPAL GAS TRAGEDY





நினைவிருக்கிறதா..?
1984-டிசம்பர் 3-ம் தேதி...!!!

போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி.
போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார்.
அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார்.
எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது
நோக்கம்.
ஆனால், அந்த ரயில் ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை ரயில் வந்தது.
அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள். ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம்
இறந்தார்கள்.
கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக் காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது.
பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக்
கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார். அவரை ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று தகவல் அனுப்பத் தொடங்கினார்.
அதையும் மீறி வரும் ரயில்கள் ஜன்னலை மூடிக் கொண்டு போபால் ஸ்டேஷனில் நிற்காமல் வேகமாகப் போய் விடுமாறு
அறிவுறுத்தினார்.
மூக்கிலும் வாயிலும் வழிந்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டு, இரவு முழுவதும்  விழித்திருந்து வேலை பார்த்தார். அந்த இரவு விடிந்தது.
அடுத்த நாள் சிக்னல் அறையைத் திறந்தபோது, ஸ்டேஷன் மாஸ்டர் துருவே வாயில் ரத்தம் வழிந்த நிலையில் சிக்னல் அனுப்பும் கருவியை ஒரு கையால் பிடித்தபடி செத்துக் கிடந்தார்.
துருவே மட்டும் இல்லை எனில், போபால் விஷ வாயுக் கசிவின் மரண எண்ணிக்கை இன்னும் சில ஆயிரங்கள் கூடியிருக்கும்.
ஆனால்,போபால் நகரத்தில் விஷவாயு கசிந்த அந்த இரவில் மாநில முதல்வர் அர்ஜுன் சிங்,நகரில் இருந்து 14 கி.மீ ஓடோடிச் சென்று தப்பித்தார்.
’துருவே’ போன்ற தேச வீரர்களின் தியாகம் ஏனோ அங்கீகரிக்கப் படுவதும் இல்லை. மக்களுக்கு ஞாபகம் இருப்பதும ் இல்லை.
பகிரவாவது செய்வோம்.

போபால் பேரழிவு அல்லது போபால் துன்பம் டிசம்பர் 3, 1984 ல் இந்தியாவில் உள்ள போபாலில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வளிமக் கசிவினால் (வாயுக் கசிவினால்) ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை நினைவுகூறும் ஒரு துன்ப நிகழ்வாகும்.

யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் மீத்தைல் ஐசோ சயனேட் எனும் நச்சு வளிமம் கசிந்ததினால் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். உடனடி உயிரிழப்பாக ஏறத்தாழ 2,259 பேர் நச்சு வளிமம் தாக்கி இறந்தனர். அதற்கடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 8,000 பேர் இறந்தனர். இன்னும் 8,000 பேர் வளிமத்தின் தாக்கத்தினால் ஏற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். போப்பால் பேரழிவு உலகில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்பட்ட பேரழிவுகளில் மிக அதிகப் பாதிப்பை ஏற்படுத்திய பேரழிவாகக் கருதப்படுகிறது. இதனால் அங்குள்ள பாதிப்புகளை ஆராய 1993 ஆம் ஆண்டு அனைத்து நாடு மருத்துவக்குழு ஆணையம் இங்கு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வுக்குக் காரணமான யூனியன் கார்பைடு இந்தியா லிமிடட் என்ற நிறுவனம் 51% உரிமையுடன் 1969 ல் போப்பாலில் நிறுவப்பட்டதாகும். இதன் உரிமை யூனியன் கார்பைடு கார்ப்பொரேசனுக்கு சொந்தமானதாகும். இதன் 49% உரிமை இந்திய நிர்வாகத்திற்குச் சொந்தமானதாகும். இந்நிறுவனத்தின் முக்கிய குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய முதன்மை செயல் அதிகாரி வாரன் அண்டர்சன் இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். விபத்து நடந்தபின் இந்தியாவில் வைத்துக் கைது செய்யப்பட்ட வாரன் அண்டர்சன், அப்போதைய அரசியல் தலையீடுகளால் இந்தியாவை விட்டு கௌரவத்தோடு விமானத்தில் ஏற்றி அவரது தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.[1] பிணையம் பெற்று வெளிவந்த அண்டர்சன் அமெரிக்காவிற்கு திரும்பிய பின் மீண்டும் இந்தியா வர மறுத்தார். அமெரிக்கக் குடிமகனான ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க அரசு மறுத்து வந்தது.செப்டம்பர் 29, 2014 அன்று அமெரிக்காவில் இவர் இறந்தார்.[2]

இந்நிகழ்வுக்குக் காரணமானவர்களை தண்டிக்கக் கோரியும், போதுமான நட்ட ஈடு வழங்கக் கோரியும் தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

27 ஆண்டுகளுக்குப் பின்னும் இழப்பீடு கிடைக்கவில்லை
போபால் நகர மக்கள் தம் நகரத்தில் 27 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பேரழிவை 2011, டிசம்பர் 3ஆம் நாள் நினைவுகூர்ந்தார்கள். நச்சுவாயுக் கசிவின் காரணமாக நேரடியாகத் தாக்கப்பட்டு உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 3,787 என்று அதிகாரப்பூர்வமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு, வெவ்வேறு நோய்களுக்கு ஆளாகி இறந்தவர்கள் பல்லாயிரக் கணக்கினர் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2006இல் அரசு வெளியிட்ட தகவல்படி, 5,58,125 பேர் நச்சுவாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டனர். அவர்களுள் 3,900 பேர் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயினர்.

நச்சுவாயுக் கசிவின் காரணமாகச் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, மாற்றுச் சிறுநீரகம் பெற ஏற்பாடு செய்வோருக்கு உதவித் தொகையாக இரண்டு இலட்சம் ரூபா கொடுக்கப்படும் என்று உள்நாட்டு அமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்திருந்தார். அதை நம்பி மாற்றுச் சிறுநீரகம் பெற ஏற்பாடு செய்தவர்களுக்கு இன்னும் அந்த உதவி கிடைக்கவில்லை. மத்தியப் பிரதேச மாநில அரசு கணிப்புப்படி, 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் நச்சுவாயுவால் பாதிக்கப்பட்டு, புற்று நோய்க்கும் சிறுநீரக முழுச்செயலிழப்புக்கும் (total renal failure = TRF) ஆளாகி, இழப்பீடு கோரி மனுக்கொடுத்துள்ளனர். அந்த மனுக்கள் எல்லாம் நேர்மையான கோரிக்கைகளே. அப்படியிருக்க, 2000 புற்றுநோய் மனுக்கள், 1000 சிறுநீரக முழுச்செயலிழப்பு மனுக்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டதாக அமைச்சர்கள் கூறியுள்ளனர்.[3]

இழப்பீடு கொடுக்க மறுப்பு
யூனியன் கார்பைடு நிறுவனமும் அதை வாங்கிய டோ கெமிக்கல்ஸ் என்னும் நிறுவனமும் நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருத்தமான இழப்பீடு கொடுக்க மறுத்துவருகின்றன.[4] முதலில் நீதிமன்றம் விதித்த 750 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கொடுக்கமுடியாது என்பது அவர்கள் நிலைப்பாடு. அதற்கு எதிராக 7,700 கோடி ரூபா இழப்பீடு கொடுக்கவேண்டும் என்று இந்திய அரசு தரப்பில் வாதாடப்படுகிறது. 1989இல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை 3,000 சாவுகள், 20,000 பேர் கடினமாகப் பாதிக்கப்பட்டவர்கள், 50,000 பேர் குறைந்த அளவு பாதிக்கப்பட்டவர்கள் என்று இடப்பட்ட கணக்கின் அடிப்படையில் வழங்கப்பட்டது. ஆனால், தற்போதைய கணக்குப்படி, நச்சுவாயுக் கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,295. கடுமையாகப் பாதிக்கப்பட்டோர் 35,000 பேர். குறைந்த அளவு பாதிக்கப்பட்டோர் 5.27 இலட்சம் பேர்.

எனவே, இழப்பீட்டுத் தொகையாக 7,700 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று இந்திய அரசு கோருகிறது. இந்த உதவி என்று கிடைக்குமோ என்று காத்திருக்கின்றனர் போபால் மக்கள்.[5]

தூய குடிநீர் வழங்க உச்ச நீதி மன்றம் ஆணை
2012ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்திய உச்ச நீதி மன்றம் மத்தியப் பிரதேச அரசுக்கு மூன்று மாத கெடு கொடுத்து, போப்பால் நகரில் நச்சு வாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டு சுத்த குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்ற 18 குடியேற்றப் பகுதிகளுக்கு சுத்த நீர் குழாய் இணைப்புகள் வழங்கும்படி உத்தரவிட்டது.[6] போப்பால் பேரழிவு நடந்து 30 ஆண்டுகளாக மாசடைந்த நீரையே குடிக்கும் கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

நெடு நாளைய பிரச்சினை
போப்பால் யூனியன் கார்பைடு ஆலையில் நச்சு வாயு வெளிப்பட்டதால் ஏற்பட்ட பேரழிவு நிகழ்வதற்கு முன்னரே நிலத்து அடி நீர் மாசடையத் தொடங்கிவிட்டிருந்தது. ஆலையிலிருந்து வழக்கமாக வெளியான கழிவுநீரில் நச்சுக் கலந்த வேதிப்பொருள்கள் அடங்கியிருந்ததால் அந்த இடர்ப்பாடு ஏற்பட்டிருந்தது.

2005ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம் போப்பால் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குத் தூய குடிநீர் வழங்க மாநில அரசும் நகர ஆட்சியாளரும் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவு செயல்படுத்தப்படாமலே கிடப்பில் போடப்பட்டது.

மக்களுக்கு வழங்கப்படுகின்ற குடிநீர் இன்றுகூட மஞ்சள் நிறம் கொண்டு, வழக்கமான குடிநீரின் சுவை இன்றி சப்பென்று உள்ளது. இதனால் மக்களின் நலம் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகின்றது.

யூனியன் கார்பைடிடம் இருந்து தொழிலகத்தை வாங்கிய டோ கெமிக்கல்சு நிறுவனம் நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுக்க தனக்குப் பொறுப்பில்லை என்று கூறிவருகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படைத் தேவையான தூய நீரும், நச்சு கலவாத சூழலும் கிடைக்குமாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் ஆணை பிறப்பித்தது. அந்த ஆணை செயலாக்கம் பெறுகிறதா என்று கண்காணித்து 2012 ஆகத்து 13ஆம் நாள் அறிக்கை வழங்குமாறு பணித்து ஒரு குழுவையும் நீதி மன்றம் அமைத்தது.[7]

ஆபத்தான கழிவுப் பொருள்கள்
போப்பால் பேரழிவால் எழுந்த நச்சுக் கழிவுப் பொருள்கள் மூடப்பட்ட யூனியன் கார்பைடு தளத்தில் இன்றளவும் குவிந்து கிடக்கின்றன. அவற்றின் அளவு 350 டன் என்று கணிக்கப்பட்டுள்ளது. இக்கழிவுப் பொருள்களை இந்தியாவிலேயே புதைக்காமல், செருமனியின் ஹாம்பர்க் நகருக்குக் கொண்டுசெல்ல ஒரு செருமானிய நிறுவனம் முன்வந்த போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த விபத்து நடந்து ஏறக்குறைய மூன்று பத்தாண்டுகளுக்குப்பின் ஜூலை 3, 2012 இல் இந்திய நடுவண் அமைச்சரவை, அங்கு தேங்கிக் கிடக்கும் 350 டன்கள் நச்சுக் கழிவுப் பொருளைப் பாதுகாப்பாக, வான்வழியாக செருமானிய நிறுவனத்தின் (GIZ) மூலம் அகற்றுவதற்கும் அதற்கான செலவு 25 கோடி ரூபாய்க்கும் ஒப்புதல் அளித்தது.[8] இது ஓராண்டு காலத்துக்குள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் முடிவானது. ஆகஸ்டு 9, 2012 அன்று, இக்கழிவுகளை 6 மாதங்களுக்குள் அகற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நடுவண் அரசுக்கும் மத்தியப் பிரதேச மாநில அரசுக்கும் உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.[9] செப்டம்பர் 17, 2012 இல் அந்த செருமானிய நிறுவனம் இக்கழிவுகளை அகற்ற மறுத்து விட்டது.[10]

இந்தியாவிலிருந்து நச்சுத்தன்மை கொண்ட கழிவுகளை செருமனிக்குக் கொண்டுசென்று புதைத்தால் செருமானிய மக்கள் அதனால் பாதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களது உடல்நலம் கருதி நச்சுப் பொருள்களைக் கொண்டுசெல்லக் கூடாது என்றும் செருமானிய பத்திரிகைகள் பரப்புரை செய்தன.

இந்தியாவுக்குள்ளும் போப்பால் கழிவுகளைத் தம் பகுதியில் புதைக்கக் கூடாது என்று மாநில அரசுகள் கூறிவருகின்றன.




கலப்படமில்லாத உணவு என்று தாய்ப்பாலை சொல்வார்கள். இயற்கையின் அந்தக் கொடையையும் விஷமாக்கிய அந்தக் கொடூரம் இந்தியாவில் அரங்கேறி, சரியாக 32 ஆண்டுகள் ஆகின்றன.  ஆம், உலகின் சுற்றுச்சூழல் சீர்கேடு அழிவிற்கு மிகப்பெரும் மரண சாட்சியான போபால் விஷவாயு விபத்துதான் அது.

இருபதாம் நூற்றாண்டின் கொடும் விபத்தான போபால் விஷவாயு கசிவு, உலகின் மோசமான பேரழிவு நிகழ்வுகளில் இன்றளவும் முதலிடத்தில் இருக்கிறது. 1984 டிசம்பர் 2 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபால்  நகரத்தின் வீதி விளக்குகள் மின்னத்துவங்க, மக்கள் தங்கள் வீடுகளின் விளக்குகளை அணைத்துவிட்டு உறங்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர். 900,000 மக்கள் வசித்துவரும் அந்த நகரம், சிறப்பானதொரு தொழிற் நகரமும் கூட.  

அதற்கு 4 வருடங்களுக்கு முன்புதான், அமெரிக்காவை சேர்ந்த யூனியன் கார்பைடு கழகத்தின் உதவியால் பூச்சிக்கொல்லி  தயாரிக்கும் [Pesticide]​ ​ரசாயனக் கூடம் ஒன்று நிறுவப்பட்டிருந்தது. இரவின் உறக்கத்தினிடையே அந்த நிறுவனம் வழக்கமான தனது இரவுப்பணியை துவக்கியிருந்தது. இரவு 9:30 மணிக்கு இரண்டாம் ஷிப்ட் அதிகாரியின் உத்தரவுப்படி, பணிகள் நடந்துகொண்டிருந்தன.

போபால் கூடத்தில் 15,000 காலன் கொள்ளளவு கொண்ட E610, E611, E619 என்ற மூன்று மிக் கலன்களில் இரண்டில்தான் எப்போதும் மிக் திரவம் இருக்க வேண்டும். ஒரு கலன் அவசியம் காலியாய் இருக்க வேண்டும்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக அன்று மூன்று கலன்களிலும் மிக் நிரப்பப்பட்டிருந்தது. பணியாளர் ஒருவர் E610 அடையாளமிட்ட மிக் கலனை இணைக்கும் வால்வை மட்டும் மூடி, நீரைச் செலுத்தினார். பராமரிப்புப் பணியில் வாடிக்கையாகப் பைப்பைக் கழுவப் பயன் படுத்திய நீர் எதிர்பாராதவாறு, 13000 காலன் மிக் நிரப்பப்பட்ட  E610 கலனில் தெறித்து கொட்டியது. மிகச்சிறிய கவனக்குறைவு, உலகையே அச்சுறுத்திய பேரழிவாக மாறித்தொடங்கியது அந்த நிமிடத்திலிருந்துதான். 

மிக் ரசாயனம் மிகவும் வீரியமானது. கொடிய நச்சுத்தன்மைகொண்ட இது நீருடன் கலந்தால் தீவிர வெப்பத்தை வெளியாக்கும் தன்மை கொண்டது. மொத்தத்தில் மிக்,  'மரண மூட்டும் விஷ ரசாயனம் ' என்கிறது வேதியியல் நூல் ஒன்று. எப்போதாவது இப்படி வால்வுகளில் கசிவு நிகழும்போது பாதுகாப்பு நடவடிக்கையாக வட்டத் தட்டை இடையில் நுழைத்து [Isolation with Blind Flange] கலன் தனித்து விடப்பட வேண்டும். ஊழியருக்கு அது நன்கு பயிற்சியளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்று பணியாளர் கவனக்குறைவாக தட்டை அமைத்துக் கலனைத் தனித்து விடவில்லை. கண்காணிப்பு அதிகாரிகளின் கவனத்திற்கும் இது வரவில்லை. பைப்பைக் கழுவ நீர் திறக்கப்பட்டு செலுத்தப்பட்டது.
நரகமான ஒரு நகரம்.... மறக்க முடியுமா போபால் விஷவாயுக் கசிவு நிகழ்வை? #WhereIsMyGreenWorld?

கொஞ்ச நேரத்தில் மிக் கலனின் அழுத்தம் 2 psi ஐ தொட்டுநின்றது. 11 மணிக்கு இரவு ஷிப்ட் குழு வந்தபோது அழுத்தம் 10 psi ஆகக் கலனில் ஏறியிருந்தது. அழுத்தமானியின் எச்சரிக்கையைக்கூட இரவுப்பணி அதிகாரி அலட்டிக்கொள்ளவில்லை. இன்னும் சில மணித்துளிகளில் உலகை உலுக்கிப்போடப்போகும் விபத்தை தடுத்து நிறுத்த கிடைத்த கடைசி சந்தர்ப்பத்தை அந்த கணத்தில் தவறவிட்டார் அந்த அதிகாரி. 12:40 நள்ளிரவில் அழுத்தம் 40 psi என உச்ச நிலையை அடைந்திருந்தது. தாங்கமுடியாத அழுத்தத்தால் கலன் உப்பி உடைய ஆரம்பித்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது சரியாக இரவு மணி 12:45.

கலனின் உஷ்ணம் கூடியிருந்ததை கண்ட அவர்,  நடக்கவிருக்கும் விபரீதத்தை ஓரளவு யூகித்துக்கொண்டார். விடுவிடுவென முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மற்ற பணியாளர்களை ஆயத்தப்படுத்துவங்கினார். ஆனால் எல்லோரும் கண்களை கசக்கியபடி ஏதும் செய்யமுடியாதவர்களாக இருந்தனர். அதற்குள் விஷ வாயு கட்டுப்படுத்த முடியாத நிலையில் காட்டுத் தீ போல் பரவியது. அங்கிருந்த 120 அடி உயரப் புகைபோக்கியில் மேல் மட்டத்தில் வாயு பிதுங்கி வெளியேறியது. யோசிக்க நேரமின்றி அதிகாரிகள் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

காட்டு வெள்ளமாய் கட்டுப்படுத்தமுடியாமல் கிளம்பிய அதன் மீது நீரை பீய்ச்சி அடித்தும்,  மீறிக் கொண்டு வானில் மிதந்தது மிக் வாயு. காற்றைவிடக் கனமானது என்பதால் கொஞ்சநேரத்தில்  காற்றின் தாக்கத்தினால் தாழ்ந்து தரை மட்டத்தில் பரவ ஆரம்பித்தது வாயு. 1:30 மணிக்கு அபாய சங்கு இயக்கப்பட்டது. சில நிமிடங்களில் போபால் மரண நகரமானது. ஆயிரக்கணக்கானோர் உறக்கத்திலேயே உயிர் துறந்தனர். விழித்துக்கொண்ட சிலரும் கண்ணெரிச்சல், நெஞ்செரிச்சல் என உடல் உபாதைகளுடன் கொஞ்சநேரத்தில் தெருவிலேயே சுருண்டு விழுந்து இறந்தனர். மருத்துமனைகள் நிரம்பி, விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் தெருவில் கிடத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர்.
நரகமான ஒரு நகரம்.... மறக்க முடியுமா போபால் விஷவாயுக் கசிவு நிகழ்வை? #WhereIsMyGreenWorld?


தங்களுக்கு நேர்ந்தது என்னவென்று அறியாமலேயே ஆயிரக் கணக்கானோர் மாண்டனர். உலகின் மோசமான ரசாயன விபத்து என வரலாற்றில் இடம்பெற்றது போபால் சம்பவம். போபால் சம்பவம் நடந்து கிட்டதட்ட 32 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் ஏற்பட்ட பாதிப்பின் பின்விளைவுகளும் சோகமும் இன்றளவும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. விசாரணையில்,  போபால் நிறுவனத்திலிருந்து வெளியேறி மக்களைக் கொன்றது 40 டன் மிக் விஷ வாயு என கணக்கிடப்பட்டது.

பாதிப்பின் சோகம் தொடர்ந்ததற்கு காரணம் மண்ணிலும் காற்றிலும் தேங்கிய மிக் விஷவாயு. மிக் வாயு நாம் சுவாசிக்கும் காற்றை விடக் கனமானதால், அது மேல்நோக்கி செல்லாமல் முழுவதும் தளப்பரப்பை நோக்கியே வழிந்து தேங்கியதாலேயே அது மனிதர்களுக்கு பெரும் நாசத்தை விளைவிக்க காரணமானது. வாயு வெளியேறிய நான்கு மணி நேரத்தில், தன் கொடூரத்தை அரங்கேற்றி முடித்தது மிக் வாயு.

தூக்கத்தில் இறந்தவர்கள் 4000 பேர், Fibrosis, Brochial Asthma, Chronic Obstructive Airways Disease, Emphysema, Recurrent Chest Infections, Pulmonary Tuberculosis என இன்று வரை உடல் உறுப்புகளை இழந்து தவிப்பவர்கள் மற்றும் நிரந்தர நோயாளிகள் 400,000 பேர் என்கிறது இந்த விபத்து குறித்த ஒரு அறிக்கை.  நாளாக நாளாக தங்கள் பார்வையை இழந்தவர்கள் பெரும்பாலோனோர். வாயு தாக்கத்தினால் அப்பகுதியில் இருந்த கர்ப்பிணிகளுக்கு குழந்தை இறந்து பிறந்தது. பலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அடுத்தடுத்த வருடங்கள் உடல்குறைபாடுகளுடனேயே பிறந்தன குழந்தைகள்.
நரகமான ஒரு நகரம்.... மறக்க முடியுமா போபால் விஷவாயுக் கசிவு நிகழ்வை? #WhereIsMyGreenWorld?
உலகின் மாசற்ற உணவு என்கிற தாய்ப்பாலையும் மிக் வாயு விட்டுவைக்கவில்லை. ரசாயனக் கூடத்தின் அருகில் வாழ்ந்த பெண்களின் தாய்ப்பாலில் பாதரசம், ஈயம், ஆர்கனோ குளோரின் (Mercury, Lead, Organo-Chlorines] இருந்ததாக, 2002 பிப்ரவரி கிரீன்பீஸ் அறிக்கை [Greepeace Report] ஒன்று அதிர்ச்சி தகவலை கூறியது. போபால் விபத்து சுற்றுச்சூழல் பேரழிவை மட்டுல்ல, அரசு இயந்திரத்தின் அவலட்சணத்தையும் உலகிற்கு சொன்னது அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் மூலம். போதிய மருத்துவமனைகள் இன்றி, மருத்துவக் கண்காணிப்புகள் இன்றி, பாதிக்கப்பட்டோர் நஷ்ட ஈடு பெற வழிகாட்டுதல்கள் இன்றி, நிதி உதவி கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டனர்.

நரகமான ஒரு நகரம்.... மறக்க முடியுமா போபால் விஷவாயுக் கசிவு நிகழ்வை? #WhereIsMyGreenWorld?
பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படியாக பெற்றுத்தரவேண்டிய நீதியைக்கூட அரசு அலட்சியம் செய்தது. இந்தியா நெருக்கடி நிலையில் தத்தளித்த ஒருநாளில்தான் யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு (அக்டோபர் 31, 1975) அனுமதி வழங்கப்பட்டது. அரசியல் தலையீடு மற்றும் அரசு இயந்திரம் ஸ்தம்பித்த ஒருநாளில், விதிகளை மீறி வழங்கப்பட்ட இந்த அனுமதி லட்சக்கணக்கான உயிர்களின் விதியோடு விளையாடி முடிந்தது.


போபால் விஷ வாயுக் கசிவு மாபெரும் மனிதத் தவறுகளாலும், முக்கிய பாதுகாப்பு இயந்திரங்கள் இயங்காமல் பராமரிப்பில் முடங்கியதாலும் ஏற்பட்டதென பின்னாளில் விசாரணையில் தெரியவந்தது. 
செய்யும் பணி குறித்த அறிவற்ற பணியாள் ஒருவனின் அஜாக்கிரதை, முடங்கிக் கிடந்த இயந்திரங்கள், பணிகளை முறைப்படுத்தவேண்டிய கண்காணிப்பாளரின் அசட்டை, ஆபத்து கால தீவிர அபாய சங்கு ஒலி வழக்கமாக முறையிலேயே ஒலித்ததால் மக்கள் காட்டிய அலட்சியம், படிப்பறிவற்ற வேலையாட்கள் போதிய பாதுகாப்பு அம்சங்களை தெரிந்துகொள்ளாதிருந்தது போன்றவை போபால் விபத்துக்கு காரணமானது. போபால் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளின் முழுப் பொறுப்பையும் யூனியன் கார்பைடு நிறுவனம் ஏற்றுக் கொண்டது.

அனைத்து பாதிப்புகளுக்குமாக சுமார் 500,000 பேர் நஷ்ட ஈடு பெற தகுதியுடையவர்கள் என கணக்கிடப் பட்டது. 1989 பிப்ரவரி 24 ம் தேதி, யூனியன் கார்பைடு நிர்வாகம் 470 மில்லியன் டாலர்களை இந்திய அரசிடம் ஒப்படைத்தது. இதன்பின்னணியில் இருந்த அரசியல் பின்னாளில்தான் தெரியவந்தது. ஆம்  இந்த வழக்கின் குற்றவாளியான வாரண் ஆண்டர்சன் வசதியாக தன் நாட்டுக்கு தப்பிச்செல்ல, அப்போதைய மத்திய அரசு உதவி செய்திருந்தது.
நரகமான ஒரு நகரம்.... மறக்க முடியுமா போபால் விஷவாயுக் கசிவு நிகழ்வை? #WhereIsMyGreenWorld?


 உயர் நீதிமன்ற உத்தரவின்படி, போபால் மக்களை நிரந்தரமாக பராமரித்து சிகிச்சையளிக்க யூனியன் கார்பைடு 1991 அக்டோபரில்,  17 மில்லியன் டாலர் செலவில் ஒரு மருத்துவமனையை போபாலில் கட்ட ஒப்புக் கொண்டது. வழக்கு விசாரணை நீண்ட காலம் எடுத்துக்கொண்டது. இது தொடர்பாக 1996 ல் நீதிபதி அஹமதி வழங்கி தீர்ப்பு மூலம், போபால் விஷயவாயு வழக்கு கொலைப் பாதகச் செயலுக்கான தண்டனையிலிருந்து சாதாரண கவனக்குறைவால் ஏற்படும் பிரிவின் கீழ் மாற்றப்பட்டது. 
வழக்கு விசாரணைக்காக 2002 ஆகஸ்டு மாதம்  போபால் நீதிமன்றம், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான வாரன் ஆன்டர்ஸனை குற்ற விசாரணைக்கு ஆஜராக வாரண்ட் பிறப்பித்தது. நீதிமன்றம் ஆண்டர்சனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. தகவலறிந்த வாரன் ஆன்டர்ஸன்,  தன் அமெரிக்க இல்லத்திலிருந்து தலைமறைவானார். இறுதிவரை வாரன் ஆண்டர்சனை நீதிமன்றத்தின் முன் நிறுத்த மத்திய அரசு முன்வரவில்லை. இடையில் ஆண்டர்சன் இருக்கும் இடத்தை உள்துறை மோப்பம் பிடித்த பின்னும் அது கிடப்பில் போடப்பட்டது.

நரகமான ஒரு நகரம்.... மறக்க முடியுமா போபால் விஷவாயுக் கசிவு நிகழ்வை? #WhereIsMyGreenWorld?

இந்தியாவை உலுக்கிய இந்த கோர படுகொலைக் குற்றத்தை,  நிர்வாகப் புறக்கணிப்பு என அறிவித்து மெளனமாய் இருந்து விட்டது.  நிவாரண உதவிகளும் அவர்களுக்கு முறையாக சென்று சேரவில்லை. ஆனால் கொடுமை என்னவென்றால் இன்றளவும் இதன் தாக்கம் அந்த மண்ணில் எதிரொலித்தபடியே இருக்கிறது.

இதற்காக இந்திய அரசு, ஒவ்வொரு மாநிலத்திடமும் கோரிக்கை வைத்தது. முதலில் ஒப்புக்கொண்ட குஜராத் அரசு,  அம்மாநில மக்களின் போராட்டத்தால் இடம்தர மறுத்து விட்டது. நாக்பூரில் அனுமதி கேட்கப்பட்டு அங்கும் மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இன்றுவரை இந்த பிரச்னை தொடர்கிறது.
இந்நிலையில் மிகப்பெரும் படுகொலை நிகழ்த்திய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் ஆண்டர்சன், வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையிலேயே தேடப்படும் குற்றவாளியாகவே தன் நாட்டில் மரணமடைந்தார்.
நரகமான ஒரு நகரம்.... மறக்க முடியுமா போபால் விஷவாயுக் கசிவு நிகழ்வை? 


மக்களின் மீதான இந்திய அரசுகளின் அலட்சியம், வளைவு நெளிவுகளோடு உறுதியற்ற இந்திய சட்ட நெறிமுறைகள், ஆளும் வர்க்கம் முதலாளி வர்க்கத்தோடு கைகோர்த்துக்கொண்ட போலி ஜனநாயகம் ஆகிய மூன்றின் சாட்சியாக இந்திய வரைபடத்தில் ரத்தக்கறையுடன் போபால் நகரம் காட்சியளிக்கிறது.




(நமது நாட்டு இன்றைய அரசின் வர்க்கத் தன்மையை அறிய போபால் விஷ வாயு பேரழிவை ஒட்டி மைய அரசும், அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் உச்ச நீதிமன் றமும் இப்பிரச்சனையை கையாண்ட விதம், அரசாங்க ரகசியச் சட்டத்தின் மூலம் உண்மையை மக்களை அறிய விடாமல் தடுத்த விதம் சரியான எடுத்துக்காட்டாகும்.  கீழ்கோர்ட் தீர்ப்புக்களை மேல் கோர்ட் திருத்தி பெரு முதலாளிகளின் அந்நிய கூட்டாளியைக் காப்பாற்றியது கிரிமினல் செக்ஷன்களை  திருத்தியது, இவை யெல்லாம் அமைச்சரவையும், உச்சநீதிமன்றமும் இசைவாக செயல்படாமல் நடக்காது. அதனை இக்கட்டுரை சிறப்பாக காட்டுகிறது.)

– ஆசிரியர் குழு –

டிசம்பர் 3, 1984 போபால் நகரம் மரண ஓலத்தோடு விடியலை சந்தித்தது. நள்ளிரவில் பரவிய நச்சுப் புகை, அரசின் கணக்கின் படி 2500 பேரை பலிவாங்கியது. ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்றுவரை 20,000 பேர் உயிரிழந்தனர் என்று அறிக்கை கொடுத்திருக்கிறது. பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலையிலிருந்து வெளியான நச்சுப் புகை மண்டலம் அந்தப் பேரழிவினை கொண்டு வந்தது. 9 லட்சம் மக்களைக் கொண்ட நகரத்தில் 6 லட்சம் மக்கள் பாதிப்புக்கு உள்ளா னார்கள்; நிலத்தின் தாவரங்கள், புல், பூண்டு நிலத்தடி நீர் யாவும் மனித நுகர்தலுக்கு பயனற்றதாக மாறிப் போய்விட்டன. மனித குலத்தின் மனசாட்சியினையே கலங்க வைத்த மனித இனப்படுகொலை. இதற்கு பொறுப்பானவர்கள் யார்? இது எப்படி நடந்தது? மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அரசு இதை எப்படி சந்தித்தது? பாதிக்கப்பட்ட மக்களின் நிலை என்ன? தொடர்ச்சியாக எழுந்த இந்த கேள்விகளுக்கு விடை காணும் முயற்சிகள் கூட தொடர்கின்றன.


அந்த பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலை யூனியன் கார்பைட் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்த மானது; ஆனால் இதன் 50.9 சதவிகிதம் பங்குகளை அமெரிக் காவைச் சேர்ந்த யூனியன் கார்பைட் கார்ப்பரேஷன் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் கையில் இருந்தது. ஆலையில் அடி நிலத்தில் கட்டப்பட்ட தொட்டியில் சேகரித்து வைக்கப்பட்ட 41 டன் மீதேன் ஐசோசையனேட் (ஆநவாலட-ஐளடிஉலயnவைந- ஆஐஊ) என்ற பொருள் வேதியல் மாற்றம் பெற்று விரைந்து ஆவியாகி நச்சுத் தன்மையுடன் கசிந்து வெளியேறியதால் ஏற்பட்ட சோக நிகழ்வு தான் அது.

எப்படி நிகழ்ந்தது?

டிசம்பர் 2, 1984 அன்று இரவு சுமார் 11.30 மணிக்கு ஆஐஊ சேகரித்து வைக்கப்பட்ட தொட்டியிலிருந்து புகை கசிவு வெளிப்பட்டது. அப்போது அருகில் பணியில் இருந்தவர்கள் தங்களின் கண்கள் எரிச்சலடைவதிலிருந்து அந்த நச்சுப் புகை பரவியிருப்பதை உணர்ந்தார்கள்; கசிவு வரும் இடத்தில் நீர் தெளிக்க வேண்டும் என மேலதிகாரிகளால் உத்தரவிடப்பட்டது. இரவு 12-15 மணியளவில் தொட்டியில் அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வகையில் வைக்கப்பட்ட மூடி அழுத்தம் தாங்காது வெடித்தது; பாதுகாப்பு அடைப்புத்தாள்
திறக்கப்பட்டது. ஆனால் நச்சுப் புகை மண்டலம் வேகமாக பரவத் துவங்கியது. குவிந்திருந்த ஆஐஊ  மீது தண்ணீர் வீசி அதன் வீரியத்தை தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது; ஆனால் எந்த பகுதியிலிருந்து வாயு வெளிப்பட்டதோ அந்தப் பகுதிக்கு நீர் வீச்சு சென்றடைய வில்லை. இரவு 3 மணியளவில் எந்த தொட்டியிலிருந்து (தொட்டி எண் 610) வாயு வெளிவந்ததோ அது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட வரதராஜன் கமிட்டி தொட்டியில் அழுத்தம் உயர்ந்து வெப்பம் 200லிருந்து 350 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு அதிகமாகி யிருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தது. அதாவது இந்த வெப்பநிலையில் தொட்டியில் உள்ள ஆஐஊ  வேகமாக ஆவியாகி பரவிச் சென்றுள்ளது. இப்படி நிகழும் என்று அதிகாரிகளுக்கு தெரியாதா? நன்றாகத் தெரியும். ஆஐஊ மிகவும் கொடிய கொல்லும் தன்மை கொண்ட பொருள் என்பதும் அதிலிருந்து வெளிவரும் நச்சுத் தன்மையுடைய வேதியல் விளை பொருள் அருகில் வாழும் மக்களின் வாழ்நிலையினையும் சுற்றுப்புற சூழலையும் கடுமையாகப் பாதிக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆயிரக்கணக்கில் உயிர்களை பலிவாங்கும் முன்பே பல ஆண்டுகளாக 1977லிருந்தே போபால் நகரத்தின் அந்தப் பகுதியின் சுற்றுப்புறத்தில் நச்சுக் கழிவுப் பொருட்களை கொட்டி, மண்ணையும் நிலத்தடி நீரையும் மாசுபடுத்திய “பெருமையும்” யூனியன் கார்பைடு, இந்திய யூனியன் கார்பைடு நிறுவனங் களுக்கு உண்டு. அந்த நீரை பயன்படுத்திய மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சினை உட்கொண்ட மனிதர்களாக மாறிப் போனார்கள். இந்த இரண்டு நிறுவனங்களும் ஒன்று அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனம், மற்றொன்று அதன் இந்திய இணைப்பு – இந்த நாட்டு மக்களை மிகப்பெரிய கொடூரமான படுகொலைக்கு உட்படுத்தியுள்ளனர். இந்த குற்றத்திலிருந்து அவர்கள் தப்பிக்க முடியுமா?

ஆய்வறிக்கைகள் கூறுவதென்ன?

இந்த விபத்து நிகழ்ந்தவுடன் மத்திய அரசு, மத்தியப் பிரதேச மாநில அரசு மற்ற பல ஆய்வு நிறுவனங்கள் அதற்கான காரணங்களை கண்டறிய பல்வேறு குழுக்களை அமைத்தன. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வு கவுன்சிலைச் சேர்ந்த முனைவர் வரதராஜன் தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. டிசம்பர் 1985இல் வெளியிட்ட அக்குழுவின் அறிக்கையில் அந்த ஆலை வடிவமைக்கப்பட்டதில் குறைபாடு உள்ளதென்றும், செயல்பட்ட முறை சரியில்லை என்றும் குறிப்பிட்டதோடு, செய்ய வேண்டிய பல பணிகள் கைவிடப் பட்டன, சில பாதியிலே நிறுத்தப்பட்டு விட்டன எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

டில்லி அறிவியல் அமைப்பு (னுநடாi ளுஉநைnஉந குடிசரஅ) நடத்திய ஆய்வு குறிப்பிடத்தக்கதொன்றாகும். அந்த அமைப்பு தான் முதன்முதலாக இந்த விபத்து பற்றிய அறிக்கையை கொடுத்தது. அந்த அறிக்கையில், அமெரிக்க பன்னாட்டு யூனியன்  கார்பைடு நிறுவனம் போபால் ஆலையில் மிகவும் பழமையான, பாதுகாப்பு அளிப்பதில் நம்பிக்கை கொள்ள முடியாத இயந்திரங்களை பாதுகாப்பு அமைப்புக்குள் பொருத்தி வைத்திருந்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது; மிகவும் அதிர்ச்சியூட்டும் செய்தியாக அந்த அறிக்கை குறிப்பிட்டது யாதெனில், அந்த விபத்து நிகழ்வதற்கு முன்பாகவே தரமற்ற அந்த பாதுகாப்பு அமைப்புகள் சிக்கன நடவடிக்கையாகவும் பராமரிப்பு காரணங்களுக்காகவும் செயல்படுவதிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டன என்பது தான். எடுக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் நன்கு அனுபவம் வாய்ந்த திறமையான ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்து அனுபவமற்ற பயிற்சி ஏதுமில்லாதவர்களை மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டிய கேந்திரமான இடங்களில் பணியில் அமர்த்துவதில் முடிந்தது. மேலும் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா மாநிலத்தில் “இன்ஸ்டிடியூட்” ஆலையில் (யூனியன் கார்பைடின் அமெரிக்க ஆலை) கணினிமயமாக்கப்பட்ட துல்லியமாக கட்டுப்படுத்தும் அமைப்புகள் உள்ளன; ஆனால் போபால் ஆலையில் அது கிடையாது. 1966இல் துவக்கப்பட்ட இன்ஸ்டிடியூட் ஆலைக்கு கொடுக்கப்பட்ட நவீன பாதுகாப்பு அம்சங்கள் 1980-இல் உற்பத்தி துவங்கிய போபால் ஆலைக்கு இல்லை. மற்றொரு அம்சமும் இந்த ஆய்வின் மூலம் பின்பு தெரிந்தது. போபாலில் பாதுகாப்பு அமைப்புகள் சரியாக செயல்பட்டாலும் கூட இந்த விபத்தை தடுத்திருக்க முடியாது, ஏனெனில் அதிக வீரியத் தன்மை கொண்ட ஆஐஊ  போன்ற வேதிப் பொருளை சேமித்து வைப்பதற்கு பொருத்தமான வடிவங்களில் பாதுகாப்பு அமைப்புகள் இல்லை. அமெரிக்க ஆலையில் உள்ளது போல், விபத்து ஏற்பட்டால் உடனடியாக சுற்றுப் புறத்தில் வாழும் மக்களை எச்சரித்து அவர்களை வெளியேற்றும் ஏற்பாடு போபால் ஆலையில் இல்லை. போபால் ஆலையினை வடிவமைத்த யூனியன் கார்பைடின் இரட்டை நிலையினை இது தெளிவாகக் காட்டுகிறது.

விபத்தினை ஆய்வு செய்த யூனியன் கார்பைடு நிறுவனமே சில உண்மைகளை வெளிக் கொணர்ந்தது. விபத்துக்கான அறிகுறிகள் தோன்றும் போது, அடக்கி வைக்கப்பட்ட ஆஐஊ-ஐ வெளியேற்றி அழித்துவிடும் அமைப்பு அக்டோபர் 1984லிருந்து செயல்டபவில்லை; உயர் அழுத்தத்தை சமனப்படுத்தும் அமைப்பு விபத்து நடந்து தினத்தன்று செயல்படவில்லை; தொட்டியில் இருந்த ஆஐஊ-ன் வெப்ப அளவு 15-20 டிகிரி சென்டிகிரேட் என இருந்தது. ஆனால் இது 0 டிகிரி சென்டிகிரேடை தாண்டக் கூடாது; அதற்காக வைக்கப்பட்ட குளிர்விக்கும் அமைப்பு ஜூன், ‘84லிருந்து செயல்படவில்லை. இது தொடர்பான விதிமுறைகளை மீறி இந்த விபத்து நடந்த கால கட்டத்தில் 85 டன் ஆஐஊ சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. இது மிகவும் ஆபத்தானதொன்றாகும். தாய் நிறுவனமான அமெரிக்க யூனியன் கார்பைடும் தன் பொறுப்பிலிருந்து நழுவியிருக்கிறது. செப்டம்பர் 11, 1984 அன்றே பெரிய அளவில் சேமித்து வைக்கப்பட்ட ஆஐஊ  “விலகி ஓடும் எதிர்வினை” (சரயேறயல சநயஉவiடிn) ஆபத்தினை கொண்டிருக்கிறது என்ற எச்சரிக்கை கிடைத்தும், போபால் ஆலை நிர்வாகத்திற்கு அதை தெரிவிக்கவில்லை.

யூனியன் கார்பைட் தன்னுடைய ஆய்வறிக்கையை வெளியிட்ட பிறகு, அதன் துணைத் தலைவர்களில் ஒருவரான ஜாக்சன் பிரௌனிங், இதுபோன்ற துயரச் சம்பவம் அமெரிக்காவிலும் நிகழுமா என்று கேட்ட கேள்விக்கு “மிகவும் நம்பிக்கையோடு சொல்வோம். அது இங்கே நிகழாது”. என்று பதிலளித்தார். அமெரிக்க ஆலையில் உள்ள பாதுகாப்பு பற்றி அவ்வளவு நம்பிக்கை? இந்தியாவில் அவ்வித பாதுகாப்பு ஏதுமின்றி ஆயிரக்கணக்கில் மடிந்தார்கள் என்பதுதான் நம் சோக வரலாறு.

இது திடீரென்று நிகழ்ந்ததல்ல. இது நிகழும் என்று தெரிந்தவர்களின் சிக்கன சீரமைப்பு என்ற பெயரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சுருக்கியது. தரக்குறைவான உதிரிபாகங்கள், கட்டுப்பாடுகள் தளர்வு, விதிமீறல்கள், லாப நோக்கமும் வேறு ராணுவ அரசியல் நோக்கங்கள்(எம்.ஐ..சி என்ற விஷ வாயு ரசாயன ஆயுதமாக பயன்படுத்த முடியும்.இல்லை யென்றால் அமெரிக்க ஜனாதிபதி தலையிட்டிருக்கமாட்டார்)  இதற்கு பிரதான காரணங்களாகும்.  பூச்சி மருந்து இறக்குமதியால் ஆகும் அந்நிய செலவாணியை மிச்சப்படுத்த அந்நிய முதலீட்டில் இந்த ஆலை தொடங்கப்பட்டதாக கூறப்பட்டது.அவர்கள் லாபமாக, தொழில்நுட்ப ராயல்டியாக எடுத்துச்சென்றதை கணக்குப் போட்டால், அனுபவம் வேறாக இருக்கும்.

அரசாங்கம் எதிர்கொண்ட முறை

3-12-84 அன்று விஷவாயுவால் மக்கள் சாக நேரிட்டதை கண்டவுடன் ஹனுமன் கன்ஞ் காவல் நிலைய அதிகாரி புகார் எதுவுமில்லாமலே தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி (கவனக்குறைவால் சாவு நேர காரணமாக இருந்த குற்றம்) 304-ஹ ஐ.பி.சி செக்ஷனில் வழக்கு பதிவு செய்து போபால் ஆலையின் ஐந்து நிர்வாகிகளை கைது செய்தார்.
5-12-84 அன்று இந்திய அரசு டாக்டர் வரதராஜன் தலைமையில் விபத்திற்கான காரணங்களை ஆய்வு செய்து அறிக்கை  தயாரிக்க விஞ்ஞான குழுவை நியமிக்கிறது.
6-12- 84 அன்று மத்தியபிரேதேச மாநில அரசு நீதிபதி என். கே. சிங் தலைமையில் விபத்தை விசாரிக்க விசாரணை கமிஷனை நியமிக்கிறது.
டிசம்பர் 7, 1984 அன்று போபாலுக்கு வந்த யூனியன் கார்பைட் தலைவர் வாரன் ஆண்டர்சன், மற்றும் இந்திய யூனியன் கார்பைடின் தலைவர் கேஷப் மஹிந்திரா, நிர்வாக இயக்குநர் ஜி.பி.கோகலே என்ற மூவரும் (விபத்து தொடர்பான வழக்கில் முதல், இரண்டு, மூன்றாம்நிலை குற்றம் சாட்டப்பட்டவர்கள்) கைது செய்யப்பட்டனர் .ஐ.பி.சிசட்டத்தில் உள்ள 7செக்ஷன்களில் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. (304-பார்ட்செகன்ட்,304-ஏ,426,429,278,284,120-ஏ)
ஆண்டர்சன் 6 மணி நேரத்திற்கு சகல வசதிகள் கொண்ட யூனியன் கார்பைடு விருந்தினர் விடுதியில் வைக்கப்பட்டு, பின்பு கூப்பிடுகிற நேரத்தில் வரவேண்டும் என்ற நிபந்தனையுடன், மாநில அரசு விமான மூலம் பத்திரமாக டில்லிக்கு அனுப்பப்பட்டார். பின்னர் வழக்கிற்கு தேவைப்படும்போது வரவேண்டும் என்ற நிபந்தனை யோடு நாட்டை விட்டு போகவும் அனுமதிக்கப்பட்டார். போனவர் போனவர்தான். அவர் ‘திருமுகத்தை’இந்திய நீதிமன்றம் இன்னும் பார்க்கவில்லை.
13-12-84 2வது 3வது குற்றவாளிகளுக்கு ம.பி உயர் நீதி மன்றம், பெயிலில் விடுவித்தது.
15-12-84 மீதமுள்ள குற்றவாளிகளை செசன்சு கோர்ட்டே பெயிலில் விட்டது.
16- 12-84 யூனியன் கார்பைடு நிர்வாகம், இந்திய விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ உதவியுடன் நகரமே ஆள் அரவமற்ற கிடந்த நிலையில்4-12-84ல்லிருந்து அலையில் புகுந்து இன்னொரு டாங்கில் இருந்த விஷ வாயுவை, பூச்சிக் கொல்லி மருந்தாக மாற்றியதாகவும், விஷப் பொருளை அகற்ற 20 லட்சம் டாலர் செலவு செய்ததாகவும் அறிவித்தது. ராணுவ ஹெலிகாப்டர்கள் பல லட்சம் லிட்டர் நீரை சுமந்து உற்பத்தியின் போது விபத்து நேர்ந்தால் விஷ வாயு பரவாமல் தடுக்க 7 நாளும் பறந்து கொண்டிருந்தது. என்ற தகவல் 2004-இல் வெளிவந்தது
ஜனவரி 1985-இல் ஐ.சி.எம். ஆர் (இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம்) என்னென்ன விஷ வாயுக்கள் ரசாயன கலவை யால் உருவானது, அவைகள் மனித உடலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆராய 20 விதமான திட்டங்களை உருவாக்கி இவைகளை நிர்வகிக்க போபால் விஷ வாயு பேரழிவு ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பை நிறுவியது. இதே தேதியில் டாட்டா சமூக விஞ்ஞான கழகமும், ம.பி அரசு மற்றும் கல்வி நிலையங்கள் உதவியுடன் பாதிக்கப் பட்ட 36 வார்டுகளில் வீடுவீடாக சென்று தகவல் சேகரிக்கும் வேலையில் இறங்கியது.
8-8-85 டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் உயிரினங்கள், தாவரங்கள் மீது விஷப்பொருளின் தாக்கத்தை ஆராய 2 வருட கெடு கொடுத்து ஆய்வுக் குழுவை நியமித்தது.
பாதிக்கப்பட்டவர்களும் இறந்து போனவர்களின் குடும்பங்களும் பெற வேண்டிய இழப்பீடு தொடர்பான சட்டம் ஒன்றினை 1985-இல் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
அந்த சட்டத்தின் அடிப்படையில் யூனியன் கார்பைடு கார்ப்பரேசன் மீது அமெரிக்காவில் ஏப்ரல் 4, 1985ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது; போபாலில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் அமெரிக்க நீதிமன்றங்களில் கோர முடியாது என்று அந்த வழக்கு மே 5, 1986-இல் தள்ளுபடி செய்யப்பட்டது.
5-9-86 போபால் மாவட்ட நீதி மன்றத்தில் இந்திய அரசு நட்ட ஈடு கோரி மனு தாக்கல் அந்த மனுவில் நட்ட ஈடு தொகையை குறிப்பிடவில்லை
26-11-86-இல் தன்னார்வக் குழுக்கள் தாவாவில் தங்களையும் சேர்த்துக் கொள்ள கோட்டில் மனு தாக்கல் செய்த தோடு, யூனியன் கார்பைடின் அமெரிக்க ஆலையில் உள்ள பாதுகாப்பு போபாலில் கட்டப்பட வில்லை என்பதை காட்டிட கிரானடா டி.வி காட்டிய கேசட்டை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தது. அதோடு இடைக்கால நிவாரணமும் கேட்டது. வேடிக்கை என்னவெனில் இந்திய அரசும், யூனியன் கார்பைடு நிர்வாகமும் இதை எதிர்த்தன. இடைக்கால நிவாரணம் தேவை யில்லை என்றன.
30-11-86-இல் யூனியன் கார்பைடு போபால் ஆலை தொடர்பான சொத்துக்களை விற்றுவிட முயற்சித்ததை தடுக்க. போபால் மாவட்ட நீதிமன்றம் 3 பில்லியன் டாலர் பெறுமான அதன் சொத்துக்களை இழப்பீடு தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்று வதற்காக அப்படியே பராமரிக்கப்படவேண்டும் என உத்தரவிட்டது.
2-4-87 அன்று நீதிபதியே350 கோடி ரூபாயை இடைக்கால நிவரணமாக கொடுக்க நிர்வாகத்திற்கு ஆலோசணை கூறுகிறார். நிர்வாகம் மறுத்துவிடுகிறது.
17-12 87 அன்று 350 கோடியை இடைக் கால நிவாரணமாக பாதிக்கப்பட்டோருக்கு வழங்க தீர்ப்பளிக்கிறார். நிவாரணத்தை கொடுக்காமலே நிர்வாகம் மேல் முறையீடு செய்கிறது.
29-1-88 அன்று இந்திய அரசு போபால் மாவட்ட நீதி மன்றத்தில் நட்ட ஈடு மனுவிற்கு திருத்தம் கொடுக்கிறது. 3800 கோடி ரூபாய் பாதிக்கப்பட்ட 531770 பேருக்கு வழங்கவேண்டும், இதில் பொது சேதாரத்திற்கான இழப்பீடு அடங்காது. இது பின்னர் கணக்கிட்டு தரப்படும் என்கிறது..
4-4-88-இல் ம.பி உயர்நீதிமன்றம் நிவாரணத் தொகையை 250 கோடியாக குறைக்கிறது. யூனியன் கார்பைடு நிர்வாகம், அதையும் மறுத்து உச்சநீதிமன்றம் செல்கிறது. இந்திய அரசும் மேல் முறையீடு செய்கிறது
8-9-88-இல் உச்ச நீதிமன்றம் இருவரின் மேல்முறையீடு களை ஏற்று விசாரிக்க தொடங்குகிறது. வழக்கு முடிக்காமல் சமரசம் செய்து வைக்கிறது. கீழ் கோர்ட்டில் 3800 கோடி கேட்ட அரசு 713 கோடிக்கு சம்மதிக்கிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5லட்சத்திற்கு மேல் என்று பட்டியலே கொடுத்த எண்ணிக்கையையும் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் என்று குறைத்துக் கூறுகிறது. அதோடு எல்லாவற்றையும் மத்திய அரசு சுருட்டி விடுகிறது.
அரசுகளின் தலையீடும் – மக்கள் தவிப்பும்

நீதிபதி என்.கே.சிங் தலைமையில் விசாரணைக்கமிஷனை தன் பணியை முடித்து இந்த பேரழிவிற்கான காரணங்களை தெரிவிப்பதற்கு முன்பே, மத்திய பிரதேச மாநில அரசு அந்த கமிஷனை கலைத்துவிட்டது. அதோடு நின்று விடவில்லை,. டாடா ஆராய்ச்சி நிறுவனம் ஒவ்வொரு வீட்டிற்கும் ( 1ல ட்சம் வீடுகள்) சென்று அந்த விபத்தின் விளைவுகளை சேகரித்து வைத்திருந்த 25000 படிவங்களை பறிமுதல் செய்து அதன் பணியை முடக்கியது. உயிரினங்கள் அதன் வாழ்வாதாரங்கள் அனைத்திலும் இந்த நிகழ்வு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை கண்டறிய முனைவர் சி.ஆர். கிருஷ்ணமூர்த்தி என்பவர் தலைமையில் மத்திய அரசாங்கம் ஒரு குழுவை அமைத்தது. அதை முழுமையாக ஆய்வு செய்ய கால அவகாசம் தேவை என்று பரிந்துரைத்த அந்த குழுவிற்கு கால நீடிப்பு ஏதும் இல்லாமல் மத்திய அரசாங்கம் அதன் பணியை முடித்துக் கொண்டது. ஒரு விஷயம் தெளிவாகியது. இந்தப் பேரழிவின் வீச்சையும் அதன் முழு தாக்கத்தையும் வெளியே கொண்டு வருவதில் மத்திய, மாநில அரசாங்கங்கள் மறைக்கவே முயன்றன என்பது தெளிவாகியது.

துவக்கத்தில் மத்திய அரசாங்கம் நச்சுப்புகைக்கு பலியானவர்களின் குடும்பங்களைப் பற்றி கொஞ்சம் கவலைப் பட்டது போல் தெரிந்தது. பிறகு போபால் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் 1989-இல் போபால் உடன்பாடு ஏற்பட்ட பிறகு, யூனியன் கார்பைடு மீது விதிக்கப்பட்ட சொத்து விற்பனை தடை நீக்கப்பட்டது. அது யூனியன் கார்பைடுக்கு எதிர்பாராத வெற்றியினையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பின்னடைவையும் கொடுத்தது.

கிரிமினல் வழக்கிற்கு நேர்ந்த கதி

இதற்கிடையில் இந்த கொடுமையான நிகழ்வுகளுக்கு காரணமானவர்களாக இருந்தவர்கள் மீது குற்றவியல் சட்டப்பிரிவுகளின் படி மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) டிசம்பர் 2007-இல் போபால்  முதன்மை குற்றவியல் நீதிபதி முன் குற்றப்பத்திரிகை பதிவு செய்தது. வழக்கு தொடங்கியபோது, முதல் குற்றவாளி வாரன் ஆண்டர்சன் நீதிமன்றத்திற்கு வரவில்லை. அமெரிக்காவில் விசாரணை தொடர வேண்டும் என்று புலனாய்வுத்துறை கேட்டதற்கிணங்க முதன்மை குற்றவியல் நீதிபதி அதற்கான கடிதம் கொடுத்தார். அமெரிக்காவில் உள்ள ஆலையின் பாதுகாப்பு அம்சங்களையும், பரிசீலனை செய்ய சிபிஐக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.  அமெரிக்க அரசாங்கம் அணுமதி  வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது

9-2-89 அன்று முதன்மை குற்றவியல் நீதிபதி புலனாய்வுத்துறை வேண்டுகோளை ஏற்று வாரன் ஆண்டர்சன் சட்டப்படி தலைமறைவான குற்றவாளி என அறிவித்து , மார்ச் 31, 1989க்குள் அவரை நீதிமன்றத்துககுள் கொண்டு வர வேண்டும் என்று புலனாய்வுத்துறைக்கு உத்தரவிட்டது. அமெரிக்க அரசாங்கமும் இறங்கி புலனாய்வுத்துறை அமெரிக்காவில் உள்ள ஆலையை பார்க்கவும் விசாரணை நடத்தி தேவையான ஆவணங்களை சேகரிக்கவும் அனுமதித்தது.

இந்த நடவடிக்கைகளுக்கிடையே உச்சநீதிமன்றத்தில் இழப்பீடு தொடர்பான வழக்கு நடந்தது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில், போபால் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வழக்கு திரும்பப் பெறப்பட்டு, இழப்பீட்டு உரிமை கோரல் தொடர்பாக ஒரு ஒப்பந்தம் உருவானது, அதன்படி இழப்பீட்டு தொகை 470 மில்லியன் டாலர் -ரூ.713 கோடி என அறிவித்து அனைத்து வழக்குகளையும் முடிவுக்கு கொண்டு வந்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது, மிக மிக வேகமாக செயல்பட்டு வெளியிடப்பட்ட ஒப்பந்தம் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

பிப்ரவரி 2, 1989 அன்று முதன்மை குற்றவியல் நீதிபதி வாரன் ஆண்டர்சென் சட்டப்படி தலைமறைவானவர் என்று பிணையில் வெளிவர முடியாத கைதுக்கான ஆணை கொடுத்ததற்கும், பிப்ரவரி 14, 1989 அமெரிக்க அரசுபுலனாய்வுத்துறை அமெரிக்காவில் விசாரணை நடத்த அனுமதி வழங்கியதற்கும் அவசரமாக உச்சநீதி மன்றத்தில் ஒரு ஒப்பந்தம் கண்டதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?
இந்திய அரசாங்கம் அந்த குறிப்பிட்ட ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு, அந்த கோரமான நிகழ்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொது அறிவிப்பின் மூலமாக அதன் விவரங்கள் ஏன் தெரிவிக் கப்பட வில்லை?
இழப்பீடு உரிமை கோரி 5,97,908 விண்ணப்பங்கள் இருந்தபோதும், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இறந்துபோன 3000 பேர் உட்பட அது 1,05,000 என்றுதான் தெரிவித்தது. எந்த அடிப்படையில் மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்தது என்றும் தெரியவில்லை. புலனாய்வுத்துறையே டிசம்பர் 1, 1987 அன்று முதன்மை குற்றவியல் நீதிபதி முன் கொடுத்த வாக்குமூலத்தில் 5,00,000க்கும் மேலான விண்ணப்பங்கள் என்று குறிப்பிட்டி ருந்தது. யூனியன் கார்பைடு கொடுக்க வேண்டிய இழப்பீட்டு தொகையினை குறைப்பதற்கான முயற்சியாக இது உள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் எழும்பியுள்ளன. தொழிலாளிகள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பெண்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல மக்கட்பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் 30க்கும் மேற்பட்ட அகில இந்திய அமைப்புகள் ஒருங்கிணைந்து, விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களை பாதுகாக்க விரிவான போராட்டதளம் ஒன்றினை உருவாக்கினர். அந்த ஒப்பந்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்காடும் முயற்சிகளை அந்த அமைப்பு மற்ற அமைப்புகளுடன் இணைந்து மேற்கொண்டது.

இழப்பீடு உரிமை கோருவோர் எண்ணிக்கை 5,74,375 என அதற்கான விசேஷ நீதிமன்றங்கள் தீர்மானித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபடி (1,05,000 பேருக்கு) ரூ.713 கோடி என்பதை அதிகப்படுத்தாமல் அதையே 574375 பேருக்கும் கணக்கிட்டு தலா ரூ.12413 வழங்கப்பட்டது.

குற்றம் சார்ந்த வழக்குகள் – மறு பரிசீலனை

மக்கள் இயக்கங்களின் நிர்ப்பந்தத்தால், முடிவுக்குக் கொண்டு வந்த குற்றம் சார்ந்த வழக்குகளை மக்கள் இயக்கங்களின் நிர்பந்தத்தால் உச்சநீதிமன்றம் மறு பரிசீலனைக்கு எடுத்தது.  யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு சட்ட நடவடிக்கையிலிருந்து கொடுக்கப்பட்ட விலக்கலை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது; மேலும் 500 படுக்கைகள் கொண்ட சிறந்த மருத்துவக் கருவிகளுடன் ஒரு மருத்துவமனையை கட்டுவதற்கு ரூ.50 கோடி  யூனியன் கார்பைடு  நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டது. போபால் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் பதிவு செய்து பின்பு முடித்துக் கொண்ட வழக்குகளை மீண்டும் விசாரித்து நவம்பர் 11, 1991 அன்று உத்தரவிடப்பட்டது; குற்றவாளிகள் டிசம்பர் 17, 1991 அன்று நீதிமன்றத்திற்கு வரவேண்டும் என்றும் ஆணையிட்டது. வாரன் ஆண்டர்சன் நீதிமன்றத்திற்கு வரவில்லை . பத்திரிகைகளில் அறிவிப்பு கொடுக்கப்பட்டன. ஆண்டர்சனோ, அவரோடு சேர்ந்து குற்றம் சாட்டப்பட்ட  யூனியன் கார்பைடு  நிறுவனத்தைச் சார்ந்தவர் களோ, மற்றொரு பங்குதாரரான  யூனியன் கார்பைடு-கிழக்கு (ஹாங்காங்) என்ற நிறுவனத்தை சேர்ந்தவர்களோ யாரும நீதிமன்றத்திற்கு வரவில்லை.

குற்றம் சார்ந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு வராமல் இருந்தால் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்பதை அறிந்த  யூனியன் கார்பைடு  நிறுவனம் அதன் இந்திய சொத்துக்களை (இந்திய  யூனியன் கார்பைடு நிறுவனத்தில் உள்ள அதன் பங்குகளை) ரகசியமாக லண்டனில் உருவாக்கிய அறக்கட்டளைக்கு எழுதி வைத்தது. அதற்கு போபால் மருத்துவமனை அறக்கட்டளை என்று பெயர்; அதன் ஒரே அறங்காவலராக பிரிட்டனின் முன்னாள் அரசாங்க வழக்கறிஞர் அயன் பெர்சிவல் என்பவரை நியமித்தது. மார்ச் 27, 1992 அன்று போபால் நீதிமன்றம் ஆண்டர்சனுக்கு பிணையில் எடுக்க முடியாத கைது உத்தரவை பிறப்பித்து, அவரை அமெரிக்காவிலிருந்து விசாரணைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. இதுவரை அதற்கான உத்தரவு மத்திய அரசாங்கத்தால் பிறப்பிக்கப்படவில்லை. சொத்துகள் பறிமுதல் செய்ப்படுவதை தடுக்க  யூனியன் கார்பைடு  எடுத்த முடிவினை எதிர்த்து பல்வேறு வெகுஜன அமைபபுகள் நீதிமன்றத்தை அணுகின. மத்திய புலனாய்வுத்துறையும் அதை எதிர்த்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதை தடுத்து நிறுத்த வேண்டுகோள் விடப்பட்டது. முதன்மை குற்றவியல் நீதிமன்றம் அறக்கட்டளைக்கு  யூனியன் கார்பைடு  தன் பங்கு களை மாற்றுவதை அங்கீகரிக்கவில்லை; அந்த சொத்துக்களை கையிலெடுத்துக் கொண்டது.

போபால் மருத்துவமனை அறக்கட்டளை

உச்சநீதிமன்றம் யூனியன் கார்பைடு நிறுவனம் மருத்துவ மனைக்காக ரூ. 50 கோடி வழங்க வேண்டும் என ஆணையிட்டும், இதுவரை அந்த நிறுவனம் ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. இது உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, பிப்ரவரி 14, 1994 அன்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே போபால் குற்றவியல் நீதிமன்றம் கையிலெடுத்துக் கொண்ட சொத்துக்களை விற்றுவிட அனுமதித்தது. உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை ஒரு குறிப்பிடட விஷயத்தில் வியப்புக்குரியதாக இருந்தது. குற்றம் சார்ந்த வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனம் ஆஜராகாததால் தலைமறைவானவர்கள் என்று அறிவிக்கப்பட்டு சொத்துக்கள் கையிலெடுக்கப்பட்டன. ஆனால் போபால் மருத்துவமனை அறக்கட்டளை தொடர்பான வழக்கில் யூனியன் கார்பைடு பிரதிநிதியாக அயன் பெர்சிவால், (லண்டனில் அந்த நிறுவனம் நிறுவிய அறக்கட்டளையின் அறங்காவலர்) உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். எந்த சட்டத்துக்கும் உட்படாமல் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியின் சார்பாக ஒருவர் ஆஜராக அனுமதிக்கிறது என்று புரியவில்லை. நீதிமன்றத்தில் அவரை அனுமதித்தது  மட்டுமல்ல, தலைமறைவாக உள்ளவரின் சொத்துக்களை விற்கவும் எப்படி அனுமதித்தது என்றும் புரியவில்லை. உச்சநீதிமன்றத்தின் முடிவு உண்மையில் போபால் குற்றவியல் நீதிமன்றத்தின் (சொத்துக்களை கையகப்படுத்தும்) தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்துவிட்டது. இது தலைமறைவாக இருக்கும் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு சாதகமான முடிவல்லவா? விற்ற பணத்தில் ரூ.60 கோடி போபால் மருத்துவ மனைக்காக ஒதுக்க வேண்டும் என்ற நிலையில், லண்டனில் உள்ள (போபால்) மருத்துவமனை அறக்கட்டளைக்கு ரூ.5 கோடி (1 பில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டு) அதன் நிர்வாக செலவுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியது. இந்த நாட்டு சட்டத்தின் படி தலைமறைவானவர் என்று அறிவிக்கப்பட்ட ஒருவர் வெளிநாட்டில் உருவாக்கிய அறக்கட்டளைக்கு பண மாற்றம் செய்வதை நம் நாட்டு சட்டம் அனுமதிக்கிறதா என்ற கேள்விக்கு பதில் இல்லை. பொதுநல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் இந்த முடிவை எதிர்த்து வழக்காடிய போது எப்படி உச்சநீதிமன்றம் சட்டத்தை மீறிய ஒருவர் (தலைமறைவாக இருந்து கொண்டு) உருவாக்கிய போபால் மருத்துவமனை அறக்கட்டளையினை உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கலாம் என்ற கேள்வியினை எழுப்பினர்; உச்சநீதிமன்றம், அந்த அறக்கட் டளையை தாங்கள் அங்கீகரிக்கவில்லை என்றும், அதன் சட்டரீதியான அந்தஸ்தை மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று விளக்கமளித்தது. அப்படி என்றால் அதன் பிரதிநிதியாக வந்த அயன் பெர்சிவாலை உச்சநீதிமன்றத்தில் அனுமதித்திருக்கவே கூடாது; ம.பி. உயர்நீதி மன்றம் முடிவு எடுத்தபின் தான் உச்சநீதிமன்றம் முடிவு எடுக்க முடியும் என்று சொல்லியிருக்க வேண்டும். இதுவும் நமக்கு புரியாத ஒன்று தான். நிர்வாக செலவிற்காக ரூ. 5 கோடியினை சொத்துக்களை விற்ற பணத்திலிருந்து கொடுக்க வேண்டாம் என்றும் அதன் செலவினங்களை யூனியன் கார்பைடே சமாளித்துக் கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பை மாற்றிக் கொண்டது. இது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் ஏற்கனவே லண்டனுக்கு மாற்றப்பட்ட பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்ற உத்தரவு ஏதுமில்லை. போபால் மருத்துவமனை அறக்கட்டளை நீதிமன்ற உத்தரவுகளுக்கு எந்த மரியாதையினையும் காட்டவில்லை. நீதிமன்றம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் அனுமதி இல்லாமலேயே அயன் பெர்சிவால், அறக்கட்டளையின் ஒரே அறங்காவலர், ரூ. 6.7 கோடியை பின்பு லண்டனுக்கு மாற்றினார்.

யூனியன் கார்பைடின் சொத்துக்களை விற்றதில் கிடைத்த ரூ. 290 கோடியில், ரூ. 60 கோடி மருத்துவமனை கட்டவும், ரூ. 5 கோடி லண்டன் அறக்கட்டளைக்கென ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் யூனியன் கார்பைட் நிறுவனம் உருவாக்கிய போபால் மருத்துவமனை அறக்கட்டளை இந்திய சட்டங்களுக்கு புறம்பானது. வேடிக்கை என்னவென்றால் அந்த நிறுவனத்தின் அறங்காவலரான அயன் பெர்சிவல் இந்தியாவில் மருத்து வமனை கட்டுவதை நிறைவேற்றும் அதிகாரம் படைத்த கமிட்டியில் உறுப்பினராக்கப்பட்டு அதன் கணக்கு வழக்குகளை கையாளவும் அனுமதிக்கப்பட்டதுதான். அதன் விளைவாக அந்த கமிட்டியின் சக்தி வாய்ந்த உறுப்பினராக அவர் மாறினார். மீதமுள்ள ரூ. 225 கோடி போபால் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது.

ஏற்கனவே சொத்துக்களை கையகப்படுத்துவதை எதிர்த்து இந்திய யூனியன் கார்பைடு நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்ததை திரும்பப் பெற்றுக் கொண்டது. இதனால் குற்றவியல் நீதிமன்றம் கொடுத்த (யூனியன் கார்பைடு சொத்துக்களை கையகப்படுத்த வேண்டும் என அளித்த) தீர்ப்பு நிலைத்தது. ஆனால் உச்சநீதிமன்றம் அதைப்பற்றி கவலைப்பட வில்லை. சட்டவிரோத அறக்கட்டளை தொடர்ந்து இருக்கவும் அதன் நிதியினை கூடுதலாக வரும் நிதியினையும் சேர்ந்து கையாள அந்த அறங்காவலருக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் நலன்களை பாதுகாக்க செயல்படும் அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி இது நடந்தது.

ஏப்ரல் 4, 1996இல் தலைமை நீதிபதி ஏ.எம். அஹமதி தலைமையிலான உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு சொத்துக்களை விற்ற பணத்திலிருந்து மேலும் ரூ. 187 கோடியினை மருத்துவ மனை கட்ட விடுவித்தது. போபால் முதன்மை நீதிமன்றத்தின் உத்தரவு அர்த்தமற்றதாக மாறிவிட்டது. பின்பு நீதிபதி அஹமதி, அயன் பெர்சிவலுக்கு அந்த நிதியினை முழுமையாக கையாளும் பொறுப்பை வழங்கினார். இந்திய அரசாங்கத்தாலேயே அதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. உச்சநீதிமன்றத்தில் அந்த முடிவுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மருத்துவமனை கட்டுவதில் அயன் பெர்சிவல்லை இணைக்க வேண்டியதன் நோக்கமென்ன? மொத்தம் ரூ. 11.7 கோடி பணத்தை லண்டனுக்கு அனுப்பிய “பெரிய மனிதர்” அவர். அவர் அறங்காவலராக உள்ள அறக்கட்டளையோ யூனியன் கார்பைடோ போபாலில் கட்டப்படும் மருத்துவமனைக்கு எந்த உதவியும் செய்யவில்லை. ஆனால் அவரை இந்த கட்டுமானப் பணியில் இணைத்தது யூனியன் கார்பைடு ஒரு நன்மை நாடும் அமைப்பு என்ற கருத்தை உருவாக்குவது தான் நோக்கமாக இருக்க முடியும். விற்கப்பட்ட சொத்துக்களை பயன்படுத்தும் போது அவைகளெல்லாம் சட்டத்திலிருந்து மறைந்து தலைமறைவாக இருக்கும் யூனியன் கார்பைடு கொடுத்த நன்கொடை என்று பதிவு செய்வதை உச்சநீதிமன்றம் அனுமதிக்கும் விசித்திர நிகழ்வும் நடந்தது. பெர்சிவல் ஏப்ரல் 2004இல் மரணமடைந்தார். அதன் பிறகு உச்சநீதிமன்றம் மற்றும் இந்திய அரசு ஒப்புதலுடன் போபால் நினைவு மருத்துவமனை அறக்கட்டளை என புதிய அறக்கட்டளை துவக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் (மார்ச் ‘97’இல் ஓய்வு பெற்ற) முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எம். அஹமதி அந்த 11 உறுப்பினர் அறக்கட்டளையின் தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

அந்த அறக்கட்டளையால் நடத்தப்பட்ட மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் பற்றி குற்றச்சாட்டுகள் எழுந்தன. நச்சு வாயுவினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு சரிவர சிகிச்சை கிடைக்கவில்லை என்று கூறினார்கள். ரகசியமாக மருந்துகளின் விளைவுகள் பற்றி அறியும் சோதனைக் களமாக அது இருந்தது; பல ஆண்டுகள் அதன் வரவு செலவு கணக்கு மக்கள் முன் வைக்கப்படவில்லை. (மத்திய பிரதேச அறக்கட்டளை சட்டத்தின் கீழ் அது அமைக்கப்பட்டது) ஜூலை 19, 2010இல் மத்திய அரசு அதை தன் அதிகாரத்தில் எடுத்துக் கொண்டது.

இந்திய அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் அதிர்ச்சியூட்டு பவையாகவும் இருந்தன. வாரன் ஆண்டெர்சனை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அரசாங்கத்தின் நிலை கேள்விக் குரியதாகவே இருந்தது. தனிப்பட்ட அமெரிக்க வழக்கறி ஞர்களின் கருத்தை கேட்டு விட்டு மத்திய அரசாங்க வழக்கறிஞர் சோலி சொராப்ஜி அரசாங்கத்திற்கு ஆகஸ்ட் 6, 2001” எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்தால் வாரன் ஆண்டெர் சனை இந்தியாவுக்கு கொண்டு வர நாம் அமெரிக்காவில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும் வாய்ப்பில்லை என்பது என் கருத்து” என எழுதினார். இரண்டாவது குற்றம்சாட்டப் பட்டவரான கேஷப் மஹிந்திராவுக்கு ‘பத்ம பூஷன்’ விருது வழங்க மத்திய அரசாங்கம் பரிந்துரை செய்தது. பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு, நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனுக்கு எழுத்துப்பூர்வ கடிதம் எழுதியதன் விளைவாக கேஷப் மஹிந்திரா ‘விருது வேண்டாம்’ என மறுத்ததாக செய்தி வெளியானது. மே 24, 2002 அன்று மத்திய புலனாய்வுத்துறை போபால் குற்றவியல் நீதிமன்றம் வாரன் ஆண்டெர்சனுக்கு விதித்திருந்த பிணையில் வெளிவரமுடியாத உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று அந்த நீதிமன்றத்தில் விண்ணப்பித்தது. காரணம்? வெளியுறவுத்துறை அமைச்சரகம் அவர் மீதான குற்றச்சாட்டை இந்திய குற்றவியல் சட்டம் 304-ஏ பிரிவின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியதால் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது; ஏனெனில் அந்த பிரிவின் படி குற்றஞ்சாட்டப் பட்டவர் வெளிநாட்டிலிருந்து இங்கு கொண்டு வர வேண்டிய அவசியமில்லை. வாரன் ஆண்டெர்சன் மீது தான் எவ்வளவு அக்கறை! ஆனால் நீதிமன்றம் புலனாய்வுத்துறையின் கோரிக்கை யினை நிராகரித்தது.

வழக்கும் – முடிவும்

போபால் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு தொடரப்பட்ட பொழுது குற்றச்சாட்டு மனித கொலை புரிந்ததாக 304-பகுதி இரண்டின் மற்றும் 6 செக்ஷனில் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் மேல்முறையீ ட்டில் அதை ‘கவனக்குறைவு’ என்ற பொருளில் 304-ஏ பிரிவின் கீழ் பதிவு செய்ய ஆணையிட்டது. இதற்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்ட பொழுது மார்ச் 10, 1997 நீதிபதி ஏ.எம். அஹமதியின் தலைமையில் இருந்த நீதிபதிகள் குழு அதை எந்த காரணமும் சொல்லாமல் நிராகரித்தது. 1996லிருந்து 2010 வரை வழக்கு போபால் நீதிமன்றத்தில் தொடர்ந்தது. நீதிமன்றத்தின் முன்வைக்கப்பட்ட ஆவணங்கள், சாட்சியங்கள் யாவும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இது நடக்கும் என்று தெரிந்தே நடந்த மிகப் பெரிய மனித இனப்படுகொலை என்பதை தெளிவாக எடுத்துக் காட்டின. குற்றச்சாட்டுகளை அதிக தண்டனை வழங்கும் பிரிவுகளுக்கு மாற்ற அதிகாரம் தனக்கு இல்லை என்று குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோகன் திவாரி என்பவர் அதற்கான கோரிக்கையை நிராகரித்தார். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்டு என்று தான் சட்டம் சொல்லுகிறது.

ஜூன் 1, 2010 தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரதான குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ. 1 லட்சம் அபராதமும் வழங்கப்பட்டன; வேறு சில பிரிவுகள் தண்டனை வழங்கப்பட்டு அவைகளை ஏக காலத்தில் அனுபவிக்கலாம் என்றும் தீர்ப்பு எழுதப்பட்டது. தண்டனைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அனுபவிக்க வேண்டுமென நீதிபதி மோகன் திவாரிக்கு முன்னே அப்பொறுப்பில் இருந்த நீதிபதி ஆணையிட்டிருந்த போதிலும் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

கொடுமையான குற்றம் புரிந்தவர்களுக்கு மிகவும் லேசான தண்டனை வழங்கப்பட்டது. 20,000 பேர் இறந்தார்கள், 5,50,000 பேர் கடுமையான பாதிப்புக்கு உள்ளானர்கள் அந்தக் குற்றத்துக் குரிய தண்டனை கொடுக்கப்படவில்லை. ஏழைகளுக்கும் ஆதரவற்ற மக்களுக்கும் இந்த நாட்டின் நீதித்துறை அமைப்பு எந்த நியாயத்தை வழங்கும் என்பது இந்த தீர்ப்பிலிருந்து தெளிவாகியது.

அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?

இந்த தீர்ப்புக்கு எதிராக நாடு முழுமையும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நாட்டு மக்களின் குமுறலைக் கண்ட மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவைக்குழு அனைத்து அம்சங் களையும் பரிசீலனை செய்து ஜூன் 23, 2010 அன்று அதன் பரிந்துரைகளை முன் வைத்தது.

வாரன் ஆண்டெர்சன் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
குற்றவாளிகளுக்கு எதிராக குற்றச்சாட்டின் தன்மையினை குறைத்ததை மாற்றுவதற்கான நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏக கால தண்டனை அனுபவித்தல் என்பதை மாற்றி தொடர்நிலை தண்டனை காலமாக மாற்ற மேல்முறையீடு செய்ய வேண்டும்.
இந்திய குற்றவியல் சட்டம் 304 – பகுதி இரண்டின் கீழ் வழக்கு நடத்த உயர்நீதிமன்றத்தில் மறுபரிசீலனை மனு தாக்கல் செய்ய வேண்டும்.
டவ் கெமிக்கல் கம்பெனியின் பொறுப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற வழக்கை தொடர வேண்டும்.
போபால் நினைவு மருத்துவமனையினை கையிலெடுக்க வேண்டும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் போபால் மையத்தை மீண்டும் திறக்கவேண்டும்.
விபத்து நடந்த ஆலை பகுதியிலும் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலும் நச்சு வாயுவால் கெட்டுப்போன பகுதிகளை சரி செய்யும் பணிக்கு உலக அளவிலான ஒப்பந்தப் புள்ளி பெற வேண்டும்.
மரணம் மற்றும் கடுமையான பாதிப்புக்குள்ளான வர்களுக்கு கொடுக்கப்படும் இழப்பீட்டுத் தொகை மேலும் ரூ. 700 கோடி அதிகரிக்க வேண்டும்.
பொதுவாக இந்த பரிந்துரைகள் வரவேற்புக்குரியவைகள் தான். ஆனால் இந்த விபத்தில் மரணமடைந்தோர் மற்றும் பல வகையிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை கணக்கிடு வதில் அதன் முழு பரிமாணத்தையும் குறைத்து மதிப்பீடு செய்வது வெளிப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் மரணம டைந்தவர்களின் குடும்பங்கள் ஆகியவர்களின் தேவைகளை கணக்கிட்டால், கூடுதல் இழப்பீட்டுத் தொகை ரூ. 700 கோடி என்பது மிக மிக சொற்பத் தொகையாகும். சரியான ஆய்வு செய்யாமல் பிரச்சனையின் உள்ளார்ந்த முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாமல், நச்சு வாயுவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பது என்ற அறிவிப்பு திட்டமிடாத ஒன்றாக உள்ளது. குற்றச் சாட்டின் தன்மையினை மாற்றுவதற்காக போடப்படும் மனுக்கள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களை பிரதிநிதித்து வப்படுத்தும் அமைப்புகளோடு பேசி அனைத்து விபரங்களையும் பெற்றுக் கொண்டு, அமைச்சரவைக்குழுவால் பரிந்துரைகளை பரிசீலிக்க அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படவேண்டும்.

ஜூலை 6, 1988 அன்று போபால் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் மத்திய புலனாய்வு துறைக்கு ஒரு கடிதம் கொடுத்தது. அதன்படி மத்திய புலனாய்வுத்துறை போபால் ஆலையிலும் (அமெரிக்க) இன்ஸ்டிடியூட் ஆலையிலும் உள்ள பாதுகாப்பு அமைப்புகளை ஒப்பீட்டு ஆய்வு செய்து, யூனியன் கார்பைடு நிறுவனம் அதில் இரட்டை நிலை எடுத்திருக்கிறதா என்று தெரிவிக்க வேண்டும். ஆனால் அமைச்சரவை குழு அதுபற்றி மௌனம் சாதிக்கிறது. அக்டோபர் 1991இல் புலனாய்வுத்துறை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு இது தொடர்பாக கடிதம் எழுதியது. ஆனால் இந்திய அரசாங்கம் அமெரிக்க அரசாங்கத்தோடு தொடர்பு கொண்டு அந்த பணிக்கு வழிவகை செய்திருக்க வேண்டும். இந்திய அரசாங்கம் ஏன் அதை செய்யவில்லை என்ற மர்மம் நீடிக்கிறது. தற்போது மே.ஜெர்மனியின் பேயர் என்ற வேதியல் நிறுவனத்தின் கையில் தான் “இன்ஸ்டிடியூட்” நிறுவனம் உள்ளது. ஆஐஊ  உற்பத்தியும் அங்கே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே இப்பொழுதும் கூட புலனாய்வுத்துறை அமெரிக்கா சென்று அந்த ஆய்வினை மேற்கொள்ள முடியும். ஏனெனில் இந்த வழக்கில் அது மிக முக்கியமான அம்சமாக உள்ளது. இந்திய அரசு அந்த கடமையினைச் செய்யுமா?

போபால் நச்சு வாயு சோக நிகழ்வு ஒரு உண்மையை தெளிவாகச் சொல்லுகிறது. பெரிய மனிதர்கள், செல்வாக்கு படைத்தவர்கள் லாப நோக்கோடு செய்யும் குற்றங்கள், எவ்வளவு கொடுமையானதாக இருந்தாலும் அரசியல் தளத்தில் ‘சரியாக’ காய்களை நகர்த்தினால், நீதித்துறையினை வளைத்துப் பிடித்தால் எளிதாகத் தப்பி விட முடியும். ஆனால் நீதி கேட்டு மக்கள் இன்னும் தெருக்களில் நின்று தான் போராட வேண்டும். போபாலின் 26 ஆண்டு காலப் போராட்டம் தொடர்வது பின்பு எதைத்தான் சுட்டிக் காட்டுகிறது?

“தி மார்க்சிஸ்ட்” ஆங்கில இதழில்

(2 ஏப்ரல்-ஜூன் 2010)

என்.டி. ஜெயப் பிரகாஷ்

எழுதிய கட்டுரையின் தழுவல்









No comments:

Post a Comment