Monday 20 August 2018

HOW TO GAIN POPULARITY IN TWITTER







HOW TO GAIN POPULARITY IN TWITTER


ட்விட்டரில் பொங்குவது எப்படி?@adiyaaan 
சந்துலக நண்பர்களே வணக்கம்!!!


'இந்த டுலாவில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனை அல்ல உண்மையே 

சரி டைட்டிலுக்கு உள்ள போலாம் ட்விட்டரில் பொங்குவது எப்படி? 

இங்க இதை எழுதுறது நம்ம சந்து பிரபலங்களுக்கு யூஸ் ஆகுமோ இல்லையோ உசுரக் கொடுத்து தினம் தினம் மூளைய கசக்கி பிழிஞ்சு நானும் ஒரு நாள் பிரபலம் ஆயிடுவேண்டானு விஷால் ஸ்டைல் ல உள்ளுக்குள்ள கத்திட்டு வைராக்கியமா ட்வீட்டுர  புது கீச்சர்களுக்கு கண்டிப்பா உதவும்....

நீங்களே பாத்துருப்பேங்க நம்ம நாட்டோட ஒட்டு மொத்த போராளிகளும் இங்க தான் டென்ட் போட்டு குடி இருக்கோம் அப்படின்னு சொல்ற அளவுக்கு பொங்கி எழும் மனோகராக்களா 

இங்க வரிஞ்சு கட்டிட்டு ட்வீட்டுவாங்க. 
வெட்டியான் எப்போ பொணம் விழும்னு காத்துட்டு இருக்குற மாதிரி போராடுறதுக்கு எப்போ டாப்பிக் கிடைக்கும்னு தவமாய் தவமிருப்பாங்க. 

டாப்பிக் மட்டும் மாட்டிருச்சுனு வைங்க அவ்ளோ தான் முழு முனைப்போட சோறு தண்ணி இல்லாம போராட்டத்த தொடங்க ஆரம்பிச்சுருவாங்க. 

அதுக்கு எவனோ ஒருத்தன் tag னு சொல்லி ஒண்ண ஆரம்பிச்சு வைப்பான் இவனுங்க அவனோட சந்ததிகள் மாதிரி கப்புன்னு பிடிச்சுட்டு போராட தொடங்குவாங்க. 

அந்த நேரம் தான் நம்மாளுகளுக்கு நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் பொங்கி வழியும் பாரு ஒவ்வொருத்தரும் தன்ன ஒரு நேதாஜியா, சேகுவேராவா, பகத் சிங்கா, சிலநேரம் கேப்டன் விஜயகாந்தா கூட தன்ன உருமாத்திக்கிட்டு  புரட்சிப் போராட்டம் பண்ணுவானுங்க. 

யாருக்கு தெரியும் சில நேரம் கை கால் லாம் நரம்பு முறுக்கேறி நாக்கு பூச்சி வெளிய வர அளவுக்கு வெரப்பா மொரப்பானுங்க. 

 வெளில இருந்து பாத்தா சரியான கோமாளியா இருப்பானோனு தான் தோணும் ஆனா அவங்க ஒரு போராளியா தான் தன்ன நெனச்சுப்பா னுங்க.

விவசாயின்னு ஒருத்தரு பாவமுங்க அவரு பல வருசமா சந்து கீச்சர்களுகிட்ட சிக்கி தவியா தவிக்குராறு அவருக்கு ஆதரவா போராடுறோம்னு களம் இறங்குவாங்க மண் பொன் மரம் வரம் னு எதுகை மோனைல லாம் ரவுண்டு கட்டி அடிப்பானுங்க 

இவ்ளோ கஷ்டப்பட்டு அவருக்காக போராடுறியே நேத்து என்ன கண்ணு சாப்டனு கேளுங்க அது பர்கர் பிட்சானு கேஎப்சி னு சொல்லுவானுங்க. 

அத விடுங்க இவ்ளோ பொறுப்பா போராடுறியே தம்பி ஒரு படி நெல்லு என்ன விலைன்னு கேளுங்க பல்லு தெரியுற மாதிரி ஈஈனு இழிப்பானுங்க

 சரி அதவிடு 

பயிர் சாகுபடி எந்த சீசன்ல பண்ணனும்னு கேளுங்க 
வாசன் ஐ கேர் போற அளவுக்கு கண்ண முழிப்பானுங்க. 

சரி ஒரு ஏக்கர் நிலமாது இப்போ என்ன விலைக்கு விக்குதுன்னு தெரியுமான்னு கேளுங்க 

காரி துப்ப போற மாதிரி தலைய குனிஞ்சுக்குவானுங்க. இது ஏதும் தெரியாம என்ன _______க்கு டா விவசாயின்னு நீங்க போராட வரேங்கன்னு கவுண்டர் ஸ்டைல்ல தான் கேட்க தோணும்.

அப்புறம் லஞ்சம் ஊழல்னு ஒரு பிரச்சினை நாட்டுல வந்துட்டா போதும் ஒவ்வொருத்தனும் தன்ன ஒரு இந்தியன் தாத்தாவா ரமணாவா அந்நியனா அவதாரம் எடுத்துருவானுங்க. 

லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் கப்புல தயிர்னு ட்வீட் போடுவானுங்க 
சரி 

அண்ணைக்கு உன்ன டிராபிக் போலீஸ் பிடிச்சானே கரக்டா 500 ரூவா பைன் கட்டி பில்லு வாங்குனியானு கேளு 
இல்ல மச்சி சைடு ல 100 கொடுத்து எஸ்கேப் ஆயிட்டனு சொல்லுவானுங்க. 

ஊழலுங்குற அவ்வளோ பெரிய தேசிய பிரச்சினைய 140 கேரக்டர்ல போராடி முடிச்சுருவானுங்க பாரு அங்க நிக்குறானுங்க நம்ம பசங்க. இவனுங்கள லாம் 100 சங்கர் வந்தாலும் திருத்த முடியாதுன்னு சொல்ல தோணும்.

 சமீப காலமா முக்கிட்டு இருக்கோமே மதுவிலக்கு. நீங்க உன்னிப்பா கவனிச்சேங்கனா தெரியும் எல்லாவனும் தண்ணிய போட்டுட்டு போதைல உளருர மாதிரியே தோணும் குடி குடியை கெடுக்கும், மதுவை ஒழிப்போம்னு மது கடையை ஒடைப்போம்னு பீர் பாட்டில் பொங்குறத விட அதிகமா பொங்குவானுங்க. 

அப்புறம் போராடி களைச்சு போன மாதிரி அன்னைக்கு நைட்டே மச்சி ஒரு குவாட்டர் சொல்லேனு சொல்லுவானுங்க. 

இத எல்லாம் விட முக்கியான ஒண்ணு இருக்குங்க கண்டுபிடிச்சுருப்பேங்களே அதாங்க தமிழுக்காக போராடுறது.

 இதுவரைக்கும் இவங்க போராடி தமிழ் எவ்ளோ வளந்துச்சுனு சென்செக்ஸ் எதுவும் தெரியல. 

தமிழ் தான் என் உயிர் மூச்சுன்னு ட்வீட் போடுவானுங்க 

எங்க ஒரு பத்து நிமிஷம் மூச்சு விடாம திருக்குறள் சொல்லு பாப்போம்னா ங்கே னு வாய பொளப்பானுங்க. 

எங்கயோ ஒரு தமிழன் ஏதும் சாதிச்சுட்டா அவனுக்காக ரெண்டு நாளைக்கு விடாம ட்ரெண்டு பண்ணுவானுங்க 

இதுனால நம்ம ஏதும் சாதிச்சமானு பாத்தா பேட்டரி சார்ஜ் குறைஞ்சது தான் மிச்சம்னு இருக்கும் . 




இதெல்லாம் போக படத்துல சின்ன சின்ன அமெரிக்க மாப்பிளை கேரக்டர்கள் வர மாதிரி
 மரம் வெட்டகூடாது, 
பிச்சகாரனுக்கு தங்க தட்டு வாங்கி கொடுக்கணும், 
சாக்கடை தோண்டுரவன கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்கணும், 
ஓசோன் ஒட்டய பெவிகால் வச்சு அடைக்கணும், 
தீவிரவாதிய ஒரே டேக்ல தொங்க விடனும் 
இப்படி பல பரிமாணங்கள்ல போராடுவானுங்க.

 இங்க போராடுறதுக்கு என்ன தகுதி வேணும்னு கேட்குறேங்காளா? பெருசா ஒண்ணும் இல்லங்க நல்ல யோசிச்சு நச்சுன்னு ட்வீட் போட்டு பத்து பேரை யாச்சும் ஆர்டி பண்ண வைக்குறது தான் உங்க திறமையே

 கூடவே நகைச்சுவையா பேச தெரிஞ்சா கூடுதல் பலம் 
பாலோவர்சும் குவியுவாங்க. 
அதுலயும் மிமி போட்டு போராடுனா ஆர்டி அள்ளும்.

 வெளிய போய் போராடி இருந்தா கூட ஏதும் பிரியாணி பொட்டலமாது கிடைச்சிருக்குமே இங்க என்ன கிடைக்கும்

 எங்கயாது வலை பாஞ்சுடனும்னு ஒரு நப்பாசை தான். இதெல்லாம் கவர் பண்றதுக்குனே மீடியா காரனுங்க இருக்கானுங்க 

நெட்டு குத்து, 
வலை பேச்சு, 
வலை பாயுதே, டயர் தேயுதே னு. 

அதுல எதுலயாச்சும் அவங்க போராட்ட ட்வீட் வந்துருச்சுனா தான் அந்த போராட்டம் வெற்றி அடைஞ்ச சந்தோசம் கிடைக்கும் அது இன்னும் ஊக்குவிப்பா இருக்கும் 

. இதெல்லாம் அப்போ அப்போ சரியா வந்துகிட்டு இருக்குனு வைங்க நாம போற பாதை கரக்டு தான் நாம பிரபலமா உரு மாறிட்டே இருக்கோம்னு அர்த்தம். இந்த புரட்சி போராட்டங்கள் எப்போ முடியும்னு பாத்தா அங்க தான் டுவிஸ்டே இருக்கவே இருக்கு 

அஜித் விஜய் சண்டை அது சூடு பிடிக்க ஆரம்பிச்சுட்டா நீங்க என்ன ட்வீட் போட்டாலும் வேலைக்கு ஆகாது நீங்க அப்படியே சந்திரமுகியா மாறி அதுக்கு ஏத்த மாதிரி ட்வீட் போடணும் அப்போ தான் கல்லா கட்டும். 

அஜித் ரசிகரா இருந்தா விஜய ஒட்டி போடணும் 
விஜய் ரசிகர்னா அஜீத்த கலாய்ச்சு ட்வீட் போடணும் 

இடைய இடையே மானே தேனே பொன்மானே மாதிரி ரெண்டு பேர் ரசிகர்களும் சேந்து சூர்யாவா கூட ஓட்டலாம். 

இது எப்போ முடியும்னு பாத்தா சிம்பு மாதிரி யாரவது வந்து ட்வீட் போட்டு சண்டைய சமாதானப் படுத்துவாங்க. அப்போ டிராக் மாதிரி அவர ஒட்டுரதுலாம் தனி கதை.

இவ்ளோ தாங்க இதை அப்படியே பாலோ பண்ணி நல்ல பொங்குனோம்னா கூடிய சீக்கிரம் நாமளும் பிரபலம் ஆயிடலாம். சாதரணாமா பொங்க கூடாது மொறடா இன்னும் நல்லா மொறனு சொல்ற அளவுக்கு பொங்கனும். 

No comments:

Post a Comment