Posts

Showing posts with the label COMEDIAN

NAGESH ,TAMIL FAMOUS COMEDIAN BORN 1933 SEPTEMBER 27 - 2009 JANUARY 31

Image
  NAGESH ,TAMIL FAMOUS COMEDIAN BORN  1933 SEPTEMBER 27 - 2009 JANUARY 31 நாகேஷ் (செப்டம்பர் 27, 1933 - சனவரி 31, 2009) த‌மிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிக‌ராவார். இவர் நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.வாழ்க்கைச் சுருக்கம் நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். கிருஷ்ணன் ராவ்-ருக்மணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் தந்தை கிருஷ்ணன் ராவ் கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் உள்ள இரயில் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றிவந்தார். நாகேஷ் அவர்களை சிறுவயதில் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் கிண்டலாக அழைக்கப்பட்டார்.[1] தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு கோவை பி. எஸ். ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்ததால் அவரது முகத்தில் தழும்புகள் உண்டானத...

CHANDRA BABU ,COMEDIAN HISTORY

Image
CHANDRA BABU ,COMEDIAN HISTORY #சந்திரபாபு.... #மரணத்தை_மரணிக்க_செய்த_மகா_கலைஞன். சபாஷ் மீனாவில் அவர் நடித்திருந்த கதாபாத்திரம் தான் பின்னாளில் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கௌண்டமணி ஏற்று நடித்து மீண்டும் மாபெரும் வெற்றி பெற்றது. அடிமைப்பெண் படத்தில் அபாரமான நகைச்சுவையை சோவுடன் சேர்ந்து பண்ணியிருப்பார். அன்னையில் எலியோடான அவரின் ஸ்லாப்ஸ்டிக் காமெடி மறக்கவே முடியாது. கவலை இல்லாத மனிதன் படத்தில் எம்.ஆர். ராதாவின் தம்பியாக நாயகனாக நடித்திருப்பார். நாகேஷோடு சேர்ந்து ஒரு படத்தில் அவர் மஜ்னுவாக, நாகேஷ் லைலாவாக பெண் வேடமேற்று ஒரு பாடல் காட்சியில் நடித்திருப்பார்கள். #அபாரமான_அனுபவம்_அது. ஜெயகாந்தனுக்கு மிகவும் நெருங்கிய நண்பராக இருந்தவர். ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் குறுநாவலை தான் நாயகனாக நடித்து இயக்க விரும்பினார். அது மட்டும் நடந்திருந்தால், உலக தரத்திலான ஒரு படத்தை நிச்சயம் சந்திரபாபு அன்றே கொடுத்திருப்பார். எழுத்தாளர் ஜெயகாந்தன் மீதுள்ள அதீக உரிமையில் அவரிடம் கேட்காமலேயே அந்த கதையில் தான் நடித்து இயக்க போவதாய் அறிவிப்பு தந்துவிட்டு, விசயத்தை ஜெயகாந்தனிடம் வந்து சொ...

MANOBALA,THE COMEDIAN OF TAMIL/TELUGU CINEMA

Image
MANOBALA,THE COMEDIAN OF  TAMIL/TELUGU CINEMA “சாந்தி தியேட்டரும் சத்தியமூர்த்தி பவனும்!” சினிமா ``என் உண்மையான பெயர் பாலசந்தர். இயக்குநர் கே.பாலசந்தரின் ஊரான நன்னிலம் அருகில் இருக்கும் மருங்கூர்தான் என்னுடைய சொந்த ஊர். ஃப்ரீலான்ஸர் பத்திரிகையாளராக ‘ஃபிலிமாலயா’ பத்திரிகையில் எழுதும்போதுதான் பாலசந்தர் என்ற பெயரை ‘மனோபாலா’ என மாற்றிக்கொண்டேன். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக விகடன் தீபாவளி மலரைத் தவறாமல் வாசித்து வருபவன், இன்று அதே தீபாவளி மலருக்குப் பேட்டி அளிப்பதை, எனக்குக் கிடைத்த கெளரவமாக நினைக்கிறேன்!''-மனோபாலாவின் வார்த்தைகளில் அவ்வளவு சந்தோஷம். `ஆகாய கங்கை' முதல் `நைனா' வரை நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர், 900-க்கும் அதிகமான படங்களில் நடித்திருப்பவர். பத்திரிகையாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட மனோபாலாவிடம் பேசியதிலிருந்து... “என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் சினிமாவில் இல்லை. ஆனால், எனக்குச் சின்ன வயதில் இருந்தே சினிமாமீது காதல். ‘சினிமாவில் சேரப்போகிறேன்’ என்றதும், வீட்டில் கடுமையான எதிர்ப்பு. அப்போது நான் பெ...

MADAN BOB ACTOR,COMEDIAN OCTOBER 19,1953

Image
MADAN BOB  ACTOR,COMEDIAN   OCTOBER 19,1953 எஸ். கிருஷ்ணமூர்த்தி (ஆங்கிலம்:Madhan Bob) என்னும் இயற்பெயர் கொண்ட இவர், மதன் பாப் என்று பரவலாக அறியப்படும் திரைப்பட நகைச்சுவையாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார்.[1] இசையமைப்பாளராக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார்.[2] சிரிப்புக்கென்றே முத்திரை பதித்துள்ள நடிகர் மதன் பாப். நகைச்சுவைக் கலைஞர், இசையமைப்பாளர், தொலைக்காட்சியில் ‘பாட்டு தர்பார்’, ‘அசத்துப்போவது யாரு’, ‘மதன்பாபுடன் சிரியுங்கள்’ எனப் பல நிகழ்ச்சிகள் நடத்தியவர் எனப் பன்முகப் பெருமை கொண்டவர். இவரது சிரிப்பை கே.பாலசந்தர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில பார்த்துவிட்டு அதை வைத்து ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி இவரை “வானமே எல்லை” படத்தில் நடிக்க வைத்தார். அதுதான் ரசிகர்கள் மனதில் இன்றும் பதிந்து போயிருக்கிறது. இவருக்கு நல்ல இசைஞானம் உண்டு. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரஹ்மான் என்று பல இசையமைப்பாளர்களின் குழுவில் பங்கு பெற்றிருக்கிறார். சோ, எஸ்.வி.சே...