KUSHPOO ,THE EVER GREEN LEGEND
KUSHPOO ,THE EVER GREEN LEGEND `அரசியல் கேள்விகள் மட்டும் இப்போ வேண்டாமே' என்ற வேண்டுகோளுடன் பேசினார் குஷ்பு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் குஷ்புவுக்கு, `அண்ணாத்த' 200-வது படம். `பா.ஜ.க-வில் இணையப்போகிறார்' என்ற செய்தி சமீபத்தில் வைரலானது. இந்த நிலையில், உத்தரபிரதேசம் சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைக்குக் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பி.ஜே.பிக்கு எதிராக ஆவேசமாகப் பேசியிருக்கிறார். இரண்டு தலைமுறைகள் கடந்தும்கூட எவர்கிரீன் நாயகியாக இருக்கும் குஷ்புவிடம் எப்போது பேட்டிக்கு அணுகினாலும் சுவாரஸ்யமான பதில்களுக்குப் பஞ்சமிருக்காது. 'அண்ணாத்த' படக்குழுவினருடன் குஷ்பு 'அண்ணாத்த' படக்குழுவினருடன் குஷ்பு தற்போது டெல்லியில் இருப்பவரிடம் பேசினோம். `அரசியல் கேள்விகள் மட்டும் இப்போ வேண்டாமே' என்ற வேண்டுகோளுடன் பேசினார். ``நான் நடிச்ச படங்கள் பத்தி எப்போதும் கணக்கு வெச்சிருக்கிறதில்லை. `அண்ணாத்த' என்னோட 200-வது படம்னு நீங்க சொல்லியிருக்கும் தகவல் எனக்கு இன்ப அதிர்ச்சி. அதுவும், ரஜினி சாருடன் பெரிய பேனர...