Posts

Showing posts with the label SUDHEER

SUDHEER MALAYALAM ACTOR DIED 2004 ,SEPTEMBER 17

Image
SUDHEER MALAYALAM ACTOR   DIED 2004 ,SEPTEMBER 17 Sudheer சுதீர்- 1970-களில் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். 1970-இல் நிழலாட்டம் என்ற படத்தில் இவர் அறிமுகமானார். தமிழில் முதலில் இவர் சிவாஜி கணேசன் நடித்த ‘ராமன் எத்தனை ராமனடி’ என்ற படத்தில் இளம் பிராயத்தில் நடித்தார்.  அதன் பின் 1982-இல் மீண்டும் “பைரவி” திரைப்படத்தில் இவர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.  (தமிழில் இவர் நடித்துள்ள தகவலைத் தந்தவர் நண்பர் கிரிஷ். அவருக்கு நன்றி). பைரவி படத்தில் சுருளிராஜனின் தம்பியாகவும் கீதாவின் அண்ணனாகவும் சுதீர் நடித்திருப்பார்.1972-இல் வெளிவந்த “செம்பரத்தி” என்ற படத்தில் அற்புதமாக இவர் நடித்திருந்தார். சத்யன்றே நிழலில் படத்திற்காக இவருக்கு கேரள அரசின் விருதும் கிடைத்தது. 95 படங்களில் நடித்துள்ளார். கொடுங்கல்லூர் என்ற ஊரில் முன்னாள் மாவட்ட நீதிபதியாகயிருந்த பி.ஏ.மொஹியூதீன் என்பவரது மகனாகப் பிறந்தார். இவரது மனைவி பெயர் ஸஃபியா. ஒரு மகளும் உள்ளார். தமிழில் ‘கல்யாணம் ஒரு கால்கட்டு’ [1984] போன்ற சில படங்களில் நடித்துள்ளார். .Sudheer wa...