Monday 6 August 2018

AMERICA DROPPED URANIUM ATOM BOMB LITTLE BOY ON JAPAN 1945 AUGUST 6.08.15 A.M






AMERICA  DROPPED URANIUM ATOM BOMB 
LITTLE BOY  ON JAPAN 1945 AUGUST 6.08.15 A.M



இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா மீது 1945, ஆக. 6ம் தேதி, அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியதன் 73வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 

உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அணு ஆயுதத்தின் பேரழிவை உலகுக்கு உணர்த்தும் நாளாகவும், இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. லிட்டில்பாய்அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் கடற்படை தளத்தின் மீது ஜப்பான் 1941, டிச.7ல், அதிர்ச்சி தாக்குதல் நடத்தியது. இதனால் இரண்டாம் உலகப் போரில் இறங்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கும் ஏற்பட்டது. ஜப்பானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அணுகுண்டு தாக்குதலை நடத்தியது. 1945 ஆக., 6ம் தேதி, ஜப்பான் நேரப்படி காலை 8:16 மணிக்கு (இந்திய நேரம் அதிகாலை 4:46) ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்பட்டது. 'லிட்டில்பாய்' எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த 'பி-29 ரக எனோலாகெய்' என்ற அமெரிக்க விமானம், ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில், உலகின் முதல் அணுகுண்டை வீசியது. இது அப்பகுதியில் 4 சதுர மைல் சுற்றளவுக்கு அழிவை ஏற்படுத்தியது. உலக வரலாற்றில் அமெரிக்கா தான் முதன் முதலாக அணுகுண்டு தாக்குதலை நடத்தியது. அப்போது ஹிரோஷிமாவின் மொத்த மக்கள்தொகை 3,50,000. இதில் 1.40 லட்சம் பேர் பலியாகினர். கதிர்வீச்சால் ஆயிரக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர். இதன் பாதிப்பு இன்றும் தொடர்கிறது. 

குண்டு வீசப்பட்டு 16 மணி நேரம் கழித்து, அன்றைய அமெரிக்க அதிபர் ஹாரிட்ரூமேன், ஜப்பான் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார். (அணுகுண்டை சோதித்து பார்ப்பதற்காக அமெரிக்கா இதை செய்தது எனவும் கூறப்படுகிறது) இதன் பிறகே ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டது உலக நாடுகளுக்கு தெரியவந்தது. 


மீண்டும் தாக்குதல்:

மூன்று நாட்கள் கழித்து ஆக. 9ல், ஜப்பானின் நாகசாகி நகரின் மீது 'பேட்மேன்' என்ற 2வது அணுகுண்டை அமெரிக்கா வீசியது. இத்தாக்குதல்களால், இரண்டு நகரங்களும் நிலைகுலைந்தன. கதிர்வீச்சு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை, 2.30 லட்சமாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து, 6 நாட்கள் கழித்து 1945 ஆக.15ல் ஜப்பான் சரணடைவதாக ஒப்புக்கொண்டது. அத்துடன் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட இந்த நகரங்கள், அந்த சுவடே தெரியாத அளவுக்கு தற்போது பல்வேறு துறைகளில் வளர்ச்சிஅடைந்தது அந்நாட்டின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.


90 : ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்படுவதற்கு முன், நகரில் 90 ஆயிரம் கட்டடங்கள் இருந்தன. தாக்குதலுக்குப்பின் 28 ஆயிரம் கட்டடங்கள் மட்டுமே தப்பின. அதே போல 200 டாக்டர்கள் இருந்தனர். 20 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். 1780 செவிலியர்கள் இருந்தனர். தாக்குதலுக்குப்பின் 150 பேர் மட்டுமே பிழைத்தனர்.










ஜப்பானின் ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியதன் 70வது ஆண்டு தினம் இன்று அந்த நகரில் கடைபிடிக்கப்பட்டது.
இதற்காக ஹிரோஷிமாவின் நினைவுப் பூங்காவில் நடந்த விழாவில் ஜப்பானின் பிரதமர் ஷின்ஷோ அபே பங்கேற்றுப் பேசினார். அங்கு ஓடும் நதியான மொடயஷு நதியில் காகித விளக்குகள் மிதக்கவிடப்பட்டன.
ஹிரோஷிமாவில் அமைதியின் அடையாளமாக
புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

இந்த தினத்தை நினைவுகூறும் வகையில், ஜப்பான் முழுவதுள்ள மக்கள் ஒரு நிமிடம் மௌனத்தைக் கடைப்பிடித்தனர்.

ஹிரோஷிமாவின் மீது குண்டுவீசப்பட்ட நேரமான 8.15 மணியளவில் மணிகள் முழங்கப்பட்டன.
1945ல் குண்டுவிழுந்த இடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிக்கும் ஹிரோஷிமா அமைதிப் பூங்காவில் நடந்த நிகழ்வில் பேசிய பிரதமர் ஷின்ஷோ அபே, உலகம் முழுவதும் அணு ஆயுத ஆயுதங்களை அகற்ற வேண்டும் என்று கோரினார்.
பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின்
உறவினர்கள் ஹிரோஷிமாவில் நடந்த
நினைவுகூரும் நிகழச்சியில் பங்கேற்றனர்.

ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு, ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றது மட்டுமல்ல, மேலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு சொல்லமுடியாத துன்பங்களைத் தந்தது என்றும் அபே குறிப்பிட்டார்.

ஹிரோஷிமா குண்டுவீச்சை நினைவுகூறும் வகையில் நடந்த நிகழ்வில் ஜப்பானுக்கான அமெரிக்கத் தூதர் கரோலின் கென்னடியும் பங்கேற்றார். மௌன அஞ்சலி, புறாக்களைப் பறக்கவிடுவது போன்றவையும் இந்த நிகழ்வில் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜப்பானின் வேறு நகரங்களிலிருந்தும் ஹிரோஷிமாவுக்கு மக்கள் வந்திருந்தனர். இதை நினைவுகூர்வது மிக அவசியம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இரண்டாவது உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது, 1945ஆம் ஆண்டு ஆக்ஸட் 6ஆம் தேதி காலை 8.10 மணியளவில் அமெரிக்காவின் பி - 29 ரக விமானமான எனோலா கே, ஹிரோஷிமா மீது யுரேனிய அணுகுண்டை வீசியது. இந்த குண்டு நகரிலிருந்து 1,800 அடி உயரத்தில் வெடித்தது.

ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டிற்கு லிட்டில் பாய் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. அந்த அணுகுண்டு வெடித்தபோது, 20,000 டன் டிஎன்டி வெடி பொருள் வெடித்தால் ஏற்படும் சக்தி வெளியானது.

ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டால் 1,40,000 பேர் உயிரிழந்தனர்.
குண்டுவீசப்பட்ட நாளில் மட்டும் 70,000 பேர் கொல்லப்பட்டனர் என நம்பபப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பால் ஏற்பட்ட கதிர்வீச்சு பாதிப்பினால், அதையடுத்துவந்த நாட்களில் பலர் கொல்லப்பட்டனர்.
ஹிரோஷிமாவில் உள்ள பீஸ் அமைதிப் பூங்காவில்
அஞ்சலி செலுத்தும் மக்கள்.

எந்த இடத்தில் குண்டை வீசுவது என்பது கடைசி ஒரு மணிநேரத்தில்தான் முடிவுசெய்யப்பட்டது. ஹிரோஷிமாவின் மீது நிலவிய நல்ல வானிலையின் காரணமாகவே அந்த நகரத்தின் மீது குண்டுவீசப்பட்டது.

இந்த குண்டு வெடித்தபோது, அந்த இடத்தில் வெப்ப நிலை 60 மில்லியன் டிகிரியை எட்டியது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் உடனடியாக உயிரிழந்தனர்.
உலகில் அணுஆயுதங்களைக் களைய தொடர்ந்து
முயற்சிக்க வேண்டுமென ஜப்பானியப் பிரதமர்
 ஷின்ஷோ அபே தெரிவித்தார்.

ஹிரோஷிமாவில் குண்டுவீசப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு நாகசாகியில் மற்றொரு அணுகுண்டு வீசப்பட்டது. இதையடுத்து உலகப்போர் முடிவுக்கு வந்தது.








ஜப்பானின் ஹிரோஷிமா ,நாகசாகி நகரங்களில் அணுகுண்டு தாக்குதலால் உயிரிழந்தவர்களின் நினைவு நாள் இன்று ..

அவர்களின் ஆத்தம சாந்திக்கு நாமும் பிராத்திப்போம் ...

உலக நாடுகள் இந்த பூமியில் இன்னுமொரு யுத்தம் வேண்டாம் என்பதை உணர்ந்து கொள்வதற்கு எவருக்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நாடு ஜப்பான் நாட்டின் மனித குல வரலாற்றைப் பொறுத்த வரையில் கடந்த 1945ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி மறக்க முடியாத ஒரு சோக தினமாகும். இன்றைய நாளில் தான் ஜப்பான் நாட்டில் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசியது அந்த தினம் தான் ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் மாதம் 6ம் திகதி ஹிரோஷிமா தினமாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. 
ஷிரோஹிமா நாகசாக்கி என்ற பெயர்களைக் கேட்கப் போதெல்லாம் அணுவாயுதங்கள் தான் நினைவில் நிற்கிறது. இந்த சம்பவமே அமெரிக்காவின் கொடூரத்தை உலகிற்கு அடையாளப்படுத்தியதோடு அணுவாயுதத்தின் பேரழிவை உணர்த்தியது, கடந்த 1941ம் ஆண்டு 2ம் உலக மகா யுத்தம் தீவிரமடைந்த நிலையில் ஜப்பான் பிலிப்பைன்ஸ் மீது தாக்குதுல்களை மேற்கொண்டது. இதனால் அமெரிக்கா பிலிப்பைன்சிற்கு உதவுவதற்கு தீர்மானித்தது. அதற்கமைய பிலிப்பைன்சிற்கு ஆதரவாக அமெரிக்க படையினரை இலக்கு வைத்து ஜப்பான் தொடர் தாக்குதுல்களை மேற்கொண்டது. இதனை எதிர்பாராத அமெரிக்கா ஒரு கனம் தடுமாறி பின்னர் தன்னை சுதாகரித்துக் கொண்டு கடந்த 1942ம் ஆண்டு அணுகுண்டு தயாரிக்கும் பணியை தீவிரமாக்கியது. 
யுத்தத்தில் அணுகுண்டு பயன்பாடு முதன்முறையாக
அமெரிக்காவிலேயே 2ம் உலக மகா யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்து அணுகுண்டை தயாரித்த அமெரிக்கா அதை எங்கு பயன்படுத்துவது என்பது குறித்து அப்Nபுhதைய ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டும் இங்கிலாந்து பிரதமர் வின்சன்ட் சேர்ச்சிலும் ஆலோசனை நடத்திய பின்னர் ஜேர்மனியும் ஜப்பானையும் அவர்கள் குறி வைத்தனர். இயற்கையிலேயே பாதுகாப்பாக அமைந்திருந்த ஜப்பான் மீது வான்வழியாகNவுh அல்லது கடற்பகுதியுடாகவோ போரிட்டு வெற்றிகொள்வது கடினமென்பதை புரிந்துகொண்ட அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு தாக்குதுலை மேற்கொள்ள தீர்மானித்தது, 
இதற்கு முன்னோட்டமாக ஜப்பான் மீதும் அமெரிக்கா சரமாரியாக குண்டு மழை பொழிந்தது. அதற்கமைய 3 ஆண்டுகள் முயற்சியின் பின்னர் அணுகுண்டு தயாரித்த அமெரிக்கா அதனை ஜப்பானில் பயன்படுத்துவதற்கான 17 நகரங்களை தெரிவு செய்தன. அதில் மக்கள் அதிகம் நிறைந்த பகுதியே போர்முனையாக இருக்க வேண்டுமென எண்ணிய அமெரிக்கா, பிறநாட்டு கைதிகள் எவரும் சிறைவைக்கப்பட்டிராத ஹிரோஷிமா நகரை தெரிவுசெய்தது. அதற்கமைய ஓகஸ்ட் மாதம் 2 ம் திகதி இத்தாக்குதலுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போல்ட் டிபெட்ஸ் என்ற விஞ்ஞானியும், எனலோகே என்ற பீ 2 ரக விமானமும் அணுகுண்டு தாக்குதலுக்கென தெரிவுசெய்யப்பட்டன. 

இதேவேளை குறித்த அணுகுண்டுக்கு அமெரிக்கா வைத்த பெயர் சின்னப்பையன் என்பதாகும். 29 அங்குலம் விட்டமும், 126 அங்குலம் நீளமும் 9700 பவுன் எடையும் யுரேனியத்தை மூலப்பொருளாகவும் கொண்ட சின்னப்பையன் ,எனோலகே விமானத்தில் பொறுத்தப்பட்டது. அதற்கமைய கடந்த 1945 ம் ஆண்டு, ஹிரோஷிமா நகருக்குள் சில விமானங்களை அமெரிக்கா அனுப்பிய நிலையில், அதனை ஜப்பான் சாதுர்யமாக சுட்டு வீழ்த்தியது. எனினும் அதே தினத்தில் காலை 08.15 மணியளவில் மேலும் இரண்டு விமானங்கள், ஹிரோஷிமா எல்லைக்குள் பிரவேசித்து, குண்டுகளை பொழிய ஆரம்பித்தது.

பின்னர் பெரசூட்டின் உதவியுடன் சின்னப்பையன் அணுகுண்டு ஹிரோஷிமா நகர்மீது போடப்பட்ட நிலையில், அந்நகர் முழுவதும் காற்று மண்டலம் விரிவடைந்து மதில்போல் அதிர்வலைகள் ஒன்றித்து, விநாடிக்கு 500 கிலோ மீற்றர் வேகத்தில் அந்த அதிர்வலைகள் புயல்போல் புறப்பட்டன. கட்டிடங்கள், பாலங்கள், தூண்கள், ஆகியன நிர்மூலமாக்கப்பட்டன. சிறிதுநேரத்தில் அங்கு அமைக்கப்பட்டிருந்த ரேடார் கருவிகள் உள்ளிட்ட அனைத்தும் செயலிழந்ததோடு கட்டிடங்கள் பற்றி எரிந்தன. நகரமெங்கும் மரண ஓலம் ஒலித்தது. அணுகுண்டிலிருந்து, 300 லட்சம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வெளிப்படும் நிலையில், குண்டு வீசப்பட்ட இஅடத்திலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாயின. இந்நிலையில் குறித்தகுண்டு வீசப்பட்டு 16 மணிநேரத்திற்கு பின்புதான், அமெரிக்க ஜனாதிபதியான ஹெரி ட்ருட்மேன் ஜப்பான் மீது, அணுகுண்டு போடப்பட்ட விடயத்தினை அறிவித்தார்.


இதன்பின்னரே அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு போட்டவிடயம், ஜப்பானுக்கும், உலக நாடுகளுக்கும் தெரியவந்தது. அணுகுண்டு போட்ட இடத்தில் மாத்திரமின்றி அதனால் ஏற்பட்ட வெப்பகாற்றினால் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகினர். ஹிரோஷிமாவில் வீசிய குண்டினால் ஏறத்தாழ ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதேவேளை சில மணிநேரங்கள் கழித்து ஜப்பானின் நாகசாகி நகர்மீதும் அமெரிக்கா அணுகுண்டை வீசிய நிலையில், அங்கும் இதேபோன்ற பாதிப்பு ஏற்பட 90 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இதேவேளை இந்தக்குண்டுத்தாக்குதலின் மரணஓலம் அத்தோடு நின்றுவிடவில்லை. அணுகுண்டால் ஏற்பட்ட நச்சு வளிமண்டலம், ஜப்பானை தொடர்ச்சியாக தாக்கியது. அதற்கமைய கதிர்வீச்சு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் காரணமாக ஹிரோஷிமா மற்றும் நாகசாகி பகுதிகளில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது. 




குறித்த அணுக்கதிர் வீச்சானது, பல அண்டுகள் கடந்த நிலையில் ,கடந்த 1977 ம் ஆண்டில் தனது வீச்சை நிறுத்திக்கொண்டது. எனினும் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் இன்றும் வாழ்வதற்கு மக்கள் தயக்கம் காட்டியே வருகின்றனர். இதேவேளை அணுகுண்டினால் ஏற்படும் பாதிப்பு, அதனை தயாரித்த விஞ்ஞானிகளுக்கே தெரியாத நிலையில், ஒரு முன்னோட்டமாகவே, அமெரிக்கா ஜப்பான் மீது வீசியிருக்கலாம் என்ற பரவலான கருத்தும் இருக்கிறது. எவ்வாறெனினும் எண்ணிலடங்கான பல உயிர்களை கொன்று குவித்த சின்னப்பையன் எனும் அமெரி;க்காவின் அணுகுண்டால் உலக நாடுகளின் மத்தியில் அமெரிக்காவின் கோரத்தாண்டவம் கண்டனத்திற்குள்ளாக்கியது. இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் மாதம் 6 ம் திகதி அணுகுண்டு தாக்குதலால் உயிரிழந்தவர்களை ஞாபகப்படுத்தி அஞ்சலி செலுத்தும் வகையில் ஜப்பானிலும், உலக நாடுகளிலும் ஹிரோஷிமா தினம் அனுஸ்டிக்கப்படுகிறது.
இதுபோன்றதொரு கொடூறமான அவலநிலை உலகில்
ஏற்படக்கூடாதென்பதற்காகவும், உலக நாடுகளின் யுத்தத்தை இனியும் வளர்க்க கூடாதென்பதற்காகவும், 2 ம் உலக மகா யுத்தத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. சின்னப்பையன் என்ற அணுகுண்டை ஜப்பான் மீது அமெரிக்கா வீசியிருந்தாலும், இன்று உலகில் பெரிய பையனாக ஜப்பான் வளர்ந்திருப்பதற்கு அந்நாட்டின் தன்னம்பிக்கையும், உழைப்புமே காரணம்;. 2 ம் உலக மகா யுத்தம் நிறைவுக்கு வருவதற்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட ஜப்பான், உலக நாடுகளுக்கு ஒர் எடுத்துக்காட்டு. இனியொருயுத்தம் வேண்டாமென்பதை உலகுக்கு உணர்த்தும், ஹிரோஷிமா நாகசாகி சம்பவம் மனித குலத்தின் மிருக தனமான செயற்பாட்டுக்கு ஆதாரமாகும்…..


....................பிரசன்னா

No comments:

Post a Comment