Posts

Showing posts with the label VAALAPPADI

VAZHAPPADI RAMAMOORTHY DIED 2002 OCTOBER 22

Image
  VAALAPPADI RAMAMOORTHY   DIED 2002 OCTOBER 22 வாழப்பாடி ராமமூர்த்தி  மறைவு நாள் ___________ வாழப்பாடி ராமமூர்த்தியின் மறைவு நாள் (27-10-2020) இன்று. ராஜுவ் படுகொலைப் பகுதியான ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் பொதுக்கூட்டம்,டி.ஆர்.கார்த்திகேயன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை, டில்லியில் வர்மா,ஜெயின் கமிஷன்களின் விசாரணை ஆகிய செய்திகளை முழுமையாக எழுதிய  ஒரே செய்தியாளன் இந்தியாவிலேயே அடியேன் மட்டுமே. படுகொலைக் களத்தில் நடந்தவை எனக்கு நினைவில் உள்ளன. சில மேடைகளில் வாழப்பாடி குறித்து அவதூறு., ராஜுவ் படுகொலைச் சதியில் வாழப்பாடிக்கும் பங்காம். "படுகொலைப் போது மாநிலக் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ஏன் அருகே இல்லை" என்பது குற்றச்சாட்டு.  நேரில் கண்டவன் என்ற முறையில் அதை நான் அறிவேன். விழா தொடங்க இரண்டு மணி நேரத்துக்கு முன்பே நான் விழா மேடை அருகே சென்றுவிட்டேன்.  ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்ட மேடை அருகே வந்தபோது அவருடன் வாழப்பாடியும் வந்தார்.  அப்போது ராஜீவ் காந்தியைத் தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு வாழ்த்து முழக்கங்களை எழுப்பிய வண்ணம் இருந்த...