MANOBALA , THE COMEDIAN,DIRECTOR BORN 1953 DECEMBER 8




MANOBALA , THE COMEDIAN,DIRECTOR 
BORN 1953 DECEMBER 8



மனோபாலா, நன்கறியப்படும் தமிழ்த் திரைப்பட இயக்குனரும் நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார்

தொழில்
மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.[5] ஜூலை 2009 வரை 175 திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலஹாசனுக்கும் இவருக்கும் இடையே துவக்கத்தில் இருந்த நெருக்கம், இயக்குனர் சங்கப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டது. இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை இல்லாமல் போனது. திரைப்படத்துறைக்குள் தனது நுழைவுக்கும் மேம்பாட்டுக்கும் காரணமாக இருந்த கமலஹாசனுக்கு இவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.[6]

 பிக் பாஸ் சீசன் 3ல நடக்குறது எதுவுமே நெஜம் கெடையாதுங்க. அத்தனையும் சொல்லி வச்சி செய்யுறாங்க அப்பிடின்னு டைரக்டர் மனேபாலா ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு சொல்றாரு.

விஜய் டிவில இப்போ பிக் பாஸ் நிகழ்ச்சியோட சீசன் 3 ஒளிபரப்பாகுது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி தொடங்கி இன்னிக்கோட 42 நாள் ஆகிடிச்சி. சீசன் 3 ரொம்ப சுவராஸ்யமா நடந்துட்டு வருது..
இந்த வாரம் யார் வெளிய போவாங்க, வைல்டு கார்டு மூலமா யாரு உள்ள வருவாங்கன்னு தெரிஞ்சிக்கிறதுக்கு எல்லாருமே ரொம்ப ஆவலோட இருக்காங்க. வனிதா, மீராமிதுன்னு பல சண்டைகோழிங்களை வெளியே அனுப்பிட்டாங்க. இந்த நெலமையில, பிரபல டைரக்டரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா, ஒரு தனியார் பொழுதுபோக்கு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி கொடுத்தாரு. அப்போ பிக் பாஸ் நிகழ்ச்சிய பத்தியும், அதுல பங்கேத்துக்கிட்ட போட்டியாளர்கள பத்தியும் தன்னோட கருத்த ரொம்ப வெளிப்படைய சொல்லி இருக்காரு. அவரு என்ன சொல்லி இருக்காருன்னா, மொதல்ல, அதுல நடக்குறது எதுவுமே நெஜம் கெடையாது, எல்லாமே பொய்யி, அத்தனையும் நடிப்பு தான் அப்பிடிங்கறார். அது மட்டுமில்லாம, பிக் பாஸ் நிகழ்ச்சியே சுத்த வேஸ்டு, டோட்டல் லாஸ், வேஸ்ட் ஆஃப் டைம் அப்பிடின்னு ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பேசுனாரு. அட, இவ்வளவு ஏங்க, நம்ம டைரக்டர், நடிகர் சேரன் எவ்வளவு பெரிய ஆளு, அவரெல்லாம் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள்ல கலந்துக்கவே கூடாதுங்க. அவரோட மதிப்பே போயிடிச்சிங்க, தரமே கெட்டுப் போயிடுது அப்பிடின்னு ஒரு பிடி பிடிக்கிறாரு.

ஒவ்வொரு தனி மனுஷனோட ஒழுக்கமும் பிக் பாஸுல வேற மாதிரி திணிக்கப்படுது. அட இவ்வளவு ஏங்க, என்னையுந் தான் அந்த நிகழ்ச்சிக்கு கூப்புட்டாங்க. ஆனா நா ஒத்த கால்ல நின்னுகிட்டு வேணான்னு சொல்லி கையெடுத்து கும்பிடு போட்டு அவங்கள அனுப்பிட்டேன். அவங்க அவங்க லைஃப் அவங்க அவங்களோட கைலதான் இருக்கு. மத்தவங்க பொரனி பேசியே வாழ்க்கைய ஓட்றது வெட்டி வேல, அப்பிடின்னு ரொம்ப கோவமா சொல்லி முடிச்சாரு மனோபாலா
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும் தற்போதைய காமெடியனுமான மனோபாலா ஒரு டிவி சீரியலில் நடித்து வருகிறார். இதுபற்றி கேட்டபோது ‘இதற்கு முன்பு சினிமாவில் வாய்ப்பு குறைந்தால் சீரியல்’ என்ற நிலை இருந்தது. இப்போது அப்படி இல்லை.

பழைய வி‌ஷயங்களையே யோசித்துக் கொண்டிருந்தால் சினிமாக்காரர்கள் வேஸ்ட். பிரகாஷ்ராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் இப்போது 'வெப் சீரிஸ்' தயாரிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். நானும் ஒரு 'வெப் சீரிஸ்' தயாரித்துக் கொண்டிருக்கிறேன். படம் கிடைக்காமல் நான் சீரியலுக்கு வரவில்லை.

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சீமராஜா', கார்த்தி நடிக்கும் `கடைக்குட்டி சிங்கம்' போன்ற படங்களில் நடித்துள்ளேன். அடுத்து சூர்யா படத்தில் நடிக்கிறேன். இயக்குனர்களுக்கு பிடித்த நடிகன் நான்.

அதனால்தான் இத்தனை வாய்ப்புகள் வருகிறது. நீண்ட நாட்கள் கழித்து சேரன் இயக்க இருக்கும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன். தம்பி ராமையா மகன், எம்.எஸ்.பாஸ்கர்னு பெரிய பட்டாளமே அதில் நடிக்கிறோம்’ என்று கூறினார்

பெண் என்றால் சிடி.. ஆண் என்றால் டீக்கடை.. வாட்ஸ்ஆப்பில் அனுப்பியதாக மனோபாலா மீது புகார்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறப்பட்ட புகாரை நடிகர் மனோபாலா மறுத்துள்ளார். தனது செல்போனை யாரோ தவறாக பயன்படுத்திவிட்டதாக கூறிய அவர் இதுகுறித்து போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்துள்ளார்.

நடிகர் மனோபாலா பல ஆண்டுகளாக அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக உள்ளார். இந்நிலையில் இவர் மீது நங்கநல்லூரைச் சேர்ந்த சீனி சரவணன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் நேற்று புகார் அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் மறைந்த ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. நடிகர் மனோபாலா சக நடிகர்களின் வாட்ஸ்அப் குரூப்பில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குறித்தும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்தும் தரக்குறைவாக விமர்சித்துள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.பதறிக்ககொண்டு கமிஷனரிடம் வந்த மனோபாலா
இந்நிலையில் இன்று காலை சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு வந்த மனோபாலா ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் படப்பிடிப்புக்குபோகும்போது ஷாட் இடைவேளையின்போது எனது செல்போனை வைத்துவிட்டு போவது வழக்கம்.யாரோ அந்த வேலை செய்துட்டாங்க அப்போது யாரோ என் செல்போனை தவறாக பயன்படுத்தி, அதை உள்நோக்கத்தோடு அனுப்பி இருக்கக் கூடும். நான் அதிமுகவில் கடந்த 15 வருடங்களாக உறுப்பினராக மட்டுமில்லாமல் நட்சத்திர பேச்சாளராகவும் உள்ளேன்.புகழுக்கு களங்கம் ஏற்படுத்த திட்டம் என்மேல் என் புகழ்மேல் களங்கம் கற்பிக்கவும், அவதூறு பரப்பவும் திட்டமிட்டு செய்த செயலாக தெரிகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் என்றும் அதிமுக விசுவாசிதான் என புகார் மனுவில்
கூறியுள்ளார்.கட்சியில் இருக்கிறீர்களா? புகாரை அளித்துவிட்டு வெளியே வந்த மனோபாலாவிடம் செய்தியாளர்கள் ஏன் அதிமுக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை? கட்சியில் இருக்கிறீர்களா என்று கேட்டனர்.நான் அதிமுக விசுவாசி,என்னை நம்புங்க அதற்கு பதிலளித்த மனோபாலா, நான் என்றும் அதிமுக விசுவாசிதான் நம்புங்க. நான் பொதுக்குழு செயற்குழு உறுப்பினராக இல்லை. நான் ஒரு நட்சத்திர பேச்சாளர் அவ்வளவுதான். எங்களைப் போன்றவர்கள் 44 பேர் நடிகர் குண்டுகல்யாணம் தலைமையில் சசிகலாவை சந்தித்து ஆதரவு தெரிவித்துவிட்டு வந்தோம் என்றார்.

நீண்ட வருடங்களாக தமிழ் சினிமாவில் ஒரு தனி பாணியில் நகைச்சுவை ஏற்படுத்தி அனைவரையும் சிரிக்க வைத்தவர் மனோபாலா. அவரின் தோற்றமே அவருக்கு பெரும் பக்க பலம் என கூறலாம் .

அவரின் மகன் ஹரீஷ்க்கும், பிரியா என்பவருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. அதனையடுத்து மாலையில் கிண்டியில் இருக்கும் ஆடம்பர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ், கவுண்டமணி, உதயநிதி, விவேக், சத்யராஜ், சிவகார்த்திகேயன், சதீஷ், சரண்யா பொன்வண்ணன், பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், ஹெச்.வினோத் என பலர் பங்கேற்று கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

PARAVAS OF TAMILNADU

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER