Saturday 11 August 2018

SCHEDULED TRIBES , WORLD TRIBES DAY ,AUGUST 10





SCHEDULED TRIBES , 
WORLD  TRIBES DAY ,AUGUST 10





தமிழகப் பழங்குடிகள் தமிழ் நாட்டு மக்கள் தொகையில் 3.5% உள்ளனர் (2001 கணக்கெடுப்பு). தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட வெவ்வேறு பழங்குடிகள் உள்ளனர். இருளர், காடர், குறும்பர்,தோடர் போன்றோர்கள் பழங்குடிகளில் சிலர். தமிழ் நாட்டில் 30 மாவட்டங்களில் பழங்குடிகள் வாழ்கிறார்கள். பழங்குடிகள் பெரும்பாலும் காடும் காடுசார்ந்த நிலங்களிலும் வாழ்கின்றனர். இவர்கள் பணம் சார்ந்த பொருளாதாரத்தை அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. இவர்கள் தங்களுக்கென தனி மொழியும், குடும்ப மற்றும் குமுகப் (சமூகப்) பழக்க வழக்கங்களையும் கொண்டவர்கள். பெரும்பாலோருடை
மொழிகள் தமிழுடன் நெருங்கிய தொடர்புடையது என்றும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததென்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள். முதன் முதல் எட்கர் தர்ஸ்டன் என்பாரும், பின்னர் அனந்த கிருஷ்ண அய்யர், முனைவர் அய்யப்பன் போன்றோரும் பழங்குடிகளைப் பற்றிய ஆய்வுகள் செய்துள்ளனர். இவ்வகையான மக்கள் தற்போதைய சூழலில் தங்களில் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர்.




No comments:

Post a Comment