Monday 9 December 2019

JOHN MILTON ,POET BORN 1608 DECEMBER 9


JOHN MILTON ,POET  BORN 1608 DECEMBER 9



ஜான் மில்டன் (John Milton 9 திசம்பர் 1608 - 8 நவம்பர் 1674) புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர். தன்னுடைய கவித்திறன் மூலம் இங்கிலாந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டி மன்னராட்சி மகுடத்தை வீழ்த்துவதற்குத் துணை புரிந்தவர் மில்டன். டிசம்பர் 9, 2008 மில்டனின்400வது பிறந்த தினம். உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு மில்டனின் கவித்திறன் ஆதர்சமாய் விளங்குகிறது. மில்டனின் இலக்கிய சுவை மட்டுமல்ல; அவரது எழுத்து நடையும் உலக மக்களிடம் பிரசித்தி பெற்றது. 'மில்டனைப் போல் எழுதுகிறாயே!'என்று பிற எழுத்தாளர்களைப் பாராட்டும் அளவிற்கு அவரது எழுத்தாற்றல் புலமை வாய்ந்தது.

மதவாதிகளும், பழமைவாதிகளும்,கொடுங்கோல் ஆட்சியாளர்களும் மனித சமூகம் முன்னேறும் போதெல்லாம், அந்த வரலாற்று சக்கரத்தை பின்னுக்கு இழுத்தவர்கள். மில்டனின் எழுத்து மக்களை கவ்வியபோது,அவரது எழுத்துக்களை 'தீ' நாக்குகளுக்கு உணவாக்கி மகிழ்ந்தனர் ஆட்சியாளர்களும்,பிற்போக்கு கிருத்துவ மதவாதிகளும். இவர்கள் மட்டுமா? கல்வியாளர்களும் கூடத்தான்; அவர் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் கூட முதல் இடத்தை பிடித்த மாணவர்கள் பட்டியலில் இருந்த 'ஜான் மில்டனின்' பெயரை 300 ஆண்டுகளுக்கும் மேலாக கருப்பு மையிட்டு மறைத்தது. மில்டன் மட்டுமல்ல; 'குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தவனே மனிதன்' என்று உண்மையை கண்டுரைத்த சார்லஸ்டார்வினையும் மறைத்தார்கள் என்பதையும் இந்நேரத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சீப்சைட், பிரட் ஸ்ட்ரீட்டில் டிசம்பர் 9, 1608 இல் வசதியான குடும்பத்தில் பிறந்தார் ஜான் மில்டன். அவரது தந்தை அன்றைக்கு தோன்றிய தூய்மைவாத (Puritanism) இயக்க ஆதரவாளராக இருந்ததோடு, கலை - இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்; இது மில்டனின் இளம் வயதில் தாக்கத்தை உண்டாக்கியது என்பதை சொல்லத் தேவையில்லை. செயின்ட் பால் பள்ளியில் படிப்பைத் துவங்கி, கிருத்துவ கல்லூரியில் பயின்று, 1632 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயின்று எம்.ஏ. பட்டம் பெற்றார் மில்டன். அத்துடன் லத்தீன், எபிரேயம்,இத்தாலிய மொழிகளில் நல்ல புலமை பெற்றிருந்தார் மில்டன்.


உலக மகாகவி என்று போற்றப்படும் சேக்ஸ்பியரின் மீது மில்டன் அளவற்ற காதல் கொண்டிருந்தாலும், அவரது எண்ணமெல்லாம் பாதிரியாராக மாற வேண்டும் என்றே இருந்தது. அந்த அளவிற்குக் கிறித்துவத்தையும் - பைபிளையும் நன்கு பயின்றிருந்தார். இந்த பயிற்சிதான் பின்னாளில் அவரது உலப் புகழ் பெற்ற படைப்புகளான 'இழந்த சொர்க்கத்தையும்', 'மீண்ட சொர்க்கத்தையும்' எழுதுவதற்கு கருவானது. கல்வி பயணத்தை மில்டன் முடித்துக் கொண்டாலும், உடனடியாக வேலை எதற்கும் செல்லவில்லை. மாறாக, வீட்டிலிருந்த படியே பல்வேறு அரும்பெரும் நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். இந்தக் காலத்திலேயே அவர் ஒரு சில புகழ் பெற்ற கவிதைகளை எழுதியிருந்தார்.

அறிவுத் தாகமெடுத்த மில்டன் 1633-ஆம் ஆண்டு வெளியுலகப் பயணத்தைத் துவக்கினார். பிரான்ஸ்,இத்தாலி உட்பட பல்வேறு நகரங்களுக்கு இக்காலத்தில் பயணம் செய்தார். அவர் இத்தாலிக்கு சென்றிருந்த போது, டெலஸ்கோப் வழியாக உண்மையை கண்டறிந்து, 'உலகம் உருண்டையானது - சூரியனைச் சுற்றிதான் இந்த புவிக் கோளம் இயங்குகிறது' என்ற பேரூண்மையை சொன்ன உலகமகா அறிவியல் விஞ்ஞானி கலிலியோவைக் கண்டு அவருடன் உரையாடினார். இந்தச் சந்திப்பைத் தனது வாழ்நாளில் முக்கியமான ஒன்றாகக் கருதினார் மில்டன். இந்த சந்திப்பைத் தனது 'இழந்த சொர்க்கம்' என்ற காவியத்திலும் ஓரிடத்தில் கீழ்க்கண்டவாறு வர்ணித்திருப்பார்.


ஜான் மில்டன் எனும் மகாகவிஞனின் பிறந்தநாள் இன்று - சிறப்பு பகிர்வு

டிசம்பர் 9: ஜான் மில்டன் எனும் மகாகவிஞனின் பிறந்தநாள் இன்று. (1608)

ஆங்கில இலக்கிய உலகில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கப்படும் கவித்துவம்
கொண்டவர் அவர். மில்டன் இளம் வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார். மில்டனின் கவிதைகள் அது வரை ஆங்கிலத்தில் இருந்த மரபுகளை உடைத்து தள்ளியது. எதுகை,மோனையோடு எழுதி வந்த முறையை தூக்கி எறிந்துவிட்டு நீண்ட வரிகளில் எக்கச்சக்க உவமைகளோடு மில்டன் கவிதைகள் எழுத ஆரம்பித்தார்.

நாட்டில் சிவில் போருக்கான சூழல் இருந்தது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் மற்றும் மன்னர்


ஜான் மில்டன் எனும் மகாகவிஞனின் பிறந்தநாள் இன்று - சிறப்பு பகிர்வு
ப்ரோட்டஸ்டன்ட் மக்களை மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்திக்கொண்டு இருந்தார்கள். அவர்களை படுகொலை செய்து தள்ளினார்கள். மில்டன் கொதித்துப்போனார். அன்பு செய்ய வேண்டிய மதபீடங்கள்
வன்முறையை தூண்டிவிடுவதை கண்டித்து கவிதைகள் எழுதினார். அவரை நாத்திகவாதி என்று வசைபாடினார்கள்.


சொர்க்க நீக்கம் என்கிற கவிதை நூலை பதினொரு ஆண்டுகள் இழைத்து, இழைத்து உருவாக்கினார். அன்நூலில் கடவுளை எதிர்க்கும் சாத்தான் நாயகனாக நிமிர்ந்து நிற்பான். அவன் பேசும் வரிகள் நம்மை என்னவோ செய்யும். அவனின் நியாயங்களை அடுக்கித்தள்ளுவார் மில்டன். கடவுளை எதிர்த்து புரட்சி செய்த சாத்தான் உடனிருப்பவர்களை எழுந்த நிற்கவைக்க முயல்வான். இதன் மூலம்
மக்களை கடவுள் போல கருதிக்கொண்டு இருந்த மன்னனை எதிர்க்க சொல்லி தூண்டினார் மில்டன். அவரின் நூலுக்கு எண்ணற்ற தடைகள் உண்டாயின. சில ஆயிரம் பிரதிகள் விற்கவே வழியில்லாமல் நூல் நின்றது.

நூல்களை தணிக்கை செய்தபின்னரே வெளியிடுவோம் என்று அரசு சொன்னது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தன்னுடைய எரோபேஜிடிகா நூலை அவர் துண்டு பிரசுரமாக வெளியிட்டார். மில்டனின் இந்த செயல்கள் அவரின் முதல் மணவாழ்வை பாதித்தது. இவரைவிட்டு அவரின் மனைவி நீங்கினார். இவரோ கண்டுகொள்ளவே இல்லை. மூன்று வருடங்கள் கழித்து திரும்பி வந்த அவர் மரணமடைந்தார். அடுத்த திருமணம் நிகழ்ந்தது. அந்த மனைவியும் சீக்கிரம் இறந்து போனார்.
கண் பார்வை மங்கிக்கொண்டே வந்தது மில்டனுக்கு. அடுத்த திருமணத்தை வயதான காலத்தில் இவர் செய்து கொண்டது இவரின் மகள்களை கடுப்பேற்றியது. வெறுப்பை கொட்டினார்கள்.


"பருவங்கள் வருடத்தோடு வந்து போகின்றன ; எனக்கோ வசந்தத்தின் மோட்டோ, கோடையின் ரோஜாவோ வருவதே இல்லை. விலங்கு மந்தைகள்,மங்காத ஒளி ததும்பும் மனிதர்களின் முகங்கள் எதுவுமே எனக்கு தெரியவில்லையே ! என்னை மேகங்கள் மட்டுமே சூழ்ந்து கொண்டிருக்கின்றன. எங்கும் இருட்டு, இருட்டு, இருட்டு மட்டுமே !" என்று பார்வையை இழந்த மில்டன் எழுதினார். அவரின் புது மனைவி அன்பை பொழிந்தார்.

இருளில் மூழ்கி போயிருந்த அவர் எப்படி அதைப்பார்த்தார் என்று ஒரு கவிதையில் இப்படி சொல்கிறார்.


"வாழ்வின் பாதிப்பொழுது பேரிருளில் போனது எனக்கு
என் வெளிச்சத்தை எப்படி வெளியிட்டேன் நான் ?
என் அறிவை அழிக்க வருகிறது மரணம்
பயனற்று,பொலிவிழந்து வளைந்து நிற்கும் ஆன்மாவோடு
"எனக்கான வெளிச்சம் மறுக்கப்பட்டதா இறைவனே ?" என்று கேட்கிறேன் நான்
முணுமுணுப்போடு
 பதில் வருகிறது
"இறைவன் இதை செய்யவில்லை.
மனிதனின் செயல்கள் மகத்தானதை தருகின்றன.
சிறுசுமையை சுமப்பவர்கள் பேறு பெறுகிறார்கள்.
 எவன் நிலத்திலும்,நீரிலும் ஓயாமல்
உழைக்கிறானோ,காத்திருந்து,பொறுத்திருந்து போராடுகிறானோ பேருலகே
கொண்டாடும் அவனை !"

"நரகம் சொர்க்கமாவதும்,சொர்க்கம் நரகமாவதும் நன்னெஞ்சின் நளினச்செயலே !" என்று எழுதினார் மில்டன். வாழ்க்கையை பார்வை போனபின் கொண்டாடினார் மில்டன்.  மீண்ட சொர்க்கம் என்று இறைவனைப்புகழ்ந்து பாடல்கள் எழுதினார். அவரின் கவிதைகளை உலகமே கொண்டாட ஆரம்பித்தது. மில்டனின் தாக்கம் அவரின் காலங்களை கடந்தும் சென்றது. அவருக்கு முன்னூறு ஆண்டுகள் கழித்து செவித்திறன், பார்வை, பேச்சு என எவையும் இல்லாத நிலையிலும் சாதிக்க முனைந்த ஹெலன் கெல்லருக்கு மில்டனே வெளிச்சம் ஆனார். ஜான் மில்டன் அமைப்பு
ஒன்றைத் தொடங்கினார் கெல்லர்.

மில்டனின் காதல் ததும்பும் கவிதை ஒன்று :

அறுபது வருடங்களில் காதலை
கதைத்துவிட முடியாது என கற்றுக்கொண்டேன்


பிரியம் சொல்லும் பெருஞ்சொற்கள் பிரிந்தே ஏமாற்றம் தருகின்றன

எது அது  எனும் கேள்விகள் தவிர்த்து


மலர்வனத்தின் ரோஜா நறுமணம் போல பொழிகிறது அது...

நீ போய்விட்டாய்

பெருங்கடலும், கண்டமும் நடுவில்
நின்று நகைக்கின்றன

நாம் இணைந்து பார்த்த எல்லாவற்றில் இருந்து
எதோ சில ஏனோ திரும்பவருகின்றன

வென்ற ஒரு புது படைப்பை பின்னுகிறோம் நாம்
விசித்திரமான, விரகம் தரும் ஒன்று நடக்கிறது

எதிர்த்தும்,வாதிட்டும் வதைந்த
வாழ்க்கையின் சிக்கல்கள் உடைத்து விடுதலை வருகிறது

பெருவாழ்வின் புதுகீதம் பாடுவோம் நாம் :
கடவுள் பின்னும் இழைகளில் பிணைந்த
புத்துலகு பிறந்தது, அதன் பிரிக்க முடியா அங்கம் நாம் !

பூ.கொ.சரவணன்



1.கெட்ட விஷயங்கள் காற்றைப்போல் ஆகி விரைவில் பரவும். நல்ல விஷயங்கள் தாமதிக்கும்.

2.உங்கள் கௌரவம் உங்கள் நாக்கின் நுனியில்தான் இருக்கிறது.

3.நாம் எதைப் பெற்றிருக்கிறோம் என்பது முக்கியமில்லை பெற்றிருப்பதை எப்படி அனுபவிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

4.மிக நல்ல புத்தகங்களை முதலியேயே படித்துவிடு இல்லையெனில் அவற்றைப் படிக்க உனக்கு வாய்ப்புக் கிடைக்காமலே போய்விடும்.

5.உலகிலேயே மிகப் பெரிய சுமையாக விளங்குவது மூட நம்பிக்கைதான்.

6.துன்பம் இல்லாமல் இன்பம் இல்லை.

7.என் அக வீணையை ஓர் அற்புத சக்தி மீட்டுகிறது! நான் சிந்திக்காமலேயே ஏதோ ஒன்று என் உள்ளத்தில் பேசுகிறது! அதையே நான் எழுதுகிறேன்!

8.பழிவாங்குதல் ஆரம்பத்தில் இனிக்கும் ஆனால் சிறிது காலம் சென்றபின் கசப்பாக மாறிவிடும். அது எய்தவனையே திரும்பி வந்து கொல்லும்.

9.லட்சியத்தை அடைவதில் நேர்மை வேண்டும்

10.மூடர் இறுதியில் செய்வதை, அறிவாளி ஆரம்பத்திலேயே செய்துவிடுவார்
















No comments:

Post a Comment