தவப் புதல்வன் tamil movie review
#முக்தா பிலிம்ஸ் ...ஸ்ரீநிவாசன் அவர்கள் இயக்கத்தில் எழுபதுகளில் தவப் புதல்வன் என்றொரு திரைப்படம் . நடிகர் திலகம் , சிவாஜி கணேசன் , கே.ஆர். விஜயா,, பண்டரிபாய் , சோ ...இவர்கள் நடிப்பில் வெளிவந்தது. கதை இரு இசைக் கலைஞன் .. குடும்பக்கதையாகத்தான் செல்லும். இங்கு நான் சொல்ல வருவது .. இரண்டு காட்சி அமைப்புகள் ..பாடல்களுடன் .. வெகு அற்புதமாக அமைந்திருக்கும் .
பொதுவில் அன்று சிவாஜி தான் நடிக்கும் பல திரைப்படத்தில் ஒரு சிறிய வரலாற்று நாயக்கர் , பாவலர் பாத்திரங்கள் ஏற்று ஓரங்க நாடகமாகவோ நடிப்பார் . அதுவே காலம் கடந்தும் மனதில் நிறக்கூடியதாக இருக்கும் .
இங்கு பாடல் காட்சியாகவே ... மன்னர் அக்பர் மகள் சம்பந்தப் பட்ட கதை படமாகப் பட்டுள்ளது பார்த்தவர் யாராலும் மறக்க முடியாதது .
பாவலன் தான்ஜான் ...அஃபர் மக்களுக்கு கண்திறக்க இயலாத வியாதி பிடித்திருக்க எந்த மருத்துவரால் குணமாகாத நிலையில் , இப்புலவன் ஒரு குறித்த ராகத்தை அற்புதமாகப் பாடி ... தீபங்கள் தானா எரியாத தொடங்க இளவரசியும் கண்விழிக்கிறாள்.
சிவாஜியின் அற்புதமான நடிப்பு ..பாடலுக்கேற்ற முகபாவங்கள் ... உண்மையான திரைக்கதையை .மறக்கடித்து விடும் .
டி.எம்.எஸ் . குரலில் , எம்.எஸ். வி. அவர்கள் இசையில்
" இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும் .." என்று கவியரசரின் உயிர்துடிப்பான வரிகளில் ..அந்த உயிர் போலும் அவர் நடிப்பு மிளிரும் .
எதையெல்லாமோ பாடி , மனம் ஆர்ப்பரித்து...
" எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன் ..." என மனம் அமைதியில் தள்ளாடி , மனம் கனிந்துருகி பாட ...தீபங்கள் எரிய இளவரசியான கே.ஆர். விஜயாவும் கண் விழிக்கிறார் .
கதையில் சிவாஜி மாலை கண் நோய் உள்ளவராக வந்து அவர் இசையையும் ரசிக்கும் கே.ஆர். விஜயா தரும் மருத்துவ முயற்சியால் குணமடைவார் . ஆரம்பத்தில் இல்லாதிருந்த வியாதி தந்தைக்கு வந்த வழி இவருக்கும் வந்துவிட தாய் பண்டரிபாயிடம் மறைத்து விடுகிறார்கள் .
அது சமயம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு குழந்தைகட்கு கிறிஸ்துமஸ் தாத்தாவாக பாடி ஆடி பரிசுகள் வழங்கும் நிகழ்வு ..மாலை நேரத்திற்கு உறுதியாக விளக்க முடியவில்லை . சோ. .. அவர்கள் மாலைக்கண்ணை சொல்லாமல் , ரொம்ப வருடம் ஆயிடுச்சு , தாத்தாவிற்கு கண் தெரியாது , அவரவர் பெயர் சொல்ல நேரில் சென்று வாங்கி கொள்ளுங்கள் என்று கூறி சமாளிப்பார் .. அப்படியும் ,
' கிண்கிணி கினிகி னி கிணிகிணி என வரும்
மாதாக் கோயில் ஓசை ....'' பாடலைப்பாடி ..அந்தக் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் நடிகர் திலகம் கோடி கட்டி பார்ப்பார் . அப்படியும் பார்ப்பவருக்கு அவர் கண்களில் தடுமாற்றம் அறியமுடியும்
பாடல் வரிகள் , பாடும் விதம் நம் மனதை மனம் நெகிழ்ச்சி செய்யும் . இறுதியில் எடுத்த ஆதி பிறழ கீழே விழா ..அதையும் ஒரு சிரிப்பாக பிள்ளைகள் சிரிக்க.....
'.... பிள்ளை நெஞ்சில் கள்ளம் இல்லை
சிரித்தால் என்ன பாவம்
பிழைகள் கொண்ட உடலை அந்த தேவன் கொடுக்கக் கூடும்
தாத்தாதா னே பார்வை சற்றுக் குறைவாய் இருந்தால் என்ன
தட்டுத் தடவித் தடுக்கி விழுந்தால் சிரிப்பாயோ என் கண்ணே ...?"
என்று வரும் காட்சியில் கலங்காதவர் இருக்க முடியாது .
கோதை தனபாலன்
https://www.youtube.com/watch?v=W9JNydZT1Bo
No comments:
Post a Comment