Wednesday 1 August 2018

WOODY ALLEN ,ACTOR TO DIRECTOR BORN 1935 DECEMBER 1






WOODY  ALLEN ,ACTOR TO DIRECTOR 
BORN 1935 DECEMBER 1





வுடி ஆலன், ஆங்கிலம்: Woody Allen (பிறப்பு: ஆலன் ஸ்டீவர்ட் கொனிக்ஸ்பெர்க்; டிசம்பர் 1, 1935) அமெரிக்காவைச் சேர்ந்த திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், நகைச்சுவையாளர், நாடக ஆசிரியர் மற்றும் இசைவாணர். 50 வருடங்களுக்கு மேலாக இத்துறைகளில் பரவி இருப்பவர்.

இவர் 1950களில் நகைச்சுவை எழுத்தாளராக தொலைகாட்சிகளுக்கு நகைச்சுவைகளும் திரைகதைகளையும் எழுதி பின்னர் பல்வேறு நகைச்சுவை துணுக்குகளையும் புத்தகமாக வெளியிட்டு உள்ளார். 1960களின் ஆரம்பத்தில் ஆலன் மேடை நகைச்சுவையாளர் ஆனார், வழக்கமான நகைச்சுவைகளை கலைந்து சொட்றொடர்களில் ஜாலம் காட்டினார்..[2] நகைச்சுவையாளராக இவர் தன் நிஜ வாழ்வில் இருந்து வேறுப்பட்டு; தன்னை பாதுகாப்பற்ற, முக்கியத்துவமற்ற அறிவாளியாக தன்னை உருவகித்து கொண்டார். 2004ல் இவர் காமெடி சென்டரல் எனும் அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனத்தால் நூறு நகைச்சுவையாளர்களில் நான்காவதாக வரிசைப்படுத்த பட்டார். அதே ஆண்டு ஒரு இங்கிலாந்து ஆய்வில் இவர் மூன்றாவது சிறந்த நகைச்சுவையாளராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

1960களின் இடைப்பட்ட காலத்தில் ஆலன் திரைப்படங்களை எழுதி, இயக்கி வந்தார். இவை பெரும்பாலும் அமளிகள் மிக்க இன்பியல் திரைபடமாகவே இருந்து வந்தன. 1970களில் ஐரோப்பிய கலை திரைப்படங்களின் தாக்கத்தால் பின்னர் ஆலன் தத்ரூபமான படங்களை இயக்கினார். இவர் எப்போதும் 1960-1970களின் நியூ ஹாலிவுட் வேவ் ஆஃப் பிலிம் மேக்கர்ஸின்] ஒரு பகுதியாகவே குறிப்பிடப்படுகிறார்.[3] ஆலன் தன் திரைப்பட்ங்களில், நகைச்சுவையாளராக தன்னை எவ்வாறு உருவகித்து கொண்டாரோ அவ்வாறே நடித்தும் வந்தார். ஆலன் நடித்த சில சிறந்த திரைப்படங்களாக அண்ணீ ஹால்(1977), மன்ஹாட்டன் (1979), ஹன்னா அண்ட் ஹர் ஸிஸ்டர்ஸ்(1986), மற்றும் 'மிட்நைட் இன் பாரிஸ்(2011)' போன்றவற்றை கூறலாம்.

ஆலன் 23 முறை அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு 4 விருதுகளை பெற்றுள்ளார்; அவற்றில், மூன்று சிறந்த மூல திரைக்கதைக்கும், ஒன்று சிறந்த இயக்குநர்க்கும் கொடுக்கபட்டது. வேறு எந்த திரைக்கதை எழுத்தாளர்களை விடவும் அதிக முரை திரைக்கதைக்கான அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்ற பெருமை இவரையே சேரும். மேலும் இவர் 9 பிர்டிஷ் அகாடமியின் பாஃப்டா விருதுகளையும் பெற்றுள்ளார். ஆலன் அவ்வபோது மான்ஹாட்டனில் உள்ள சிறிய இடங்களில் கிளாரினெட் எனும் இசைகருவியில் இசை நிகழ்ச்சி நிகழ்த்துவது உண்டு.

ஆரம்ப வாழ்க்கை

ஆலன் உயர்நிலை பள்ளி மாணவனாக, 1953
ஆலன்; ஆலன் ஸ்டீவன் கொனிக்ஸ்பெர்க் ஆக தி பிராங்க்ஸ்,நியூயார்க்கில் பிறந்து, புரூக்கிலின்,நியூயார்க்கில் வளர்ந்தார். இவரது தாய், 'ணெட்டி'(பிறப்பு: ஷெர்ரி, நவம்பர் 8, 1906 – ஜனவரி 27, 2002) அவரது குடும்ப உணவகத்தில் கணக்கெழுத்தர்; தந்தை, 'மார்டின் கொனிக்ஸ்பெர்க்' (டிசம்பர் 25, 1900 - ஜனவரி 13,2001), நகை செதுக்குநர் மற்றும் உணவக பணியாளர். இவர் யூத மதத்தை சார்ந்தவர், இவரது மூதாதையர்கள் ஆஸ்ட்ரியா மற்றும் ரஷ்யாவில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள், யிட்டிஷ், ஹீப்ரூ, ஜெர்மன் மொழிகளை பேசக்கூடியவர்கள். இவரது பெற்றோர் இருவரும் மாஹாட்டனில் பிறந்து வளர்ந்தனர். 1943ல் பிறந்த ஆலனின் தங்கை 'லெட்டி' மிட்வுட், புரூக்கிலினில் வளர்ந்தார்.

ஆலனின் குழந்தை பருவம் மகிழ்ச்சியானதாக இருக்கவில்லை. அவரது பெற்றோர்க்கு இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது. ஆலனுக்கும் அவனது கடுமையான, ​​எளிதில் கோபம் அடைகிற அம்மாவுக்கும் இடையேயான உறவும் சிறப்பானதாக இல்லை. ஆலன் ஆரம்பத்தில் சிறிது ஜெர்மன் மொழி பேசுவார்; அப்போது மதநல்லிணக்க கோடைக்கால முகாம்களில் காட்டுமிராண்டித்தனமாக பிற இன மற்றும் சமயத்தை சேர்ந்த குழந்தைகளால் தாக்கப்பட்டதாக பின்னர் நகைச்சுவையாக கூறினார். அதன் பிறகு எட்டு வருடங்கள் அவர் ஹீப்ரூ பள்ளியில் படித்தார், பின்னர் அவர் பப்ளிக் ஸ்கூல்99 இலும் (தற்போது ஐசாக் அசிமோ ஸ்கூல் ஃபார் சயின்ஸ் அண்ட் லிட்ரேச்ச்ர்) மிட்வுட் ஹை ஸ்கூலிலும் படித்தார். அந்த சமயம் அவ்ர் 968 கிழக்கு 14வது தெருவில் உள்ள குடியிருப்பில் வாழ்ந்து வந்தார். அப்போது அவர் பள்ளியை விட பேஸ் பால் எனும் விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வமாக இருந்தார். அவரது வலிமையான கைகள் இதற்க்கு மிகவும் உதவியாக இருந்தது. அவரது திறமையான சீட்டு கட்டு மற்றும் மாய வித்தைகளால் மாணவர்களை ஈர்த்தார். பணம் திரட்ட இவர் டேவிட் ஓ. ஆல்பெர் என்பவர் மூலம் செய்தித்தாள்களுக்கு நகைச்சுவை துனுக்குகளை எழுதி கொடுத்தார். இவர் தன்னை வுடி ஆலன் என்றே அறிமுகப்படுத்த தொடங்கினார். பின்னர் 17 வயதில் சட்டபூர்வமாக இவர் தன் பெயரை ஹேவுட் ஆலன் என்று மாற்றி கொண்டார். அப்போது இவர் தன் இரு பெற்றோரையும் விட அதிகம் சம்பாதிக்க தொடங்கி இருந்தார். பள்ளிக்கல்விக்கு பின் இவர் தன் உயர் கல்விக்காக நியூயார்க் பல்கலைலழகத்தில் தகவல்தொடர்பு மற்றும் திரைத்துறை குறித்து பயின்றார். பின்னர், அத்துறை குறித்து விரிவாக கற்க நியூயார்க் சிட்டி காலேஜில் சேர்ந்து தேர்வுகளில் தோற்றதால் சுயமாக கற்று பின்னர் ஒரு புதிய பள்ளியில் கற்ப்பிக்கவும் தொட்ங்கினார்.

வாழ்க்கை
எழுத்தாளர், நகைச்சுவை நடிகர்

ஆரம்பத்தில் இவர் ஹர்ப் ஷ்ரைனர் என்னும் நகைச்சுவை நடிகருக்கு முழு நேர எழுத்தாளாரக வாரம் 25$ சம்பாதித்து வந்தார். 19 வயதில் ஆங்கில தொலைக்காட்சிகளுக்கு இவர் நாடகங்கள் எழுதி வரும்ப்பொழுது 1500$ சம்பாதித்தார். 1961ல் இவர் நாடக நடிகராக அரங்கேறினார். பாதுகாப்பற்ற, முக்கியத்துவமற்ற அறிவாளியாக நடித்து இரவு நேர விடுதிகள், மற்றும் தொலைக்காட்சி நேயர்களுக்கு தவறாது தன் நகைச்சுவையை அளித்து வந்தார். பின்னர் நகைச்சுவையில் தன் வார்த்தை பிரயோகத்தால் புதுமை புகுத்தி முக்கியத்துவம் வாய்ந்தார். ஆலன் அமெரிக்காவில் பிரபலமான காண்டிட் காமெரா எனும் தொடர் நிகழ்ச்சிக்கு எழுதி சில பகுதிகளில் காட்சி கொடுத்தும் உள்ளார். பின்னர் தி நியூயார்க்கர் பத்திரிக்கைக்கு சிறுகதைகளும், சித்திர தலைப்புகளும் கொடுத்து வந்தார். அதே பத்திரிக்கையின் 4 பாரம்பரிய நகைச்சுவையாள்ர்களின் படைப்புகளை நவீன படுத்தினார். ஆலன் தன் 4 படைப்புகளுக்கு பிறகு வெற்றிக்கரமான எழுத்தாளர் ஆனார். 2010ல் அவரது படைப்புகள் ஒலி புத்தகமாக வெளியாகி, பின்னர் சிறந்த ஒலி புத்தகத்துகான கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

நாடக ஆசிரியர்

ஆலன், பிலெ இட் அகைன், சாம் குழுவினருடன் (1969)
ஆலன் நாடக ஆசிரியராக வெற்றி பெற்றப்பின் 1966ல் டோண்ட் ட்ரிங்க் தி வாட்டர் எனும் நாடகத்தை எழுதினார். அது 1969ல் ஹோவர்ட் மோரிஸ் என்பவரால் படமாக்கப் பட்டது, அப்படம் ஆலனை கவராததால் 1994ல் ஆலன் அப்படத்தை தொலைக்காட்சிக்காக தானே இயக்கி நடித்தார். அடுத்து ஆலன் எழுதிய பிலே இட் அகைன், சாம் பிப்ரவரி 12,1969ல் வெளியாகி 453 நிகழ்ச்சிகள் கண்டது. பின்னர், இந்த நாடகம் ஹெர்பெர்ட் ராஸ் என்பவரால் படமாக்கபட்டது. 1981ல் ஆலனின் நாடகமான தி ஃப்லோடிங்க் லைட் பல்ப் 65 நிகழ்ச்சிகளை கண்டது.

ஆரம்ப திரைப்படங்கள்
ஆலனின் முதல் திரைபடம் 1965ல் சார்லஸ் கே. ஃபெல்ட்மானின் தயாரிப்பான வாட்'ஸ் நியூ புசிகாட். இதற்கு ஆலன் திரைக்கதை எழுதினார். ஆனால் இப்ப்படத்தின் இறுதி தயாரிப்பு ஆலனுக்கு திருப்தி அளிக்கவில்லை, இதுவே ஆலன் தான் எழுதும் திரைப்படத்தை இயக்க உந்துதலாக இருந்தது. இவ்வாறு ஆலன் இயக்கிய முதல் திரைபடம் வாட்'ஸ் அப் டைகர் லில்லி (1966). 1967ல் ஆலன் ஜிம்மி பாண்டாக 007 ஸ்பூஃப் காசினொ ராயலில் நடித்து உள்ளார்.


ஆலன் டேக் தி மனி அண்ட் ரன், திரைப்படத்தில் 1969
1969ல் ஆலன் டேக் தி மனி அண்ட் ரன் எனும் தான் இயக்கி நடித்த படம் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை பெற்றது. இவர் பின்னர் யுனைடட் ஆர்டிஸ்ட் உடனான ஒப்பந்த்தில் பல்வேறு படங்களை இயக்கினார். அதன் பின்னர் வுடி ஆலனின் பிரபலமான ஆனி ஹால் படம் வெளி வந்து சிறந்த திரைப்படம், சிறந்த நடிகைக்கான விருது டையானெ கீட்டனக்கும், சிறந்த மூல திர்க்கதை, சிறந்த இயக்குநர் என 4 அகாடமி விருதுகளையும் வென்றது. இப்படம் அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்டிடூடின் 100 சிறந்த திரைப்படங்களில் 35வதாகவும், 100 சிறந்த நகைச்சுவை படங்களில் 4வதாகவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 1979ல் வெளிவந்த மான்ஹாட்டன் திரைப்படம் நியூயார்க்க்கு மரியாதை செலுத்தும் திரைப்படமாகவே கருதப்படுகிறது.

1980

1980களில் வெளிவந்த ஆலனின் திரைப்படங்கள் நகைச்சுவயாகவே இருந்தாலும் அவை ஐரோப்பிய படங்கள் குறிப்பாக இங்க்மர் பெர்க்ம,ன் ஃபெடரிகொ ஃபெல்லனி ஆகியோரின் படங்களின் தாக்கத்தால் சிறிது துயரமும், தத்துவமும் நிறைந்ததாக இருந்தது. ஆலனின் இவ்வாறான படங்களாக ஹன்னா அண்ட் ஹெர் சிஸ்டர்ஸ் மற்றும் க்ரைம்ஸ் அண்ட் மிஸ்டீமனர்ஸ்'ஐ குறிப்பிடலாம். ஆலன் காட்சி வியாபாரத்தை பற்றி 3 படங்களை இயக்கி உள்ளார்: பிராட்வே டானி ரோஸ், தி பர்பில் ரோஸ் ஆஃப் கைரொ மற்றும் ரேடியோ டேஸ் ஆகும். ஆலன் நியூயார்க் மக்களை பற்றி ஒரு குறும்படங்கள் இயக்கி உள்ளார், இப்படங்கள் அமெரிக்க பாக்ஸ் ஆபிசில் சக்கை போடு போட்டன.

1990

ஆலனின் 1992ல் வெளியான ஷாடௌஸ் அண்ட் ஃபாக் திரைப்படம் ஜெர்மன் வெளிபாட்டாளர்களுக்கு மரியதை செய்யபட்ட படமாகும். பின்னர் ஆலன் ஹஸ்பண்ட்ஸ் அண்ட் வைவ்ஸ்(1992) திரைப்பட்த்திற்க்காக 2 ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கபட்டார்: சிறந்த துணை நடிகை- ஜுடி டேவிஸ், சிறந்த மூல திரைக்கதை- ஆலன். 1994ல் வெளியான புல்லட்ஸ் ஒவர் பிராட்வே மற்றும் 1996ல் வெளியான எவிரிஓன் சேஸ் ஐ லவ் யூ திரைப்படத்திர்க்கு ஆலனுக்கு அகாடமி விருது வழங்கபட்டது. 1995ல் வெளியான மைட்டி அஃப்ரோடைட் படம் மிரா சர்வினொவுக்கு அகாடமி விருது பெற்று தந்தது. ஆலனின் 1999 இசையை மையமாக கொண்ட ஸ்வீட் அண்ட் லோ-டவுன் படம் 2 அகாடமி விருதுக்கு பரிந்துரைக்க பட்டது. 2009ல் ஜஸ்ட் ஷூட் மீ எனும் நிகழ்ச்சியில் மை டின்னர் வித் வுடி என்ற பகுதி வுட்ய் ஆலனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இடம்பெற்றது. ஆலன் 1998ல் வெளியான் ஆன்ட்ஸ் எனும் இயங்குபடத்திற்க்கு முதன்மை குரல் கொடுத்தார்.

2000
2000த்தில் வெளியான் ஸ்மால் டைம் க்ரூக்ஸ் எனும் படம் 1942ல் வெளியான லார்செனி, இன்க் போல இருப்பதாக விமர்சனம் எழுந்த போது வுடி ஆலன் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். பின்னர் ஆலன் மிகுந்த பொருட் செலவில் எடுத்த தி கர்ஸ் ஆஃப் தி ஜேட் ஸ்கார்பியன் (26 மில்லியன் டாலர்), ஹாலிவுட் எண்டிங்க், மெலிண்டா அண்ட் மெலிண்டா மற்றும் எனிதிங்க் எல்ஸ் முதலியவை மிகுந்த மோசமான விமர்சனங்களுக்கு உள்ளாகி வெறும் 4 மில்லியன் டாலரை ஈட்டி தந்தது. 2001ல் ஆலன் அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்ஸின் சக உறுப்பினறாக தேரந்து எடுக்கப்பட்டார். 2005ல் வெளியான மாட்ச் பாயின்ட் திரைபடம் ஆலனின் பத்தாண்டுகளில் வெளியான சிறந்த திரைப்படமாக விமர்சிக்கப்பட்டது மேலும் 1998கிற்கு பிறகு ஆலனின் இப்படம் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கபட்டது. 1987க்கு பிறகு கோல்டன் குளோப் விருதுக்கும் பரிந்துரைக்கபட்டது. 2007ல் விக்கி கிரிஸ்டினா பார்ஸீலோனா எனும் திரைப்படத்தை பார்ஸீலோனா, ஒவீடோ ஆகிய இடங்களில் திரையாக்கினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வறவேற்ப்பை பெற்று சிறந்த இசை அல்லது நகைச்சுவை திரைப்படத்திற்க்கான கோல்டன் குளோப் விருதினையும். சிறந்த துணை நடிகைக்கான விருது அப்பட நடிகை பெனெலப் குருஸ்க்கும் கிடைத்தது. 2009ல் வயது முதிர்ந்த ரசிகர்களை மனதில் வைத்து படமாக்கினார்; அப்படமே வாட் எவர் வர்க்ஸ் இப்படம் இருண்ட நகைச்சுவையை சேர்ந்தது எனும் விமர்சனத்தை பெற்றது.

2010

செப்டம்பர் 23, 2010ல் ஆலனின் யூ வில் மீட் ஏ டால் டார்க் ஸ்ட்ரேஞ்சர் படம் முதன்முறையாக கேன்ஸ் திரைப்ட விழாவிலும், செப்டம்பர் 12, 2010ல் டொரன்டொ சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையாக்கபட்டது. மே 12, 2011ல் ஆலனின் ஏ மிட்நைட் இன் பாரிஸ் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடபட்டது. இப்படம் ஆலனின் முந்தைய திரைப்படமான ஹன்னா அன்ட் ஹர் ஸிஸ்டர்ஸ் திரைப்படதை விட பெரிய வெற்றியை கண்டது. தன் அடுத்த படமான டூ ரோம் வித் லவ் 2012ல் வெளியானது இப்படம் இத்தாலியன், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளின் வரிவடிவத்தை கொண்டு இருந்தது. ஆலனின் வெகு சமீப திரைப்படமான ப்ளூ ஜாஸ்மின் 2013 கோடையில் வெளியானது.

எதிர்கால திட்டங்கள்
நீண்ட வருடங்களாக ஆலனுக்கு நியூ ஆர்லியன்ஸில் பிறந்த ஜாஸ் எனும் இசை வடிவத்தை பற்றிய ஒரு திரைப்படத்தையும் அமெரிக்கன் ப்ளூஸ் எனும் இசை வடிவத்தை பற்றிய திரைபடத்தையும் படமாக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம், ஆனால் இப்படத்தை உருவாக்க 80$ முதல் 100$ மில்லியன் வரை ஆகும் என்பதால் அப்படத்தை இப்போது எடுக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். பிப்ரவரி 2012ல் ஆலன் புல்லட்ஸ் ஓவர் பிராட்வே படத்தை மையமாக கொண்ட ப்டத்தை 2013ல் வெளியிட போவதாக அறிவித்து இருந்தார்.

சினிமா உலகில் தன் தனித்தன்மை

வுடி ஆலனின் இயற்க்கை வடிவளவான சிலை, ஓவீடோ, ஸ்பெயின்.
ஆலன், தன் சினிமா வாழ்க்கையில் இயக்குநராக, திரைக்கதை எழுத்தாளராக, நடிகராக கணிசமான அளவு விருதுகளையும், பிற மேன்மைகளையும் திரைப்பட விழாக்களிலும் இன்ன பிற தேசிய திரைப்பட விருது நிக்ழ்ச்சிகளிலும் பெற்று உள்ளார்.

ஆலனின் திரைப்படம் ஆனி ஹால் 1977ல் 4 அகாடமி விருதுகளை பெற்ற்து, அதில் சிறந்த திரைப்படத்துக்கான விருதும் அடங்கும்.*
மே 2, 1977ல் தி நியூயார்கர் இதழுக்கு ஆலன் எழுதிய தி குகல்மாஸ் எபிசோட் என்ற சிறு கதைக்கு 1978ல் ஓ.ஹென்ரி விருது பெற்றார்.
ஆலன் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான சீசர் விருதினை இருமுறை தன் படங்கள் 1980ல் மான்ஹாட்டனுக்கும், 1986ல் தி பர்பில் ரோஸ் ஒஃப் கைரொவுக்கும் பெற்றார். 7 முறை இவ்விருதிற்க்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார்.
1986ல் ஆலன் தி பர்பில் ரோஸ் ஒஃப் கைரொ படத்திற்க்கு சிறந்த திரைக்கதைக்கான கோல்டன் குளோப் விருதினை பெற்றார். பின் 2009ல் இதே விருதினை சிறந்த மோஷன் பிக்சர்க்காக விக்கி கிரிஸ்டினா பார்சீலோனா படத்திற்க்கு பெற்றார். 2012ல் மிட்நைட் இன் பாரிஸ் படத்திற்க்கு சிறந்த திரைக்கதைக்கான விருதினை பெற்றார். இப்படம் சிறந்த மோஷன் பிக்சர், சிறந்த நடிகர்/இயக்குநர் - ஒவன் வில்சன்'க்கும் பரிந்துரைக்கபட்டது. ஆலன் இவ்விருதிற்க்கு 5 முறை சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை மற்றும் 2 முறை சிறந்த நடிகர்'க்காக பரிந்துரைக்கப்பட்டார்.
1995ல் நடந்த வெனிஸ் திரைப்பட விழாவில் ஆலன் கரியர் கோல்டன் லயன் எனும் விருதினை தன் வாழ்நாள் சாதனைக்கு பெற்றார்.
1996 ஆலன் வாழ்நாள் சாதனை விருதினை டைரக்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா'விடம் இருந்து பெற்றார்.
2002ல் ஆலன் ப்ரின்ஸ் ஆஃப் அஸ்டுரியாஸ் விருதினை பெற்றார். அதே சமயம் ஓவீடோ, ஸ்பெயின் நாட்டில் இயற்க்கை வடிவளவு சிலை வைக்கப்பட்டது.
2002ல் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆலனுக்கு பால்மே டீ பால்மேஸ் எனும் விருதினை தன் வாழ்நாள் சாதனைக்காக கொடுக்கப்பட்டது.
2005ல் ஐக்கிய ராஜ்ஜியம்(U.K)வில் நடந்த நகைச்சுவையாளரின் நகைச்சுவையாளர் எனும் தேர்தலில் ஆலன் 3வது சிறந்த நகைச்சுவையாளாரக தன் சக நகைச்சுவையாளர்களால் தேர்ந்துதெடுக்கப்பட்டார்.
ஜூன் 2007ல் பார்ஸிலோனா, ஸ்பெயினில் உள்ள 'பாம்பெ ஃபாப்ரா பல்கலைக்கழகம்' ஆலன்னுக்கு சிறப்பு டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவித்தது.
2010ல் ஆலன் முதல் ஆண்டு 20/20 விருதினை சிறந்த மூல திரைக்கதைக்காக கிரைம்ஸ் அண்ட் மிஸ்டீமனர்ஸ் பட்த்திற்க்கு பெற்றார். மேலும் இப்படத்திற்க்கான சிறந்த இயக்குநர்க்கு பரிந்துரை செய்யப்பட்டு, சிறந்த படதிற்க்கான விருதினை பெற்றார்.
மேலும் ஆலன் 2014ல் ஸெஸில் பி. டீமில் விருதினை தன் வாழ்நாள் சாதனைக்காக ஜனவரி 12, 2014ல் நடக்கும் 71வது ஆண்டு கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பெற இருக்கிறார்.

அகாடமி விருதுகள்
ஆலன் நான்கு அகாடமி விருதுகளை பெற்றுள்ளார்: சிறந்த மூல திரைக்கதைக்கான விருதினை மூன்று முறை; ஆனி ஹால்(1978)(மார்ஷல் பிரிக்மேன் உடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது), ஹன்னா அண்ட் ஹர் ஸிஸ்டர்ஸ்(1987) மற்றும் மிட்நைட் இன் பாரிஸ்(2011) ஆகிய படங்களுக்கும், சிறந்த இயக்குநர்க்கான விருது ஆனி ஹால்க்கும் பெற்றார். ஆலன், அகாடமி விருதுக்கு 23 முறை பரிந்துரைக்க பட்டிருக்கிறார்: பதினைந்து முறை திரைக்கதைக்கும், ஏழு முறை இயக்குநர்க்கும், ஒரு முறை நடிகரிக்கும் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார். ஆலன் வேறு எந்த திரைக்கதை எழுத்தாளரை விடவும் அதிக முறை அகாடமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார், அவை அனைத்தும் சிறந்த திரைக்கதைக்கான விருதாகும். அவர் மூன்று முறை ஏழு இயக்குநருக்கான விருதின் பரிந்துரையில் சமநிலையாக இருந்தார். ஆனி ஹால் மட்டுமே 4 அகாடமி விருதுகளை பெற்றது (சிறந்த திரைப்படம், சிறந்த மூல திரைக்கதை, சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த முன்னணி நடிகை - டையனெ கீடன்). இப்படம் 5வதாக ஆலனுக்கு சிறந்த முன்னணி நடிகர் விருதுக்கு பரிந்துரைக்கபட்டது. ஹன்னா அண்ட் ஹர் ஸிஸ்டர்ஸ், சிறந்த மூல திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை ஆகிய மூன்று விருதுகளையும் பெற்றது. மேலும் நான்கு விருதுகளுக்கு பரிந்துரை செய்யபட்டது அவற்றில் சிறந்த படமும், சிறந்த இயக்குநரும் அடங்கும். ஆலனின் நடிகர்கள் தன் படத்தில் வேலை செய்ததற்க்காக அதிக அகாடமி விருதுகளயும், பரிந்துரகளையும் பெறுவர், குறிப்பாக சிறந்த துணை நடிகர்/ சிறந்த துணை நடிகை; 1987ல் மைக்கேல் கைன் மற்றும் டையன்னெ வீஸ்ட் ஹன்னா அண்ட் ஹர் ஸிஸ்டர்ஸ் பட்த்திற்க்கும், 1995ல் டையன்னெ வீஸ்ட் மீண்டும் புல்லட்ஸ் ஓவர் பிராட்வே படத்திற்க்கும், 1996ல் மிரா சார்வினொ மைட்டி ஆஃப்ரொடைட் படத்திற்க்கும், 2009ல் பெனலப் குருஸ் விக்கி கிரிஸ்டினா பார்ஸிலோனா படத்திற்க்கும் பெற்றன்னர். இவ்விருது அகாடமியின் நட்பின் அங்கீகாரமாக இருந்த போதிலும் ஆலன் விழாவில் கலந்து கொள்வதோ விருது பெருவதையோ முற்றிலும் தவிர்ப்பார். இதற்க்கு அவர் பகிரங்கமாக கொடுத்த காரணம் 'தான் திங்கள் இரவு குழும கிளாரினெட்டில் இசை கச்சேரி செய்வதால் தான்'. என்பதாகும். பின்னர் 1974ல் ஏ.பி.சி. செய்தி தொலைக்காட்சியின் பேட்டியில் ஆலன் "விருதுகள் வழங்குவது என்பது முற்றிலும் ஒரு முட்டள்தனமான செயல். மற்றவர்களின் தீர்ப்போடு என்னால் ஒத்துப்போக முடியாது ஏனென்றால் அவர்கள் விருது கொடுக்கும் போது ஏற்றுக்கொள்ள வேண்டுமேயானால், அவர்கள் கொடுக்க தகுதி அற்றவன் என்று கூறும் போதும் அதை எற்றுக்கொள்ள வேண்டும்." ஆனால் இக்கூற்றை உடைக்கும் விதமாக 2002 அகாடமி விருது வழங்கும் நிகழ்ச்சியில் எந்த முன்னறிவிப்பும் இன்றி நிகழ்ச்சிக்கு வந்த அவர் 9-11 தாக்குதலுக்கு பிறகு தயரிப்பாளர்கள் தங்கள் படத்தை நியூயார்க்கில் படமாக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

பாஃப்டா விருது
ஆலன், ப்ரிட்டிஷ் அகாடமி ஆஃப் பிலிம் அண்ட் டெலிவிசன் ஆர்ட்ஸ் (பாஃப்டா) விருதினை பல்வேறு பிரிவுகளுக்காக, பலமுறை பெற்றும், பரிந்துரை செய்யப்பட்டும் இருக்கிறார். 1997ல் ஆலன் தன் வேளைகளுக்கு கௌரவ பாஃப்டா கூட்டுறவை பெற்றார்.

1978 - பெறபட்டது - சிறந்த இயக்கம் - ஆனி ஹால்
1978 - பெறபட்டது - சிறந்த திரைக்கதை - ஆனி ஹால் (மார்ஷல் ப்ரிக்மன் உடன் பகிர்வு)
1978 - பரிந்துரைக்கபட்டது - சிறந்த நடிகர் - ஆனி ஹால்
1980 - பெறபட்டது - சிறந்த திரைக்கதை - மான்ஹாட்டன் (மார்ஷல் ப்ரிக்மன் உடன் பகிர்வு)
1980 - பரிந்துரைக்கபட்டது - சிறந்த இயக்கம் - மான்ஹாட்டன்
1980 - பரிந்துரைக்கபட்டது - சிறந்த நடிகர் - மான்ஹாட்டன்
1984 - பரிந்துரைக்கபட்டது - சிறந்த திரைக்கதை - செலிக்
1985 - பெறபட்டது - சிறந்த மூல திரைக்கதை - பிராட்வே டேனி ரோஸ்
1986 - பெறபட்டது - சிறந்த மூல திரைக்கதை - தி பர்பில் ரோஸ் அஃப் கைரொ
1987 - பெறபட்டது - சிறந்த இயக்கம் - ஹன்னா அண்ட் ஹர் ஸிஸ்டர்ஸ்
1987 - பெறபட்டது - சிறந்த மூல திரைக்கதை - ஹன்னா அண்ட் ஹர் ஸிஸ்டர்ஸ்
1987 - பரிந்துரைக்கபட்டது - சிறந்த நடிகர் - ஹன்னா அண்ட் ஹர் ஸிஸ்டர்ஸ்
1988 - பரிந்துரைக்கபட்டது - சிறந்த மூல திரைக்கதை - ரேடியோ டேஸ்
1990 - பரிந்துரைக்கபட்டது - சிறந்த இயக்கம்- கிரைம்ஸ் அண்ட் மிஸ்டீமனர்ஸ்
1990 - பரிந்துரைக்கபட்டது - சிறந்த மூல திரைக்கதை - கிரைம்ஸ் அண்ட் மிஸ்டீமனர்ஸ்
1993 - பெறபட்டது - சிறந்த மூல திரைக்கதை - ஹஸ்பண்ட்ஸ் அண்ட் வைவ்ஸ்
1995 - பரிந்துரைக்கபட்டது - சிறந்த மூல திரைக்கதை - புல்லட்ஸ் ஓவர் பிராட்வே
2012 - பரிந்துரைக்கபட்டது - சிறந்த மூல திரைக்கதை - மிட்நைட் இன் பாரிஸ்
மேடை நாடகம்
ஆலன் திரைப்படங்களுக்காக நன்கு அறியப்பட்டாலும், 1960களின் மேடை நாடக வாழ்க்கையின் வெற்றியை அவர் மிகவும் கொண்டாடினார். தன் முதல் மாபெரும் வெற்றி 1968ல் வெளியாகி, 2 வருடங்கள், 598 நிகழ்ச்சிகள் கண்ட டோன்ட் டிர்ங்க் தி வாட்டர் ஆகும். தன் வெற்றி 1969ல் வெளியான பிளே இட் அகைன் சாம்மிலும் தொடர்ந்தது. இந்நாடகம் 453 நிகழ்ச்சிகள் கண்டு மூன்று டோனி விருதுக்கு பரிந்துரைக்கபட்டது, ஆனால் அவை ஆலனின் நடிப்புகோ, எழுத்துக்கோ அல்ல. 1970களில் ஆலன் நிறைய ஒரு-செயல் நாடகங்களை எழுதியுள்ளார் அவை பெரும்பாலும் கடவுள்-மரணம் பற்றியதாக இருக்கும், இவை தன் 1975 தொகுப்பு வித் அவுட் ஃபெதர்ஸ்ல் வெளியானது. 1981ல் ஆலனின் நாடகமான தி ஃப்லோட்டிங்க் லைட் பல்ப் நல்ல விமர்சனம் பெற்றாலும், வியாபார ரீதியாக நல்ல வரவேற்ப்பை அடையவில்லை. மூன்று டோனி விருதுக்கு பரிந்துரை செய்யபட்டு, ஒரு சிறந்த நடிகருக்கான விருதை பெற்றும் இந்நாடகம் 62 நிகழ்ச்சிகளே கண்டது. 1995ல், மேடையில் ஏற்பட்ட பல கோளாறுகளுக்கு பிறகு, சில வருடங்கள் மேடை நாடகத்தை விட்டு விலகியே இருந்தபோதிலும், தன் ஒரு-செயல் நாடகங்கள் வந்த வண்ணமே இருந்தன. ஆலனின் படைப்பான கடவுள், பிரேசிலில் அரங்கேற்றபட்டது. தன் படம் புல்லட்ஸ் ஓவர் பிராட்வே, செப்டம்பர், முதலியவற்றின் நாடக பதிப்புகள் ஆலனின் ஈடுபாடு இல்லாமல் வெளியாயின. 1997ல் அவர் மேடை நாடகங்களுக்கு திரும்ப வருவதாய் எழுந்த வதந்திகள் பொய் என தன் மனைவி மூலம் அறியப்பட்டது. 2003ல் ஆலன் முடிவாய் மேடை நாடகங்களுக்கு திரும்பினார், ஒரு மாலை இரண்டு ஒரு-செயல் நாடகங்கள் அர்ங்கேற்றபட்டன. அது பெரும் வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தது. 2004ல் ஆலனின் 1981ல் இருந்து உருவான படைப்புகள் முழு நீள நாடகமாக அரங்கேரியது. 2007ல் அவர் எழுதாத புச்சினிஸ் ஜியான்னி சிக்ச்சி ஃபார் தி லாஸ் ஏஞ்சலஸ் எனும் இசை நாடகத்தை அரங்கேற்றினார். இவ்விசை நாடகம் ஜூன் 2009ல், ஸ்பாலெட்டொ, இத்தாலியின் இரு உலகின் திருவிழாவின் (பெஸ்டிவல் அஃப் தி டூ வோல்ட்ஸ்) துவக்கமாக இருந்தது. அக்டோபர் 2011ல் வுடி ஆலனின் ஒரு-செயல் நாடகமான ஹனிமூன் மோட்டல் வெளியானது.

ஆலன் பற்றி குறிப்பிடத்தக்க படைப்புகள்
பார்பரா காப்பில் இயக்கிய வைல்ட் மேன் ப்ளூஸ் நீங்கலாக வுடி ஆலனை பற்றிய பல்வேறு ஆவண படங்கள் வெளியாகி உள்ளன. அவற்றுள் 2002ல் ஒரு தந்தி-வட(கேபிள்) தொலைக்காட்சிக்கு, டைம் பட விமர்சகர் ரிச்சர்ட் ஸ்கீகள் இயக்கிய ஆவணப்படம் ஏ லைப் இன் பிலிம்மும் அடங்கும்.2011ல் ப்பி.பி.எஸ். ஸீரிஸ் அமெரிக்கன் மாஸ்டர்ஸ் ஆலனை பற்றி இணைந்து தயாரித்த வுடி ஆலன்: ஏ டாகுமென்ட்ரி இயக்கம்: ராபர்ட் பி. வீய்ட். எரிக் லக்ஃஸ் வுடி ஆலன்: ஏ பையோகிராபி எனும் புத்தகத்தை எழுதி பதிப்பித்தார். 1976ல் இருந்து 1984 வரை, ஸ்டூவர்ட் ஹாம்பில் என்பவர் ஆலனின் திரை உருவகத்தை மையமாக கொண்டு இன்சைட் வுடி ஆலன் எனும் படக்கதையை எழுதி வரைந்தார்.

தனிபட்ட வாழ்க்கை
திருமணங்களும் காதல் உறவுகளும்
ஆலனுக்கு மூன்று மனைவிமார்கள்: ஹார்லின் ரோசன் (1954 -1959), லூயிஸே லாஸர் (1966-1970) மற்றும் ஸூன்-யி ப்ரெவின் (1997- நிகழ்காலம்). பன்னிரண்டு வருடங்கள் ஆலனும், மியா ஃபாரோவும் காதலித்து இருந்தாலும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆலனுக்கு பத்து வருடங்கள் ஸ்டேஸீ நெல்கின் உடனும் டையனெ கீடனுடனும் காதல் தொடர்பு இருந்துள்ளது.

ஹார்லின் ரோசன்
19 வயதில், ஆலன் 16 வயது பெண்ணான ஹார்லின் ரோசனை திருமணம் செய்து கொண்டார்.[4] The marriage lasted from 1954 to 1959. டைம் stated that the years were "nettling" and "unsettling."[4] இவர்களது திருமணம் 1954'லிருந்து 1959 வரை நீடித்தது. தங்கள் விவாகரத்துக்கு பின்னர் ஆலன் ரோசனை "திருமதி. அருவருப்பானவள்" என்று ஒரு மேடை நிகழ்ச்சியில் கூறியதற்காக ஆலன் மீது ரோசன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனால் அவர் 1 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தின்னார் என்று கூறியுள்ளார்.[5]

லூயிஸே லாஸர்
ஆலன் லூயிஸே லாஸரை 1966ல் மணந்து கொண்டார். 1969ல் அவர்கள் விவாகரத்து பெற்றனர். அதன்பின் ஆலன் 1997 வரை மணமாகமல் இருந்தார். லூயிஸே லாஸர் விவாகரத்துக்கு பின்னர் ஆலனின் மூன்று படங்களில் நடித்து உள்ளார்: டேக் தி மனி அண்ட் ரன், பனானாஸ் முதலியவை.

டையனெ கீடன்
1970களில் ஆலன் டையனெ கீடனை தன் நாடகம் ப்ளே இட் அகைன், சாம் நாடகத்தில் நடிக்க வைத்தார். அப்பொது அவர்கள் இருவரும் காதல் வயப்பட்டு ஒரே வருடத்தில் பிரிந்தனர். ஆனால் அதன் பின், டையனெ கீடன் ஆலனின் பல படங்களில் நடித்து உள்ளார். அவ்ற்றில் ஆனி ஹால், ஆலனுக்கும் கீடனுக்கும் தங்கள் திரை வாழ்வில் மிக முக்கியமான படம். அதன் பின்னர் அவர் மான்ஹாட்டன், ரேடியோ டேஸ் (மியா ஃபார்ரோவுகு பதிலாக) போன்ற படங்களில் சில கதாபாத்திரம் செய்து உள்ளார். அவர்கள் பிரிவுக்கு பின்னர் ஆலனும் கீடனும் நெருங்கிய நண்பர்களகவே இருந்து வந்துள்ளனர்.[6]

ஸ்டேஸீ நெல்கின்
லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் பத்திரிக்கையின் கூற்று படி மான்ஹாட்டன் திரைப்படம் ஸ்டேஸீ நெல்கினுக்கும் ஆலனுக்கும் ஆன காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் எனப்படுகிறது.[7] ஸ்டேஸீ நெல்கின் ஆலனின் ஆனி ஹால் திரைப்படத்தில் ஒரு சிற்ய வேடத்தில் நடித்து உள்ளார். அப்போதே அவர்கள் இருவரும் காதல் வயபட்டு பின்னர் ஸ்டேஸீக்கு 17 வயது, நியூயார்க் ஸ்டூவெசன்ட் உயர்நிலை பள்ளியில் படித்து கொண்டு இருக்கும் போது அனைவருக்கும் அம்பலமானது.[8][9][10]

மியா ஃபாரோ
1980களில் ஆலன் மியாவுடன் காதல் கொண்டார். அப்போது மியாவே ஆலனின் 1982-1992 வரையிலான பெரும்பாலான படங்களுக்கும் முதன்மை நடிகையாக நடித்து வந்தார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் வெவ்வேறு வீடுகளில் வசித்து வந்தனர்.[11] அவர்கள் டைலன் ஃபாரோ, மொஷெ ஃபாரோ என இரு குழந்தைகளை தத்தெடுத்து கொண்டனர், சாச்சல் ஃபாரோ எனும் குழ்ந்தையை பெற்றும் கொண்டனர். ஆனால் 2013ல் மியா ஒரு பேட்டியின் போது சாச்சல் ஃபாரோ தன் முதல் கணவர் ஃப்ரங்க் சினட்ராவின் குழந்தையாக தான் இருக்க முடியும் என்று கூறினார்.[12] ஆலன், ஃபாரோவின் வேறு உறவுகள் யாரையும் தத்தெடுத்துக் கொள்ளவில்லை ஆனால் அவர்கள் 1992ல் பிரிந்த போது ஃபாரோவின் 20வயது வளர்ப்பு மகள் ஸூன்-யி ஃபாரோ ப்ரெவின் (ஃபாரோ மற்றும் ஆந்த்ரே ப்ரெவினின் வளர்ப்பு மகள்) உடன் தொடர்பு வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆலனும் ஃபாரோவும் பிரிந்த பின்னர் தங்கள் மூன்று குழந்தைகளும் யார் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்க்கு பெரிய சட்ட யுத்தமே தொடங்கியது. அவ்வழக்கின் முடிவில் ஃபாரோவின் வசம் குழந்தைகள் ஒப்படைக்கப் பட்டது.[13][14][15] 2005ல் ஒரு பேட்டியின் போது ஆலன் ஸூன்-யி ப்ரெவினுடனான சர்ச்சை தன் வாழ்வின் மாற்றமாக இருக்கும் என கூறினார். பின்னர் ஜூன் 22, 2005ல் ராய்டர்ஸ் நிறுவனம் அளித்த அறிக்கையின் படி ஆலன் எது சர்ச்சை? நான் இப்பெண்ணை விரும்பினேன், திருமணம் செய்து கொண்டேன். இப்போது எங்களுக்கு திருமணம் முடிந்து 15 வருடங்கள் கழிந்து விட்டன. இதில் சர்ச்சை ஒன்றும் இல்லை, ஆனால் அனைவரும் இதை சர்ச்சை என்று கூறுகின்றனர், எனக்கும் நம் வாழ்வில் ஒரு சர்ச்சை உண்டு என எண்ணிக்கொள்வேன். அவ்வளவே என்று கூறப்படுகிறது.

ஸூன்-யி ப்ரெவின்

ஸூன்-யி ப்ரெவினும் ஆலனும் 2009 டிரைபெக்கா திரைப்பட திருவிழாவின் போது
ஆலன் மியா ஃபார்ரோவை மணக்காததால் ஸூன்-யி ப்ரெவினின் சட்ட பூர்வ வளர்ப்பு தந்தை இல்லை, ஆனாலும் இவர்களது உறவு வளர்ப்பு தந்தை - மகளின் தவறான உறவு எனப்பட்டது. 1991ல் ஆலனுக்கு 59ம், ப்ரெவினுக்கு 19 வயதும் ஆன நிலையில் அவ்விருவரின் பொருந்தா காதல் பற்றி வினவிய போது, ஆலன், வயது ஒரு பொருட்டு அல்ல, இதயதிற்க்கு எது வேண்டுமோ அது வேண்டும். இதில் தர்க்கத்துக்கு இடமில்லை. ஒருவரை சந்திக்கிறீர்கள், அவருடன் காதல் வயபடுகிறீர்கள் அவ்வளவே என்றார்.[11][16][17] இவ்விருவரும் 1997 திருமணம் செய்து கொண்டனர். ரோனன் ஃபாரோ (சாச்சல் ஃபாரோ) எப்போதும் ஆலனை பார்க்கமுடியாததால் அவரை இகழ்வார் என்றும், அதற்கு த்குந்தாற் போல் 2012 தந்தையர் தினமன்று, ரோனன் "தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்" அல்லது என் குடும்பத்தில் அழைக்கப்படுவது போல "மைத்துனர் தின நல்வாழ்த்துக்கள்." என ட்விட்டர் எனும் சமுக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. ப்ரெவினும் ஆலனும், பெசட் டுமைனெ(பிறப்பு: 1999, சீனா) மற்றும் மான்சி டியொ (பிறப்பு: 2000, டெக்ஸாஸ்) எனும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து கொண்டனர்.[18][19][20]

கிளாரினெட் இசை கலைஞராக

செப்டம்பர் 20, 2003, ஃபிரான்ஸ், வியன்னா ஜாஸ் திருவிழாவில், வுடி ஆலன் உடன் ஜெர்ரி சிக்மன்ட் மற்றும் சைமன் வெட்டஹால்.
ஆலன் தன் படங்களில் வரும் ஜாஸ் இசை ஒலிப்பதிவின் உணர்ச்சிகரமான ரசிகர். இவர் கிளாரினெட் இசை கருவியை சிறு வயது முதலே வாசிக்க ஆரம்பித்து பின்னர் வுடி ஹெர்மன் எனும் பெயரில் 1960களில் தன் இசை கச்சேரியை அரங்கேற்றினார்.[21][22][23] பின்னர் தி டிக் காவெட் எனும் தொலைக்காட்சியில் அக்டோபர் 20, 1971ல் அவரது இசை நிகழ்ச்சி ஒளிப்பரப்ப பட்டது. வுடி ஆலனும் தன் நியூ ஆர்லியன்ஸ் ஜாஸ் இசைக்குழுவினரும் ஒவ்வொரு திங்கள் மாலையும் மான்ஹாட்டனில் உள்ள ஒரு உணவு விடுதியில் நீண்ட ஆண்டுகளாக வாசித்து வருவதாக கூறப்படுகிறது. வைல்ட் மேன் ப்ளூஸ் எனும் ஆவணத் திரைப்படத்தில் 1996ல் ஆலனும் அவரது குழுவும் மேற்கொண்ட இசைப்பயணம் பற்றிய ஒரு தொகுப்பும், ஆலன், ப்ரெவினின் உறவுமுறை பற்றிய ஒரு தொகுப்பும் உள்ளது. இக்குழு இரண்டு இசைத்தட்டுகளை வெளியிட்டு உள்ளது அவை தி பங்க் ப்ராஜக்ட் (1993) மற்றும் வைல்ட் மேன் ப்ளூஸி(1997)ன் ஒலிப்பதிவு தொகுப்பும் ஆகும். ஆலனும் அவரது குழுவும் ஜூன் 2008ல் நடைபெற்ற மான்ட்ரியல் சர்வதேச ஜாஸ் இசை திருவிழாவின் போது இரண்டு தொடர் இரவுகள் இசை கச்சேரியினை நிகழ்த்தி உள்ளனர்.[24]

மனோஆய்வு
ஆலன் முப்பத்தி ஏழு வருடங்களை தன் மனோ ஆய்வுக்கு செலவளித்து உள்ளார். ஆலனின் பெரும்பாலான படங்களில் மனோ ஆய்வு பற்றிய சிறு குறிப்பு இருக்கும்.ஆலன் குரல் கொடுத்த ஆன்ட்ஸ் எனும் இயங்குப்படத்தின் முதன்மை கதாப்பாத்திரம் ஆலனின் மனோஆய்வு தந்திர வேலையை செய்வது போல சித்தரிக்கப்பட்டு இருக்கும். மொமன்ட் நாளிதழ், இது ஆலனின் சுய-உட்கொள்ளபட்ட வேலைக்கு உந்துதலாக இருந்தது என்று குறிப்பிடுகிறது. ஜான் பாக்ஸ்டர், வுடி ஆலன்: ஏ பையோகிராஃபி எனும் நூலை எழுதியவர், "ஆலனுக்கு இந்த மனோ ஆய்வு உற்சாகமாகவும், கிளர்ச்சியூட்ட கூடியதாகவும் இருக்கிறது." என குறிப்பிடுகிறார். ஆலன் ப்ரெவினுடனான் மண வாழ்வுக்கு பின்னர் இந்த மனோஆய்வினை நிறுத்தி விட்டதாகவும் ஆனாலும் தனக்கு தனிமை மற்றும் உயரத்தை கண்டு ஏற்படும் பேரச்சம் மட்டும் இருப்பதாக கூறுகிறார். 2008ல் ஒரு பேட்டியின் படி ஆலன் தன்னை போராளி பிராய்டின் நாத்திகர் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.[25]

பணியாற்றிய படங்கள்
ஆலன் 1965ன் வாட்ஸ் நியூ புஸ்ஸி காட்ல் தொடங்கி அறுபது ஆண்டுகளாக எழுதி, இயக்கி, ஆனி ஹால்(1977), ஹன்னா அண்ட் ஹர் ஸிஸ்டர்ஸ்(1986), ஹஸ்பண்ட்ஸ் அண்ட் வைவ்ஸ் என் பலவ்ற்றில் நடிக்கவும் செய்து இருக்கிறார். அவைகளில் பெரும்பாலான அனைத்தும் விருதுகளையும் பெற்று உள்ளது. நகைச்சுவைகளில் அவர் கவனம் செலுத்தி வந்தாலும், பின்னர், இன்டிரியர்ஸ்(1978)போன்ற தத்ரூபமான படங்களையும் படைத்தார்.

மேடை நாடகங்கள்
ஆலன் திரைப்பட இயக்கம், எழுத்து மற்றும் நடிப்பு மட்டும் அல்லாமல், பிராட்வே தியேட்டர் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு நாடகங்களையும் எழுதி, நடித்து உள்ளார்.






Filmography and awards
Main articles: Woody Allen filmography and List of awards and nominations received by Woody Allen

Movies directed by Woody Allen shown by year and Rotten Tomato Score.
What's New Pussycat? (1965) (actor and screenwriter only)
What's Up, Tiger Lily? (1966)
Casino Royale (1967) (actor only)
Take the Money and Run (1969)
Bananas (1971)
Play It Again, Sam (1972) (actor and screenwriter only)
Everything You Always Wanted to Know About Sex* (*But Were Afraid to Ask) (1972)
Sleeper (1973)
Love and Death (1975)
The Front (1976) (actor only)
Annie Hall (1977)
Interiors (1978)
Manhattan (1979)
Stardust Memories (1980)
A Midsummer Night's Sex Comedy (1982)
Zelig (1983)
Broadway Danny Rose (1984)
The Purple Rose of Cairo (1985)
Meetin' WA (1986) (himself)
Hannah and Her Sisters (1986)
Radio Days (1987)
September (1987)
King Lear (1987) (actor only – uncredited cameo)
Another Woman (1988)
New York Stories (1989) ("Oedipus Wrecks" segment only)
Crimes and Misdemeanors (1989)
Alice (1990)
Scenes from a Mall (1991) (actor only)
Shadows and Fog (1991)
Husbands and Wives (1992)
Manhattan Murder Mystery (1993)
Bullets over Broadway (1994)
Don't Drink the Water (1994)
Mighty Aphrodite (1995)
Everyone Says I Love You (1996)
Deconstructing Harry (1997)
Wild Man Blues (1997) (documentary) (himself)
The Impostors (1998) (actor only – uncredited role)
Antz (1998) (voice)
Celebrity (1998)
Sweet and Lowdown (1999)
Company Man (2000) (actor only – uncredited role)
Small Time Crooks (2000)
Picking Up the Pieces (2000) (actor only)
The Curse of the Jade Scorpion (2001)
Stanley Kubrick: A Life in Pictures (2001) (documentary) (himself)
Hollywood Ending (2002)
Anything Else (2003)
Melinda and Melinda (2004)
Match Point (2005)
Scoop (2006)
Cassandra's Dream (2007)
Vicky Cristina Barcelona (2008)
Whatever Works (2009)
You Will Meet a Tall Dark Stranger (2010)
Midnight in Paris (2011)
Paris Manhattan (2012) (actor only)
To Rome with Love (2012)
Fading Gigolo (2013) (actor only)
Blue Jasmine (2013)
Magic in the Moonlight (2014)
Irrational Man (2015)
Café Society (2016)
Wonder Wheel (2017)
A Rainy Day in New York (2018)
Works about Allen
Apart from Wild Man Blues, directed by Barbara Kopple, there are other documentaries featuring Woody Allen, including the 2001 cable-television documentary Woody Allen: a Life in Film, directed by Time film critic Richard Schickel, which interlaces interviews of Allen with clips of his films, and Meetin' WA, a short interview of Allen by French director Jean-Luc Godard. In 2011 the PBS series American Masters co-produced the documentary Woody Allen: a Documentary, directed by Robert B. Weide.[9]

Eric Lax authored the book Woody Allen: A Biography.[181] From 1976 to 1984, Stuart Hample wrote and drew Inside Woody Allen, a comic strip based on Allen's film persona.[182]





No comments:

Post a Comment