Showing posts with label COMPANY. Show all posts
Showing posts with label COMPANY. Show all posts

Saturday, 20 March 2021

DUTCH EAST INDIA COMPANY FORMED 1602 MARCH 20

 

DUTCH EAST INDIA COMPANY 

FORMED 1602 MARCH 20


தமிழ் அடிமைகள்

ஒரு மறைக்கப் பட்ட காலனிய வரலாறு



ஐரோப்பிய காலனிய எஜமானர்கள், எமது நாடுகளில் கட்டி விட்டுச் சென்ற பிரமாண்டமான கோட்டைகளை கண்டு வியக்கிறோம். பாலங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், வெள்ளையரின் பெருமையை கூறுவதாகப் போற்றுகின்றோம். ஆனால், அதற்குப் பின்னால் இருந்த பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு யாருடைய மனக் கண்ணிலும் தோன்றுவதில்லை. இன்றைக்கும் அழியாத பிரமாண்டமான கோட்டைகள், தமிழ் அடிமைகளின் உழைப்பில் உருவானவை என்ற உணர்வு யாருக்கும் இல்லை. இன்னும் கொடுமை என்னவென்றால், காலனிய காலத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்த வரலாறு, இன்றைய தலைமுறையை சேர்ந்த யாருக்கும் தெரியாது. பாடசாலைகளில் கற்பிக்கப்படும், வரலாற்றுப் பாட நூல்களில் அதைப் பற்றி சிறு குறிப்புக் கூட கிடையாது. ஏன் இந்த இருட்டடிப்பு?  



தஞ்சையை ஆண்ட சோழர்கள், இலங்கை, இந்தோனேசியா மீது படையெடுத்து ஆக்கிரமித்த வரலாறு பலருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அதே தஞ்சையில் இருந்து, அதே இலங்கை, இந்தோனேசியாவுக்கு, தமிழர்கள் அடிமைகளாக கொண்டு செல்லப் பட்ட வரலாறு தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.


எந்தவொரு அரசியல்வாதியும் அதைப் பற்றிப் பேசுவதில்லை. எந்தவொரு இலக்கியவாதியும் அது பற்றி எழுதுவதில்லை. தமிழ் அடிமைகள் பற்றி அறிந்தவர்கள் கூட, தெரியாத மாதிரி வாயை மூடிக் கொண்டிருக்கலாம். ஏனென்றால், தமிழ் மக்களை மேற்கத்திய ஏகாதிபத்திய விசுவாசிகளாக மாற்றி வைத்திருக்க விரும்புவோர், உண்மைகளை பேசப் போவதில்லை. 




ஆப்பிரிக்காவில் இருந்து, கறுப்பின மக்களை அடிமைகளாக பிடித்துக் கொண்டு சென்றது போல, தமிழ் நாட்டில் நடந்துள்ளது. தமிழகத்தில் அடிமைகளாக பிடிக்கப் பட்ட தமிழர்கள், பெரும்பாலும் சிறுவர்கள் என்பது மிகவும் கொடுமையானது. தமிழர்கள் மத்தியில், "பிள்ளை பிடிகாரர்கள்" என்ற சொல் புழக்கத்தில் இருந்தது. அனேகமாக, அழும் குழந்தைகளை பயமுறுத்துவதற்காக அதைக் கூறுவதுண்டு. உண்மையிலேயே, பிள்ளை பிடி காரர்கள் காலனிய கால கட்டத்தில் இருந்துள்ளனர். 


தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும், காலனிய எஜமானர்களின் கீழ் வேலை செய்யும் பிள்ளை பிடிகாரர்கள் உலாவித் திரிந்தனர். சிறு நகரங்கள், கிராமங்கள் தோறும், சந்தைகள் கூடுமிடங்களில் காணப் பட்டனர். சந்தைக்கு வரும் சிறுவர்களைப் பிடித்து சென்றனர். இதனால், ஒரு காலத்தில் தமிழ்ச் சிறுவர்கள் சந்தை போன்ற பொது இடங்களுக்கு செல்ல அஞ்சினார்கள். டச்சு கிழக்கிந்தியக் கம்பனி, தமிழ் அடிமைகளை விலை கொடுத்து வாங்கி வந்தது. தமிழகத்தில் பஞ்சம் நிலவிய காலத்தில், அடிமைகளின் விலை மிகவும் குறைவாக இருந்தது.


தமிழர்கள் அடிமைகளான வரலாற்றுப் பின்னணியை அறிந்து கொள்வதற்கு, நாம் கிழக்கிந்தியக் கம்பனி தோன்றிய கால கட்டத்திற்கு செல்ல வேண்டும். இன்று உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும், ஐரோப்பிய மாதிரி முதலாளித்துவப் பொருளாதாரம், கிழக்கிந்தியக் கம்பனியுடன் ஆரம்பமாகியது என்றால் அது மிகையாகாது. ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள பழைய பங்குச் சந்தை கட்டிடம் தான், ஐரோப்பாக் கண்டத்தில் முதன்முதலாக உருவான பங்குச் சந்தை ஆகும்.  


ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள், குறிப்பாக டச்சுக் காரர்கள் தான், தமிழகத்தில் அடிமை வாணிபத்தில் ஈடுபட்டனர். அதற்காக, சென்னை நகரத்திற்கு வடக்கே, பழவேற்காடு எனுமிடத்தில் கிழக்கிந்தியக் கம்பனியின் அலுவலகம் இயங்கி வந்தது. கிழக்கிந்தியக் கம்பனி என்பது, உலகின் முதலாவது பன்னாட்டு நிறுவனம் ஆகும். அதன் பங்குதாரர்களாக, நெதர்லாந்து நிலப்பிரபுக்கள் இருந்துள்ளனர். கம்பனி என்ன தொழில் செய்தாலும், பங்குகளின் ஈவுத் (டிவிடன்ட்) தொகையை ஒழுங்காக செலுத்தி வந்தால் போதும். இதனால், கிழக்கிந்தியக் கம்பனி அதிக இலாபம் தரும் வியாபாரங்களில் ஈடுபட்டது. அடிமை வாணிபம் அதில் ஒன்று. 


பழவேற்காட்டில் தளம் அமைத்த கிழக்கிந்தியக் கம்பனி, ஆரம்பத்தில் தமிழ் நாட்டு பருத்தி ஆடைகளை வாங்கி ஏற்றுமதி செய்து வந்தது. அந்தக் காலத்திலேயே, தமிழகத்தில் ஆடைத் தொழிற்துறை சிறப்பாக வளர்ச்சி அடைந்திருந்தது. தமிழகத்து பருத்தி ஆடைகள் உலகம் முழுவதும் தரமானதாக கருதப் பட்டன. டச்சுக் காரர்கள், இந்தோனேசியா, இலங்கையை  தமது காலனிகளாக்கிக் கொண்ட பின்னர் தான், அடிமைகளை வாங்கத் தொடங்கினார்கள்.


இந்தோனேசியாவின் ஜாவா தீவு, ஒரு காலத்தில்   "பதாவியா"(Batavia ) என்று அழைக்கப் பட்டது. அங்கே தான், ஆசியாவில் முதலாவது டச்சு காலனிய ஆட்சி நிலைநாட்டப் பட்டது.  அமெரிக்க கண்டங்களில் காலனிகளை உருவாக்கிய ஐரோப்பியர்கள், அங்கு வேலை செய்வதற்கு, ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளை கொண்டு சென்று குவித்த வரலாறு அனைவருக்கும் தெரிந்ததே. அதே மாதிரி, பதாவியா காலனியில் (இந்தோனேசியா) வேலை செய்வதற்கு, தமிழ் நாட்டு அடிமைகளை கொண்டு சென்றனர். 


ஐரோப்பியர்கள், ஆசிய காலனிகளில் காணப்பட்ட வளங்களை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டதை சரித்திர நூல்கள் எழுதி வைத்துள்ளன. ஆனால், ஐரோப்பியர்கள் ஆசிய நாடுகளுக்கு இடையில் வணிகம் செய்தமை பற்றி, மிகக் குறைந்தளவு சரித்திரக் குறிப்புகள் மட்டுமே உள்ளன. 


ஐரோப்பியர்கள், குறிப்பாக போர்த்துக்கேயர்கள் வருவதற்கு முன்னர், ஆசிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், சீன மற்றும் அரேபிய வணிகர்களின் கைகளில் இருந்தது. ஆரம்பத்தில் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து வர்த்தகம் செய்த போர்த்துக்கேய வணிகர்கள், சில வருடங்களுக்குப் பின்னர், சில இடங்களில் தங்கி விட்டார்கள். 


காலப்போக்கில், போர்த்துக்கேயர்கள் அவற்றை தமது காலனிகளாக்கி, கோட்டைகளை கட்டி இராணுவ ரீதியில் பலப் படுத்தினார்கள். அந்தக் காலத்தில், போர்த்துகேய கப்பல்களில் கடமையில் இருந்த டச்சுக் கடலோடிகள், பிற்காலத்தில் தனியான காலனிய சக்தியாக மாறினார்கள். குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனாக, பல இடங்களில் போர்த்துக்கேயர்களை விரட்டி விட்டு, தமது காலனிகளை உருவாக்கினார்கள்.


இலங்கையிலும் அது தான் நடந்தது. இலங்கையின் வட பகுதியும், தென் மேற்குப் பகுதியும் மட்டுமே போர்த்துக்கேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்தன. மத்திய பகுதியும், கிழக்குப் பகுதியும் கண்டி மன்னனின் ஆளுகையின் கீழ் இருந்தன. போர்த்துக்கேயர்களை விரட்டுவதற்காக, டச்சுக் காரர்கள் கண்டி மன்னனுடன் கூட்டுச் சேர்ந்தனர். இரு தரப்பு ஒப்பந்தப் படி, போர்த்துக்கேயர்கள் விரட்டப் பட்ட பின்னர், அந்தப் பகுதிகளை கண்டி மன்னனிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. ஒப்பந்தங்களை முறிப்பது காலனிய வெள்ளையர்களுக்கு கைவந்த கலை.  


யாழ் குடாநாடு, மன்னார், திருகோணமலை, கொழும்பு, காலி ஆகிய பிரதேசங்களை கைப்பற்றிய டச்சுக்காரர்கள், அவற்றை கண்டி மன்னனிடம் ஒப்படைக்காமல் தாமே ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். அது மட்டுமல்ல, போர்ச் செலவு என்று கூறி, பெரியதொரு தொகையை கண்டி மன்னன் தமக்கு செலுத்த வேண்டும் என்று பொய்க் கணக்குக் காட்டினார்கள்.  அந்தளவு பெருந் தொகையை கண்டி மன்னனால் கட்ட முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். அதே நேரம், ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியது குறித்து எந்தக் குற்றவுணர்ச்சியும் அவர்கள் மனதில் இருக்கவில்லை. 


இலங்கைத் தீவு, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருந்தது. இயற்கைத் துறைமுகமான திருகோணமலை மட்டுமல்லாது, காலியும் முக்கியமான துறைமுகமாக கருதப் பட்டது. குறிப்பாக தென்னாபிரிக்காவில் நன்னம்பிக்கை முனையில் இருந்து கிளம்பும் கப்பல்கள், பொருட்களை ஏற்றிக் கொண்டு காலித் துறைமுகத்திற்கு வரும். பின்னர் அங்கிருந்து வேறு கப்பல்கள், அந்தப் பொருட்களை ஏற்றிக் கொண்டு இந்தோனேசியாவுக்கு செல்லும்.  ஐரோப்பா முதல் இந்தோனேசியா வரையிலான கடற் போக்குவரத்துக்கு, இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்தது. 


இலங்கையில், யானைகள், கறுவா பட்டைகள், முத்துக்கள் என்பன, டச்சுக் காலனியாதிக்கவாதிகளுக்கு முக்கிய வருமானம் ஈட்டித் தந்த ஏற்றுமதிப் பொருளாதாரமாக இருந்தது. கொழும்பில் இருந்த டச்சு காலனிய நிர்வாக எல்லைக்குள், தென்னிந்தியப் பகுதிகளும் அடங்கி இருந்தன. அதனால், தூத்துக்குடி முத்துக்களும் கிழக்கிந்தியக் கம்பனி ஊடாகவே ஏற்றுமதி செய்யப் பட்டன. நாகபட்டினம், யாழ்ப்பாண நிர்வாகத்தின் கீழ் அடங்கி இருந்தது.  


யாழ் குடாநாட்டில் இருந்து, நாகபட்டினம் துறைமுகத்திற்கு, யானைகள் ஏற்றுமதி செய்யப் பட்டன. (யாழ் குடாநாட்டை இணைக்கும் பகுதி யானையிறவு என்று அழைக்கப் பட்டதும் அதனால் தான்.) இந்தியாவுடனான வர்த்தகத்தை பாதுகாக்கும் நோக்குடன், யாழ்ப்பாண கோட்டையும், காரைநகர் ஹம்மன்ஹீல் கோட்டையும் கட்டப் பட்டிருந்தன.  


தென்னிலங்கையில், கொழும்புக்கு அருகில் உள்ள பகுதிகளில், உலகிற் சிறந்த கறுவாப் பட்டைகள் கிடைத்து வந்தன. ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும், கறுவா வணிகம் முழுவதும் டச்சுக்காரர்கள் கைகளில் வந்திருந்தது. பெருமளவு வருமானத்தை ஈட்டித்தந்த, வளம் கொழிக்கும் இலங்கைத் தீவை பகைவர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமென்றால், தென்னிந்தியாவில் இராணுவ தளம் அமைக்கப் பட வேண்டும் என்று கிழக்கிந்தியக் கம்பனி நினைத்தது. 


இருநூறு போர்வீரர்களைக் கொண்ட டச்சுக் காலனிய படை, யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்து நாகப் பட்டினத்திற்கு படையெடுத்துச் சென்றது. அங்கிருந்து தரை வழியாக கொச்சினுக்கு சென்றது. கேரளாவில் உள்ள கொச்சின், அன்று போர்த்துக்கேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. டச்சுப் படைகள் போர்த்துகேயர்களை விரட்டி விட்டு, அங்கே ஒரு முகாம் அமைத்துக் கொண்டன. போன காரியத்தை நிறைவேற்றி விட்டு, கிழக்கிந்தியக் கம்பனியின் போர்க் கப்பல்கள், யாழ்ப்பாணத்திற்கு திரும்பி வந்தன. அங்கே அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. 


டச்சு காலனிய சிறப்பு படையினர் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, யாழ்ப்பாணத்தில் ஒரு சதிப்புரட்சி நடக்க இருந்தது. எப்படியோ அது கண்டுபிடிக்கப் பட்டது. டச்சு காலனியப் படைகளில் இருந்தவர்கள் தான், யாழ்ப்பாண அதிகாரத்தை கைப்பற்ற சதி செய்தனர். அனேகமாக, அன்றைய காலனியப் படையில் பெருமளவு உள்நாட்டு வீரர்களும் இருந்திருக்கலாம்.


சதிப்புரட்சியில் ஈடுபட்ட அத்தனை பேரும் கண்டுபிடிக்கப் பட்டு, சிரச் சேதம் செய்யப் பட்டனர். இனிமேல் சதிப்புரட்சி செய்ய நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்வதற்காக, கொடூரமான காட்சிகள் அரங்கேறின. மரங்களில் இறந்த உடல்கள் கட்டித் தொங்க விடப் பட்டன. வெட்டப் பட்ட தலைகளை ஈட்டிகளில் குத்தி, பொதுச் சந்தைகளில் காட்சிக்கு வைத்திருந்தனர். 


டச்சுக் காரர்கள், ஆயிரக் கணக்கான தமிழ் நாட்டு அடிமைகளை கொண்டு வந்து இலங்கையில் குடியேற்றினார்கள். அவர்கள் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்தனர். வடக்கில் குடியேறியோர் தமிழ் மொழியும், தெற்கில் குடியேறியோர் சிங்கள மொழியும் பேசத் தொடங்கினார்கள். அதே மாதிரி, இந்தோனேசியாவில் குடியமர்த்தப் பட்ட தமிழகத்து அடிமைகள், இன்று இந்தோனேசிய மொழியை பேசுகின்றனர். சுருக்கமாக, ஐரோப்பியரால் கொண்டு செல்லப் பட்ட தமிழ் அடிமைகள், உள்ளூர் மக்களுடன் இனக் கலப்பு செய்து விட்டனர். அதனால், அவர்களது பூர்வீகத்தை கண்டுபிடிப்பது இயலாத காரியம். 


தென்னிலங்கையில், கறுவாத் தோட்டங்களில் வேலை செய்த உள்ளூர்வாசிகள் (சிங்களத் தொழிலாளர்கள்), கடுமையான உழைப்புச் சுரண்டல் காரணமாக வேலை நிறுத்தம் செய்தனர். நெதர்லாந்தில் இருந்து வந்திருந்த மேலதிக படையினர், கறுவாத் தொழிலாளர்களின் கலகத்தை அடக்குவதற்கு பயன்பட்டனர். அதற்குப் பின்னர், கறுவாப் பட்டைகளை உரிக்கும் தொழிலுக்கு, தமிழ் அடிமைகளை பயன்படுத்தினார்கள். பிற்காலத்தில், அந்த தமிழர்கள் அனைவரும் சிங்களவர்களாக மாறி விட்டனர். 


இலங்கையில், தமிழ் அடிமைகள் பல்வேறு கட்டுமான பணிகளிலும் ஈடுபடுத்தப் பட்டனர். கரையோரப் பகுதிகளை பாதுகாப்பதற்காக, கோட்டைகளை கட்டியதிலும், பாதைகள் செப்பனிட்டதிலும், தமிழ் அடிமைகளுக்குப் பங்குண்டு. யாழ்ப்பாணம், காலியில் இன்றைக்கும் உள்ள டச்சுக் கோட்டைகள், தமிழ் அடிமைகளின் உழைப்பினால் கட்டப் பட்டவை தான். நாடு முழுவதும் இருந்த நெல் வயல்களிலும் நிறையத் தமிழ் அடிமைகள் வேலை செய்தனர். 


புத்தளத்தை அண்டிய கடற் பகுதியில் முத்துக் குளிப்பதற்காகவும், தமிழ் அடிமைகள் கொண்டு வரப் பட்டிருக்கலாம். 1666 ஆம் ஆண்டு, கிழக்கிந்தியக் கம்பனியின் படையில் மேஜர் தரத்தில் இருந்த யான் வான் டெர்  லான் (Jan van der Laan), 400 படகுகளில் முத்துக் குளிப்போரைக் கொண்டு வந்தார். கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேரளவில் முத்துக்கள் எடுப்பதற்காக கடலில் குதித்தனர். அனேகமாக, அவர்கள் எல்லோரும் தமிழகத்து அடிமைகளாக இருக்க வேண்டும். 


புத்தளம் கடலில் முத்துக் குளிப்பது ஆயிரக் கணக்கான வருடங்களாக நடந்து வந்தாலும், பெருந் தொகையானோர் ஒரே நேரத்தில் கடலுக்குள் இறங்குவதில்லை. ஆனால், ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் எப்போதும் பெரியளவில் தான் சிந்திப்பார்கள். அதாவது அதிக இலாபம் சம்பாதிப்பதே அவர்களது குறிக்கோள். விளைவு? அன்றைய முத்துக்குளிப்பினால் கடல் நீர் நஞ்சாகியது. அதனால் சுமார் 1500 பேரளவில் அந்தச் சம்பவத்தில் கொல்லப் பட்டனர். 


இன்றைக்கு எங்காவது ஒரு தொழிற்துறையில் நடக்கும் விபத்தில், 1500 தொழிலாளர்கள் கொல்லப் பட்டால், அது படுகொலையாக கருதப் பட்டு உலகின் மனச் சாட்சியை உலுக்கி இருக்கும். முதலாளித்துவத்தின் இலாப வெறிக்கு பலியானவர்கள் என்று உலகம் உணர்ந்திருக்கும். ஆனால், அன்று இறந்தவர்கள், (தமிழ்) அடிமைகள் என்பதால், உலகில் யாருக்கும் அக்கறை இருக்கவில்லை.


அதே வருடம் (1666), வட இலங்கையில் இருந்து யானைகள் ஏற்றுமதி செய்ததன் மூலம், வருடாந்த நிகர இலாபம் கூடியது. அதனால், அந்த வருடத்து அடிமைகளின் இழப்பை விட, கிடைத்த மொத்த இலாபம் அதிகம் என்று, கிழக்கிந்தியக் கம்பனி திருப்தி அடைந்தது. இந்தக் கணக்கு, வழக்குகள் கிழக்கிந்தியக் கம்பனியால் கவனமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன. நெதர்லாந்து ஆவணக் காப்பகத்தில் வைக்கப் பட்டுள்ள, கிழக்கிந்தியக் கம்பனியின் ஆவணங்களை, நீங்கள் இன்றைக்கும் பார்வையிடலாம்.




இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி (இடச்சு மொழியில் Vereenigde Oostindische Compagnie அல்லது VOC), 1602, மார்ச் 20 இல் நிறுவப்பட்டது. நெதர்லாந்து அரசினால், ஆசியாவில் குடியேற்றவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, இதற்கு 21 ஆண்டுகாலத் தனியுரிமை வழங்கப்பட்டது. உலகின் முதலாவது பன்னாட்டு வணிக நிறுவனம் இதுவேயாகும். அத்துடன் உலகிலேயே முதன்முதலாகப் பங்குகளையும் இந்த நிறுவனமே விநியோகம் செய்தது. ஏறத்தாழ 200 ஆண்டுகள் உலகின் முக்கிய வணிக நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய இது, முறிவு நிலை (bankruptcy) அடைந்ததனால், 1798 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு இதன் சொத்துக்களும், கடன்களும் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன. [1]

அமைப்பு
இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி, ஒல்லாந்திலுள்ள, துறைமுக நகரங்களான, அம்ஸ்டர்டாம், டெல்வ்ட், ரொட்டர்டாம், என்குசென், ஊர்ன் ஆகியவற்றிலும், சீலாந்திலுள்ள (Zeeland), மிடில்பர்க், மொத்தம் ஆறு வணிக சபைகளைக் கொண்டிருந்தது. இவ் வணிக சபைகள் சேர்ந்து ஹீரென் XVII (பிரபுக்கள் 17) என அழைக்கப்பட்ட சபையை அமைத்திருந்தன.

இதன் பெயர் சுட்டுவதுபோல், இதில் 17 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் எண்மர் அம்ஸ்டர்டாம் சபையைச் சேர்ந்தவர்கள். நான்கு பேர், சீலந்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய சபைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உறுப்பினரைக் கொண்டிருந்தன. 17 ஆவது உறுப்பினர், சீலந்து அல்லது ஏனைய சிறிய சபைகளில் ஒன்றுக்குச் சுழற்சி முறையில் வழங்கப்பட்டது.


இந்தியாவிலிருந்த ஒல்லாந்து மற்றும் ஏனைய ஐரோப்பியக் குடியேற்றங்கள்
இந்த ஆறு சபைகளும் கம்பனிக்குத் தேவையான தொடக்க மூலதனத்தைச் சேகரித்தன. அவர்கள் சேகரித்த மூலதனத்தின் அளவுகள் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் சின்னம், ஒரு பெரிய "V" ஐயும், அதன் இடது, வலதுபக்கக் கால்களில், முறையே பொறிக்கப்பட்ட சிறிய அளவிலான "O" வையும், "C" யையும் கொண்டுள்ளது. இவற்றுக்கு மேல் கம்பனியின் செயற்பாட்டு இடத்தின் முதல் எழுத்துப் பொறிக்கப்பட்டது. அருகிலுள்ள அம்ஸ்டர்டாம் சபையின் சின்னத்தில் அம்ஸ்டர்டாமைக் குறிக்கும் அதன் முதல் எழுத்தான "A" பொறிக்கப்பட்டுள்ளதைக் காண்க. கம்பனியின் கொடியில் செம்மஞ்சள், வெள்ளை, நீலம் ஆகிய நிறங்கள் இடம் பெற்றிருந்தன. மத்தியில் கம்பனியின் சின்னம் பொறிக்கப்பட்டது.

Wednesday, 14 October 2020

SURRENDER OF EAST INDIA COMPANY TO AURANGAZEEB

 



SURRENDER OF EAST INDIA COMPANY  TO AURANGAZEEB

ஒளரங்கசீப் முன் மண்டியிட்ட கிழக்கிந்திய கம்பெனி

ஜஃபர் சையத்

பிபிசி உருது

25 செப்டெம்பர் 2018

ஆங்கிலேயரின் கோட்டையை ஒளரங்கசீப் முற்றுகையிட்டபோது நடந்தது என்ன?

1603ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்கு வந்தபிறகு தொடர் வெற்றிகளை பதிவு செய்தது. ஒரு நிறுவனம், உலக சரித்திரத்திலேயே முதல்முறையாக நாட்டையே பிடித்த வரலாற்று நிகழ்வை நிகழ்த்திக் காட்டியது.



ஆனால் அதற்காக ஆங்கிலேயர்கள் எடுத்த முயற்சியில் இறுதியில் வெற்றியடைந்தாலும், பல அவமானகரமான தோல்விகளையும் சந்திக்க நேர்ந்தது.

தோல்விகளை மறைப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்ட கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதை நிரூபிப்பதில் வெற்றியும் கண்டது.சிராஜ் உத் தவ்லா மற்றும் திப்பு சுல்தானை வெற்றிக் கொள்வதற்கு முன்னர், கிழக்கு இந்தியா கம்பெனி முகலாய பேரரசர் ஒளரங்கசீப்பிற்கு எதிராக போரிட முயன்று படுதோல்வியை எதிர்கொண்டது.



ஒளரங்கசீப் முன் மண்டியிட்ட கிழக்கிந்திய கம்பெனி

பிறகு, பிரிட்டனின் தூதர்கள் கைவிலங்குகளால் பிணைக்கப்பட்டு, முகலாய அரசவையில் ஒளரங்கசீப் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தங்கள் வர்த்தக மையங்களைத் தோற்றுவித்த கிழக்கிந்திய கம்பெனி, உலக அளவிலான வர்த்தகத்தை விரிவுபடுத்தியது.இந்தியாவின் மேற்கு கடற்கரையில் பாம்பே, சூரத் நகரங்கள், கிழக்கு கடற்கரையில் சென்னை மற்றும் கல்கத்தாவில் இருந்து 20 மைல் தொலைவில், கங்கை நதியில் அமைந்துள்ள ஹூக்ளி மற்றும் காசிம் பஜார், ஆகிய வர்த்தக மையங்கள் கிழக்கத்திய கம்பெனியின் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திரங்களாக விளங்கின.இந்தியாவில் இருந்து பட்டு, வெல்லம், துணி மற்றும் கனிமத்தை பிரிட்டானியர்கள் அதிக அளவில் கொள்முதல் செய்தார்கள். குறிப்பாக டாக்காவின் மல்மல் ரக துணிக்கு இங்கிலாந்தில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.பிரிட்டானியர்களின் வர்த்தகத்திற்கு வரி விதிக்கப்படாமல், பொருளின் மொத்த மதிப்புக்கு மூன்றரை சதவிகித வரியை விதித்தது முகலாய பேரரசு.



மும்பை துறைமுகத்தில் வணிகம் செய்த கிழக்கிந்திய கம்பெனி

.



முகலாயர்களின் வணிகக் கொள்கை மீதான சர்ச்சை


அந்த சமயத்தில், ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, போர்த்துகீசியர்களும், டச்சு வணிகர்களும், பல தனியார் வர்த்தகர்களும் இந்த பகுதியில் தீவிரமான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். முகலாய அதிகாரிகளோடு இணைந்து செயல்பட்ட அவர்கள், ஆங்கிலேயர்களிடம் இருந்த வணிக உரிமைகளை சொந்தமாக்க முயன்றனர்.லண்டனில் இருந்த கிழக்கிந்திய கம்பெனி அலுவலகத்தின் தலைமையகத்திற்கு இந்த செய்தி கிடைத்ததும், நிறுவனத்தின் தலைவர் ஜோஜாயா சைல்டுக்கு கோபம் தலைக்கேறியது. தங்களது லாபத்தை வேறு யாரும் பங்கு போட்டுக்கொள்வதை அவர் விரும்பவில்லை.இந்த சந்தர்ப்பத்தில் ஜோஜாயா எடுத்த முடிவு வித்தியாசமானது மட்டுமல்ல, பைத்தியகாரத்தனத்தின் உச்சம் என்றே சொல்லலாம். அரேபிய கடலிலும், வங்காள விரிகுடாவிலும் பயணிக்கும் முகலாயர்களின் கப்பல்களை வழிமறிக்கவும், அந்தக் கப்பல்களை கொள்ளையடிக்கவும் கிழக்கிந்திய கம்பெனியின் இந்திய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.இது மட்டுமல்லாமல், 1686 ஆம் ஆண்டில், பிரிட்டனில் இருந்து இரண்டு படைவீரர்களின் தொகுப்பை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தார். இந்தியாவில் இருக்கும் படையின் உதவியுடன் சிட்டகாங்கை கைப்பற்றவேண்டும் என அவர் உத்தரவிட்டார்.


ஜங்-ஏ-சைல்ட்


அவருடைய பெயரிலேயே இந்த சண்டை 'ஜங்-ஏ-சைல்ட்' என்று அழைக்கப்படுகிறது.இதை சைல்டின் அறியாமை என்று அழைப்பதா அல்லது 308 வீரர்களின் உதவியுடன் உலகின் சக்தி வாய்ந்த, பணக்கார அரசருக்கு எதிராக போர் தொடுக்க கொண்ட வீரமாக கருதுவதா என்று தெளிவாக கூறமுடியவில்லை. ஒளரங்கசீப் இந்தியாவில் பேரரசராக திகழ்ந்த அந்த சமயத்தில், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கில் ஒரு பகுதியை இந்தியா வழங்கியது. பொருளாதார ரீதியாக, அமெரிக்கா இன்று இருக்கும் வலுவான நிலையில் அன்று இந்தியா இருந்தது.


ஒளரங்கசீப் இந்துக்களை வெறுத்தது உண்மையா?

முகலாய ஆட்சி இந்தியாவின் களங்கமா? புகழா?

ஒளரங்கசீப்பின் ஆட்சி காலத்தில், முகலாய பேரரசு காபூலில் இருந்து டாக்கா வரையிலும், காஷ்மீர் முதல் பாண்டிச்சேரி வரை என 40 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரவியிருந்தது. அது மட்டுமல்ல, தக்காண சுல்தான்கள், ஆப்கானியர்கள், மராட்டியர்கள் என பல்வேறு விதமான சேனைகளை எதிர்த்து போராடி வெற்றிக் கொண்ட அனுபவமிக்க முகலாய ராணுவம், உலகின் எந்த ராணுவத்தையும் எதிர்த்து போராடக்கூடிய திறனை பெற்றிருந்தது.டெல்லியின் படைகள் ஒருபுறம் என்றால், நாற்பதாயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் வங்காளத்தின் சுபேதார் ஷாயிஸ்தா கானின் படைகள் மறுபுறம் இருந்தன. முகலாய சம்ராஜ்ஜியத்தின் மொத்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்திற்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. அதில், இந்தியர்கள், அரபியர்கள், ஆப்கானியர்கள், இரானியர்கள், ஐரோப்பியர்கள் என பல நாடுகளை சேர்ந்தவர்கள் பணி புரிந்தனர்.லண்டனில் இருந்து மொகலாயர்களுக்கு எதிரான போர் அறிவிக்கப்பட்டதும், மும்பையில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் வீரர்கள் முகலாயர்களின் சில கப்பல்களை கொள்ளையடித்தனர்.அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முகலாயர்களின் அல்பஹர் சிதீ யாகூத், சக்திவாய்ந்த கடற்படையை கொண்டு மும்பை கடற்கரையில் ஆங்கிலேயர்களை முற்றுகையிட்டார்.



மும்பையில் ஆங்கிலேயர்களின் கோட்டை, 1672ஆம் ஆண்டு ஓவியம்

.


அந்தச் சமயத்தில், பம்பாயில் இருந்த அலெக்ஸாண்டர் ஹாமில்டன் என்ற ஆங்கிலேயர், பிற்காலத்தில் எழுதிய தனது ஒரு புத்தகத்தில் தான் நேரடியாக பார்த்த சம்பவங்களைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்."20 ஆயிரம் படையினருடன் அல்பஹர் சிதீ தாக்குதல் நடத்தினார். நள்ளிரவில் அவர் ஒரு பெரிய துப்பாக்கியைக் கொண்டு வானத்தை நோக்கி சுட்டு எச்சரிக்கை விடுத்தபோது, ஆங்கிலேயர்கள் கோட்டைக்குள் அடைக்கலம் புகுந்தனர். அரைகுறை ஆடையில் இருந்த பெண்கள், குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள்" என்று அவர் அந்தப் போரை பதிவு செய்துள்ளார்."சிதீ யாகூத், கோட்டைக்கு வெளியே இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் இடங்களை அபகரித்துக் கொண்டு, அங்கு முகலாயக் கொடியை பறக்கவிட்டார். சண்டையிட வந்த ஆங்கிலேய படைவீரர்களை, முகலாய படை வீரர்கள் வெட்டித் தள்ளினார்கள். பலரை பிடித்து சங்கிலியால் பிணைத்து மும்பையின் தெருக்களில் நடத்தி அழைத்துச் சென்றனர்" என்கிறார் அலெக்ஸாண்டர்..

அந்த காலகட்டத்தில் மும்பையின் பெரும்பாலான பகுதிகள் போர்த்துகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பிரிட்டன் பேரரசர் போர்த்துகீசிய இளவரசியை மணந்து கொண்டபோது, மும்பை துறைமுகப் பகுதி, திருமணப் பரிசாக கொடுக்கப்பட்டது. அங்கு வலுவான கோட்டையை கட்டிய ஆங்கிலேயர்கள், தங்கள் வணிகத்தைத் தொடங்கினார்கள்.

14 மாத முற்றுகை

படிப்படியாக, இங்கிலாந்து நாட்டின் வர்த்தகர்கள், வீரர்கள், மத போதகர்கள், கட்டடக் கலைஞர்கள் மற்றும் நிபுணர்கள் என கடல் கடந்து வந்தவர்களும், இந்தியாவில் இருந்தவர்களும் மும்பையில் குடியேறத் தொடங்கினார்கள். எனவே கோட்டையில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்தது.முகலாயர்களின் முற்றுகையின்போது கோட்டையில் அனைவரும் தஞ்சமடைய, அதனை முற்றுகையிட்டார் சிதீ யாகூத். கோட்டைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விரைவிலேயே தீர்ந்து போயின.மறுபுறமோ, நோய் தாக்குதலால் மக்கள் அவதிப்பட்டனர். அதோடு, மும்பையின் தட்பவெட்பநிலை ஒத்துக் கொள்ளாத பிரிட்டானியர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்தது..

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், கிழக்கிந்திய கம்பெனியின் பணியாளர்கள் சிலர், ரகசியமாக தப்பிச் சென்று சிதீ யாகூத்தை சந்தித்தனர். அவர்களில் பெரும்பாலோனோர் இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக ஹெமில்டன் கூறுகிறார்.முகலாய தளபதி விரும்பியிருந்தால், கோட்டை மீது தாக்குதல் நடத்தி, அதை கைப்பற்றியிருக்கலாம். ஆனால், 'கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதான் ஆகவேண்டும்' என்ற எண்ணத்தில் அவர் முற்றுகையிட்ட பிறகும் வெகுதொலைவில் இருந்தே துப்பாக்கிச்சூடு நடத்தினார்.இதேபோன்ற சம்பவம், நாட்டின் கிழக்குப் பகுதியிலும் நடந்தது. முகலாயர்களை தாக்க திட்டமிட்டால் அவர்கள் சும்மா இருப்பார்களா? ஹூக்ளி நகரத்தில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் கோட்டையை வங்காளத்தின் சுபேதார் ஷாயிஸ்தா கான் முற்றுகையிட்டார். கோட்டையில் இருந்து செல்லும் அனைத்து வழிகளையும் அவர் மூடிவிட்டார்.

இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டதால் ஹூக்ளி கோட்டையின் முற்றுகை விரைவில் முடிந்துவிட்டது, ஆனால் பாம்பேயில் 15 மாதங்கள் வரை முற்றுகை தொடர்ந்தது. இறுதியில் வேறு வழியே இல்லை என்ற நிலையில் கிழக்கிந்திய கம்பெனி தனது தூதர்கள் இருவரை ஒளரரங்கசீப்பின் அரசவைக்கு அனுப்பியது. முற்றுகையை முடித்துக் கொள்வதற்காக ஒளரங்கசீப் விதிக்கும் நிபந்தனைகளை கேட்க அனுப்பப்பட்ட தூதுவர்கள் அவர்கள்.



ஒளரங்கசீப்பின் அரசவையில் மன்னிப்புக் கோரும் பிரிட்டன் தூதர்கள்

.







ஓளரங்கசீப்பின் அரசவை


ஜார்ஜ் வெல்டன் மற்றும் அப்ராம் நாவார் ஆகிய அந்த இரண்டு தூதர்களுக்கும், பல மாத முயற்சிகளுக்கு பிறகு, 1690ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் முகலாய பேரரசர் ஒளரங்கசீப்பின் அரசவைக்கு செல்ல அனுமதி கிடைத்தது.கைகளிலும் விலங்கிடப்பட்ட தூதர்கள் இருவரும் குற்றவாளிகளைப் போல் அழைத்துச் செல்லப்பட்டனர். தலை வணங்கி மண்டியிட்டிருந்த அவர்கள் இருவரையும் பார்ப்பதற்கு ஒரு நாட்டின் பிரதிநிதிகளைப் போல தோன்றவில்லை, யாசகம் கேட்க வந்தவர்களைப் போல் தோன்றியது.தூதர்கள் இருவரும் ஒளரங்கசீப்பின் முன் அழைத்துச் செல்லப்பட்டு, அருகில் சென்றதும், தரையில் நெடுங்கிடையாக வணங்கச் சொல்லி உத்தரவிடப்பட்டது.


தூதர்களை கடுமையாக சாடிய பேரரசர் ஒளரங்கசீப், அவர்களது விருப்பம் என்ன என்று கேட்டார்.



ஆங்கிலேயரின் கோட்டையை ஒளரங்கசீப் முற்றுகையிட்டபோது நடந்தது என்ன?



முதலில் கிழக்கிந்திய கம்பெனியின் குற்றத்தை ஒப்புக் கொண்ட தூதர்கள், அதற்காக மன்னிப்பு கோரினார்கள். பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட இங்கிலாந்தின் வணிக உரிமம் மீண்டும் வழங்கப்படவேண்டும் என்றும், பாம்பே கோட்டை முற்றுகையை முடித்துக் கொள்ளவேண்டும் என்றும் மேலிடத்தின் விருப்பங்களை எடுத்துரைத்தனர். இந்த போருக்காக முகலாய அரசுக்கு ஆன செலவு ஒன்றரை லட்சம் ரூபாயை தரவேண்டும், இனிமேல் முகலாய அரசுக்கு கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்ற நிபந்தனைகளின் பேரில் கோட்டையை முற்றுகையில் இருந்து விடுவிக்க பேரரசர் ஒளரங்கசீப் ஒப்புக்கொண்டார்.


கோஹினூர் வைரம் -- ஆறு கட்டுக்கதைகள்

இந்தியாவில் அரசியல் ஒருமைப்பாடு ஏற்பட பிரிட்டிஷ் காரணமா?

மேலும், கிழக்கிந்திய கம்பெனியின் தலைவர் ஜோஜியா சைல்ட் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், அவர் இந்தியாவிற்கும் இனி காலடி எடுத்து வைக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஒளரங்கசீப்பின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர, வேறு வழி எதுவும் இல்லாத நிலையில், நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகம், 14 மாத முற்றுகையில் இருந்து விடுதலை பெற்றது.முற்றுகைக்கு முன்பு கோட்டையில் 700 முதல் 800 பேர்வரை இருந்ததாகவும், தொற்று நோய்க்கும், முகலாயர்களின் வாளுக்கும் இரையாகாமல் எஞ்சியிருந்தவர்களின் எண்ணிக்கை அறுபதாக குறைந்துவிட்டது என்று ஹாமில்டன் தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.



கால சுழற்சியில் கிழக்கிந்திய கம்பெனி, முகலாய பேரரசர் பஹாதுர் ஷா ஜஃபரை கைது செய்தது



சரித்திர களங்கத்தை துடைத்த கிழக்கிந்திய கம்பெனி


முகலாய பேரரசால் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியைப் பற்றிய தகவல் பிரிட்டன் மக்களை சென்றடையக்கூடாது என்பதற்காக கிழக்கிந்தியா கம்பெனி பல்வேறு முயற்சியையும் மேற்கொண்டது.ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் முகலாயர்களின் போர் பற்றி ஜான் ஆவுங்கடின் என்பவர் எழுதிய போது, இதில் கிழக்கிந்திய கம்பெனியின் தோல்வியின் காரணம் முகலாயர்களின் ஏமாற்றுவேலை என்று எழுதப்பட்டது. இதற்காக அவருக்கு 25 பவுண்டு 'பரிசுத்தொகை' வழங்கப்பட்டது. அந்த காலத்தில் இது மிகப் பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது.


தனது புத்தகத்தில் பிரிட்டானிய படைவீரர்களின் வீரத்தைப் பற்றிய கதைகளை பல்வேறு இடங்களில் சொல்லியிருக்கிறார் ஜான் ஆவுங்கடின். பத்து மடங்கு பலம் கொண்ட எதிரிகளின் ராணுவத்துடன் மோதிய ஆங்கிலேயர்கள் வீரத்தை எடுத்துக் காட்டினார்.போரில் வென்றது பிரிட்டானியர்களே, முகலாயர்கள் அல்ல என்றும், தோற்கடிக்கப்பட்டது சிதி யாகூத் என்றும் பதிவு செய்திருக்கிறார். கிழக்கிந்திய கம்பெனியின் தூதர்கள் முகலாய அரசவைக்கு சென்று மன்னிப்புக் கோரியதையும், அங்கு ஒப்புக் கொண்ட ஒப்பந்தத்தைப் பற்றிய தகவல்களையே அவர் மறைத்துவிட்டார்.


ஹேமில்டன் உண்மையான தகவல்களை தனது புத்தகத்தில் எழுதினார், ஆனால் 40 ஆண்டுகளுக்கு பிறகுதான் புத்தகம் வெளியானது என்பது காலத்தின் மிகப்பெரிய சோகம். வரலாற்று நிகழ்வுகள் மறைக்கப்படுவதும், அழுத்தப்படுவதும் திருத்தப்படுவதும்கூட சரித்திரத்தின் ஏடுகளில் பதிவாகிறது என்பதையும் குறிப்பிட வேண்டிய அவசியம் இருக்கிறது. கிழக்கிந்திய கம்பெனியின் மிகப்பெரிய தோல்வியைப் பற்றி சொல்லப்பட்ட புத்தகம் வெளிவந்தபோது, அது அதிக மிகவும் முக்கியத்துவம் பெற முடியாத அளவுக்கு காலம் கடந்துவிட்டது என்பது காலத்தின் கோலமா? திட்டமிடப்பட்ட சரித்திர மறைப்பா?


ஒளரங்கசீப் பிரிட்டனை மன்னித்து, அவர்களின் வணிக உரிமத்தை புதுப்பிக்காமல், இந்தியாவை விட்டு வெளியேற்றியிருந்தால் என்னவாகியிருக்கும் என்ற ஆர்வமூட்டும் கேள்வி மனதில் பிரம்மாண்டமான கேள்வியாக விஸ்வரூபம் எடுக்கிறது. அப்படி நடந்திருந்தால், இந்தியா வரலாறு மட்டுமல்ல, உலக வரலாறும் வேறு மாதிரி ஆகியிருக்கும் அல்லவா?


பிற செய்திகள்

Wednesday, 19 September 2018

EAST INDIA COMPANY ,FORMED 1600,DECEMBER 31





EAST INDIA COMPANY ,FORMED 1600,DECEMBER 31

Thomas Stephens (Jesuit)
Early years and studies

The son of a merchant, Stephens was born in Bushton, Wiltshire, England, and studied at Oxford before becoming a Catholic. He went to Rome where he entered the Society of Jesus in 1575. He did some philosophical studies at the Collegio Romano before departing for Lisbon, en route for Goa which he reached on 24 October 1579, probably the first Englishman to set foot on Indian soil.[1] This is, however, disputed by G. Schurhammer and others.[2] After a few months of theological studies he was ordained priest in 1580. He learned to read and write in Konkani and Marathi.

Before the end of the century he was already known in England thanks to a letter written to his father, and published in the 2nd volume of Richard Hakluyt's Principal Navigations (in 1599) in which he gives a description of Portuguese India and its languages.stirred great interest  about india .

JAMES  LANCASTER

On 10 April 1591 Lancaster started from Torbay in Devon, with George Raymond and Samuel Foxcroft, on his major voyage to the East Indies; this fleet of three ships (Penelope, Marchant Royal and Edward Bonaventure[1]) was the earliest of the English overseas Indian expeditions. They reached Table Bay on 1 August 1591.[2]

Losing one ship off Cape Correntes on 12 September, the squadron rested and refitted at Zanzibar (February 1592), rounded Cape Comorin the following May, and reached the Malay Peninsula having arrived at Penang in June. Here Lancaster remained on the island until September of the same year and pillaged every vessel he encountered.

After a later crossing to Ceylon, the crews insisted on returning home. The return voyage was disastrous with only twenty-five officers and men surviving to reach England in May 1594. Lancaster himself reached Rye on 24 May 1594. In 1601 Captain Admiral James Lancaster unintentionally performed an experimental study of lemon juice as a preventive for scurvy






Formation


P.[16][17] Two days later, "the Adventurers" reconvened and resolved to apply to the Queen for support of the project




.[17] Although their first attempt had not been completely successful, they nonetheless sought the Queen's unofficial approval to continue.
They bought ships for their venture and increased their capital to £68,373.The company received a Royal Charter from Queen Elizabeth I on 31 December 1600. 

Jahangir investing a courtier with a robe of honour, watched by Sir Thomas Roe, English ambassador to the court of Jahangir at Agra from 1615 to 1618, and others
English traders frequently engaged in hostilities with their Dutch and Portuguese counterparts in the Indian Ocean. The company achieved a major victory over the Portuguese in the Battle of Swally in 1612, at Suvali in Surat. The company decided to explore the feasibility of gaining a territorial foothold in mainland India, with official sanction from both Britain and the Mughal Empire, and requested that the Crown launch a diplomatic mission.[26]








In 1612, James I instructed Sir Thomas Roe to visit the Mughal Emperor Nur-ud-din Salim Jahangir (r. 1605–1627) to arrange for a commercial treaty that would give the company exclusive rights to reside and establish factories in Surat and other areas. In return, the company offered to provide the Emperor with goods and rarities from the European market. This mission was highly successful, and Jahangir sent a letter to James through Sir Thomas Roe:[26]

Upon which assurance of your royal love I have given my general command to all the kingdoms and ports of my dominions to receive all the merchants of the English nation as the subjects of my friend; that in what place soever they choose to live, they may have free liberty without any restraint; and at what port soever they shall arrive, that neither Portugal nor any other shall dare to molest their quiet; and in what city soever they shall have residence, I have commanded all my governors and captains to give them freedom answerable to their own desires; to sell, buy, and to transport into their country at their pleasure. For confirmation of our love and friendship, I desire your Majesty to command your merchants to bring in their ships of all sorts of rarities and rich goods fit for my palace; and that you be pleased to send me your royal letters by every opportunity, that I may rejoice in your health and prosperous affairs; that our friendship may be interchanged and eternal.


— Nuruddin Salim Jahangir, Letter to James I.


Wednesday, 12 July 2017

EAST INDIA COMPANY CHEATED MAHARAJA AT THE AGE OF 50 AND STOLE KOHINOOR DIAMOND




EAST INDIA COMPANY CHEATED MAHARAJA AT THE AGE OF 15 AND STOLE KOHINOOR DIAMOND

kohinoor2இங்கிலாந்து அரசியின் மணிமுடியில் பதிக்கப்பட்டுள்ள  கோகினூர் வைரம் இந்தியாவிற்குச் சொந்தமானது அது மீட்கப்பட வேண்டும் என்று அகில இந்திய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான முன்னணி ஆகியவை இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கில் இந்திய அரசின் நிலைப்பாடு ஒவ்வொருமுறையும் முரணான  தகவல்கள் வழங்கி வருவதாக அமைந்துள்ளது. கோகினூர் வைரம் பரிசாகக் கொடுக்கப்பட்டதால் அன்பளிப்பைத் திரும்பக் கேட்பது முறையல்ல என்ற வகையில்  கருத்துக்களை நீதிமன்றத்தில் முன் வைத்த அரசு, இப்பொழுது கோகினூர் வைரத்தை மீட்பது குறித்த தனது முடிவை அரசு விரைவில் அறிவிக்கும் என்று பின்வாங்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் கோகினூர் வைரத்தை பரிசாகக் கொடுக்க நேர்ந்த மன்னரின் நிலைமையையும் நாம் பரிசீலனை செய்வது இங்கிலாந்து வைரத்தைப் பெற்றது நேர்மையான முறையில்தானா  என்பதைத் தெளிவுபடுத்தும்.
Duleep_Singh2ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள – என்றொரு பழைய பாடல் உண்டு. அதில் கூறப்பட்ட பரிதாபத்திற்குரிய நிலையில் சில மன்னர்கள் வாழ்ந்த வரலாறுகளும் உண்டு. பெயரளவில் மன்னர் என்ற  பட்டம் இருக்கும், ஆனால் உரிமையுடன் ஆள்வதற்கோ நாடிருக்காது. அவர்களுள் ஒருவரென வாழ்ந்தவர் நமது இந்திய மன்னர் துலிப் சிங் (Maharaja Duleep Singh). இவர் சீக்கியப் பேரரசை உருவாக்கிய, “பஞ்சாப் சிங்கம்” என்று புகழப்பட்ட பேரரசர் ரஞ்சித் சிங் (Maharaja Ranjit Singh, the Lion of Punjab) அவர்களின் கடைசி மகன். பிற்காலத்தில் நாடில்லாது வாழ்ந்த மன்னர் துலிப் சிங் ஆட்சிக்கு வந்ததென்னவோ அவரது ஐந்தாவது வயதில். அவரது பிரதிநிதியாக அவரது தாயாரான பேரரசியும், பேரரசியின் சகோதரரும்,  அதாவது மன்னரின் தாய்மாமனும் பொறுப்பேற்று நாட்டை ஆண்டார்கள்.  ஆனால், துலிப் சிங்கின் பத்து வயதிலேயே நாடு ஆங்கிலேயர் வசமானது, அவரும் நாடுகடத்தப்பட்டார். மன்னர் துலிப் சிங்கின் இரங்கத்தக்க வாழ்க்கை வரலாறுதான் நாம் பார்க்கப்போவது.
kohinoor7பஞ்சாபின் சீக்கிய சிற்றரசுகளை ஒருங்கிணைத்த வீரர், அரசர் ரஞ்சித் சிங்,  ஆப்கானில் இருந்து படையெடுத்து வந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த ஆப்கானியர்களை விரட்டியடிக்கும் வகையில் அதனை ஒரு பேரரசாக விரிவுபடுத்திச் சிறப்புற ஆட்சி செய்தார். ஆப்கானிய அரசின் ‘ஷா சுஜா துரானி’ (Shah Shujah Durrani) என்பவரிடம் இருந்துதான் இவருக்கு கோகினூர் வைரம் கிடைத்தது. அதை அவர் தனது கையணியில் பதித்து அணிந்திருந்தார். பேரரசர் ரஞ்சித் சிங் சீக்கிய குல மரபுகள் எனப் போற்றப்படும் நீதிக்கும் நேர்மைக்காகவும் போராடுவது, வலுவற்றவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்பது போன்ற பண்புகளின் இருப்பிடமாக இருந்தவர். இவரது சமயச்சார்பற்ற மனப்பான்மை மக்களிடம் இவருக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தந்திருந்தது.  இவரது அரசவையிலும், படையிலும் பல சமயங்களையும், இனத்தையும் சார்ந்தவர்கள் இடம் பெற்றதுடன் அவர்கள் உயர்பதவிகளும் அடையும் வாய்ப்பும் பெற்றிருந்தனர். ரஞ்சித் சிங் சீக்கிய மாமன்னர் என்றாலும் இந்து, முஸ்லிம், சீக்கியர், மற்றும் ஐரோப்பியர் சிலரும் இவரது பேரரசில் முக்கியப் பதவிகள் வகித்தனர். சீக்கியக் கோவிலை மறுசீரமைத்து அதனைப் பொற்கோவிலாக மாற்றினார். இவரது ஆட்சிக்காலம் மிகவும் சிறப்புற்று விளங்கியது. இவரது கடைசி மனைவி ‘ராணி ஜிந்தன்’ என அழைக்கப்படும்  ‘ஜிந்த் கார்’ (Jind Kaur), இவருக்கு இக்கால பாகிஸ்தானின் லாகூர் நகரில் செப்டெம்பர் 6, 1838 அன்று பிறந்தவர் துலிப் சிங். இவர் பிறந்த ஓராண்டுக்குள் பேரரசர் ரஞ்சித் சிங் மறைந்துவிட்டார்.
maharaja_ranjit_singhபேராற்றல் கொண்ட பஞ்சாப் சிங்கம் ரஞ்சித் சிங் மறைவின் போது  இளவரசனாக இருந்த துலிப் சிங் பத்து மாதக் குழந்தை. ரஞ்சித் சிங்கின் கடைசி மனைவியான இவரது தாயார் இவரை அழைத்துச் சென்று ஜம்முவில் அமைதியான வாழ்க்கையை வாழத் தொடங்கினார். மன்னரின் மூத்த மகன் ‘ஹரக் சிங்’ (Kharak Singh) நாட்டை ஆளத் தொடங்கினார். ஆனால் அரசியல் சச்சரவுகளில் இவரும், இவருக்குப் பின்னர் அரசரான, பஞ்சாப் சிங்கத்தின் மற்றொரு மனைவியின் மகனான மன்னர் ‘ஷெர் சிங்’ (Maharaja Sher Singh) என்பவரும், ‘தியன் சிங்’ (Dhian Singh), என்பவரும் அடுத்தடுத்து ஐந்தாண்டுகளுக்குள் கொலை செய்யப்பட்டு இறந்தனர். இவ்வாறு  அடுத்தடுத்து ரஞ்சித் சிங்கின் அரசவாரிசுகள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிட, ஆளும் பொறுப்பை ஏற்க 1843 ஆம் ஆண்டு துலிப் சிங் வரவழைக்கப்பட்டார். அப்பொழுது பஞ்சாபின் மன்னராக முடி சூட்டப்பட்டபொழுது  அவருக்கு வயது  ஐந்து. அவரது தாயார் இவர் சார்பாக ஆட்சி செலுத்தினார். அரசியின்  சகோதரரும் உதவினார். சிறுவனான துலிப் சிங்கை அரசனாக்கி, கைப்பொம்மையாக இருக்க வைத்து அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தவர்களுடன் போராடி தனது மகனில் உரிமையை நிலைநாட்டி  திறமையாக ஆண்டார் இருபத்தி ஐந்தே வயதான அரசி ஜிந்தன். அரசியின் தனிப்பட்ட வாழ்க்கையில் அரசு அதிகாரிகளுடன் முறைதவறிய உறவுகள் என்ற புரளி தோன்றி, இராணுவம் கட்டுப்பாடிழந்து கலகத்தில் இறங்கியது. அரசி மிகத் திறமையுடன் எதிர்க்கத் துணிந்த பகைவர்களையும், புரட்சி செய்த படையையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததுடன், அரசுக்கு எதிராக உருவான சதிகளையும் முறியடிக்கத் தொடங்கினார். ஆறு ஆண்டுகள் தாயார் மற்றும் மாமன் உதவியுடன் ஆட்சி செய்தார் துலிப் சிங்.
இந்தச் சூழ்நிலையில், குழப்பங்களைத் தக்க வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள விரும்பியது இங்கிலாந்தின் கிழக்கிந்திய நிறுவனம். அரசி நாட்டின் எல்லையான சட்லஜ் நதியோரம், தெற்கு தென்கிழக்குப் பகுதிகளில் ஆங்கிலேயரை எதிர்கொண்டு போரிட படையை அனுப்பினார். படைத்தளபதிகளில் சிலர் ஆங்கிலேயர்களின் ஆசைவார்த்தைக்கு மயங்கி அவர்கள் கைக்கூலியாக மாறி நாட்டுக்கு இரண்டகம் விளைவித்தனர். அதன் விளைவாக, ஆங்கிலேயர் தொடங்கிய முதற்போரில் நாட்டைக் கைப்பற்றினர். ஆங்கில அரசு, சீக்கிய அரசுப் பொறுப்பை அரசரிடம் விட்டு வைத்தாலும், திட்டமிட்டு முதலில் இளவரசரின் சார்பாக  பின்னணியில்  அரசாட்சி செய்த இவரது தாயார் அரசி ஜிந்தனை பதவி நீக்கி அந்த இடத்தில் தங்களுக்கு ஆதரவான மற்றொருவரை நியமித்தது. பின்னர் அரசியைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தியது. இரண்டாவது ஆங்கில சீக்கியப் போரின் முடிவில் சீக்கியப் பேரரசு, ஆங்கில அரசின் பகுதியாக மார்ச் 29, 1849ஆம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்டது. அந்த ஆவணத்தில் கையெழுத்திட்ட இளவரசர் துலிப் சிங்கிற்கு அப்பொழுது வயது பத்து. அவரது தந்தை பஞ்சாப் சிங்கம் ரஞ்சித் சிங் சீக்கியப் பேரரசை உருவாக்கிய முதல் மன்னர், ஆனால் அவரது மகன் துலிப் சிங்கோ சீக்கியப்பேரரசின் கடைசி மன்னர் என்ற நிலை ஏற்பட்டது. துலிப் சிங்கிற்கு ஆதரவாகப் புரட்சிகள் தோன்றி, சீக்கியப் பேரரசு  மீண்டும் துலிப் சிங்கினால் தழைத்து விடாது இருப்பதற்காக, துலிப் சிங்கை அவரது தாய் இருக்கும் இடத்திலிருந்தே பிரித்து ஆங்கிலேய மருத்துவரான ஜான் லாகின், அவரது மனைவி லீனா லாகின் (Dr John Login & Lady Lena Login) என்பவர்களின் குடும்பத்தின் பொறுப்பில் அவர் 1850 இல் ஒப்படைக்கப்பட்டார், பஞ்சாபில் இருந்து 140 மைல்களுக்குத் தொலைவில் ஆங்கிலேயர் குடியிருப்புப் பகுதிக்கு மன்னர் துலிப் சிங் அனுப்பப்பட்டார்.
kohinoor9தாயையும் மகனையும் ஒருவரை ஒருவர் சந்திக்க அனுமதியளிக்காது பிரித்து வைத்ததுடன், துலிப் சிங்கிற்குத் தனது பின்னணி தெரியாது இருக்குமாறு அவர் இந்தியர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, ஆங்கிலேயர் மேற்பார்வையில் கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்பட்டார். ஆங்கிலேயர் கொள்கைப்படி ஆங்கிலமும், கிறித்துவ மதமும் அவருக்குப் போதிக்கப்பட்டது. பின்னர் துலிப் சிங் கிறித்துவராக அவரது 14 ஆம் வயதில் (8/3/1853 அன்று) சமய மாற்றம் செய்யப்பட்டார். ஆங்கிலேய வாழ்க்கைமுறையைப் பின்பற்றத் துவங்கிய துலிப் சிங்கை  இந்தியாவிலிருந்தே இங்கிலாந்திற்குச் சூழ்ச்சியாக அவரது 15 ஆவது வயதில் (19/4/1854 அன்று) நாடுகடத்தியது கிழக்கிந்திய நிறுவனம். சூழ்ச்சியின் உச்சமாக, நாட்டைக் கையகப்படுத்திய உடன்படிக்கையின் அடிப்படையில், தோல்வியுற்ற நாட்டின் மன்னர் தனது மதிப்புமிக்க செல்வங்களை இங்கிலாந்தின் பேரரசியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பஞ்சாப் சிங்கம் தனது கையில் அணிந்திருந்த உலகப் புகழ்பெற்ற கோகினூர் வைரம் பதித்த அணிகலனை அரசியிடம் சேர்ப்பிக்க ஏற்பாடும் செய்தது.
இவ்வாறு பஞ்சாபை இங்கிலாந்தின் கிழக்கிந்திய நிறுவனத்தின் பகுதியாக இணைக்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அதனுடன் கோகினூர் வைரத்தையும் வெற்றிபெற்ற இங்கிலாந்திற்குப் பரிசாக வழங்க வேண்டும் என்ற குறிப்பையும் இணைத்து, சூழ்ச்சியால் கோகினூர் வைரத்தைக் கைப்பற்றும் திட்டத்தில் தனி அக்கறை எடுத்துக் கொண்டு செயல்படுத்தியவர் டல்ஹௌசி பிரபு. கிழக்கிந்திய நிறுவனத்திற்குச் சிக்கல் ஏற்படாமல் இருக்க இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டு, இங்கிலாந்திற்கு நாடுகடத்தப்பட்ட  துலிப் சிங், இங்கிலாந்தின் பேரரசி விக்டோரியாவிடம் கோகினூர் வைரத்தைக் கொண்டு சேர்த்த பொழுது அவருக்கு அகவை 15. சுருக்கமாக, இங்கிலாந்து அரசின் அரசியல் சதுரங்கத்தில் மன்னரும் ஒரு காயாக நகர்த்தப்பட்டார். வரலாற்றில் இங்கிலாந்தில் குடியேறிய முதல் சீக்கியரான  பஞ்சாப் மன்னர்  துலிப் சிங் பெற்றோர், குடும்பம், கலாச்சாரம், சமயம், நாடு, மொழி என அனைத்துத் தொடர்பும் துண்டிக்கப்பட்டு இளமையிலேயே தனிமையில் முற்றிலும் புதிய வேறோரிடத்தில் வாழ நேர்ந்தது.  இதற்கிடையில், ஆங்கில அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்டு, மகனிடம் இருந்து பிரிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட அரசி ஜிந்தன் பணிப்பெண் போன்ற மாறுவேடத்தில் சிறையில் இருந்து தப்பி, பத்து நாட்கள் தலைமறைவாக ஆங்கிலேயர் கண்ணில் மண்ணைத்தூவி பயணம் செய்து, நேபாளத்தில் காத்மண்டு அரச குடும்பத்தில் அடைக்கலம் புகுந்தார்.
kohinoor4மிக வஞ்சகமாக சீக்கியப் பேரரசை சிறுவனான துலிப் சிங்கிடம் இருந்து  பிடுங்கிக் கொண்ட ஆங்கில அரசு, அதற்கு ஈடாக துலிப் சிங் வசதியாக வாழ அரச மானியம் வழங்கி, இங்கிலாந்தில் இருப்பிடம் கொடுத்து ஆதரித்து, பக்கிங்ஹாம் அரண்மனையின் அரச விருந்தினர் தகுதியையும் அவருக்கு அளித்தது.  துலிப் சிங் அரசகுடும்பத்துக் குழந்தைகளின் நண்பராகவும், அவர்களுடன் விடுமுறையைக் கழிப்பது, கேளிக்கை விழாக்களில் பங்கேற்பது, வேட்டைக்குப் போவது என வாழத் தொடங்கினார். இளவரசரின் அழகிய தோற்றம் அரசியைக் கவர, அரசி அவரைத் தனது செல்லப்பிள்ளையாகவும் மதித்து, துலிப் சிங்கின் வண்ண ஓவியத்தையும் தானே வரைந்தும் உள்ளார்.  ஆங்கிலேய பிரபு போன்ற வாழ்க்கையை துலிப் சிங் வாழ்ந்தாலும், அரச விழாக்களில் இந்திய மன்னர் உடையுடன் மட்டுமே பங்கேற்க ஏற்பாடானது.  துலிப் சிங்கைப் போலவே, பேரரசி விக்டோரியா தனது ஆட்சியின் கீழ் வந்த பிற நாடுகளின் அரச வாரிசுகளை இவ்வாறு தனது கவனிப்பில் வளர்த்து வந்ததும், அவர்களை அந்நாட்டு உடைகளுடன் காட்சிப்படுத்தியது பலநாடுகளை தன் கட்டுப்பாட்டிற்குள்  கொண்டுவந்த தனது பெருமையைப் பறைசாற்றும் நோக்கமாகவும், அரச வாரிசுகளைத் தனது அன்பிற்குரியவர்களாக அவர் வளர்ப்பதாக அவரது இரக்கக் குணத்தை பிறருக்கு அறிவிக்கும் நோக்கமாகவும் இருந்திருக்கவே வாய்ப்பிருக்கிறது.
தங்களது ஆட்சியின் கீழ் வந்த பிற நாடுகளின் கலைப்பொருட்களை கொணர்ந்து தங்கள் நாட்டில் காட்சிப்படுத்தி தங்களது வீரத்தை, பெருமையைப் பறைசாற்றுவது வெற்றிபெற்றோரின் மனப்பான்மை. சாதாரண வேட்டைக்குச் செல்பவர்களும்கூட தான் கொன்ற புலி, மான் இவற்றின் தலையைப் பாடம் செய்து வீட்டின் சுவரில் மாட்டிக் காட்சிப்படுத்தி தன் வெற்றியை அறிவித்துக் கொள்ளும் மனப்பான்மை (“YES, I did it!” – proud attitude) யாவருமறிந்த ஒரு நடைமுறையே. துலிப் சிங் போலவே மற்றொரு நாடிழந்த இந்திய இளவரசி கவுரம்மா என்பவரும், மற்றொரு ஆப்பிரிக்க இளவரசியும் கூட பேரரசியின் வளர்ப்புப் பிள்ளைகளாக வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளார்கள். இங்கிலாந்தின் பேரரசியார் அவர் வளர்த்த இந்திய இளவரசி கவுரம்மா, மன்னர் துலிப் சிங்கை மணந்து கொள்ள வேண்டும் என்றும் விரும்பினார், ஆனால் அவர்களுக்கு அதில் விருப்பமிருக்கவில்லை. இவ்வாறாக, தனது மதிப்பை அறிய வழியின்றி, அதை அறிவுறுத்துபவர் தொடர்புகள் யாவும்  துண்டிக்கப்பட்ட நிலையில் அந்நிய  நாட்டில் ஒரு ஆங்கிலேயப் பிரபு வாழும் வாழ்க்கையை இங்கிலாந்து தந்த அரசு மானியத்தில் வாழ்ந்து  கொண்டிருந்தார்  நாடிழந்த இளைஞரான மன்னர்  துலிப் சிங். ஆனால்,  தனது தாயை சந்திக்கும் ஆசையை அவர் கைவிடவில்லை.
maharani-jindanதாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு தனது 15 ஆவது வயதில் இங்கிலாந்திற்கு நாடு கடத்தப்பட்டு அங்கு உல்லாச வாழ்க்கை வாழ்ந்தாலும், தனிமைப்படுத்தப்பட்ட மன்னர் துலிப் சிங் அடுத்த 7 ஆண்டுகள் தனது தாயின் நினைவிலேயே, தனது தாயை சந்திக்கும் ஆசையை மனதில் கொண்டு காலம் கழித்தார். வளர்ந்து விவரம் தெரிந்ததும் அவரது  அன்னையைச் சந்திக்கும் முயற்சிகளை எடுத்தார். அவர் அரசி ஜிந்தனுக்கு எழுதிய கடிதங்கள் இங்கிலாந்து அரசால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.  தனது கடிதங்கள் தடை செய்யப்படுவதைப் புரிந்துகொண்ட துலிப் சிங், ஒரு நூலின் இடையில் தனது கடிதத்தை மறைத்து வைத்து அரசியின் கைக்குக் கிடைக்குமாறு ஏற்பாடு செய்தார். அவருக்கு உதவிய ஆங்கிலேய நண்பர் ராம்சே(Col Ramsay) என்பவர், அரசி கண்பார்வை மங்கி முதுமை அடைந்துவிட்டதாகவும், முன்னர் இருந்த நிலையில் இப்பொழுது அவரது உடல் நிலை இல்லை என்றும் தகவல் அனுப்பினார். துலிப் சிங் இங்கிலாந்து அரசிடம் தனது தாயைச் சந்திக்க, தனது பிறந்த நாட்டிற்கு முதன்முறையாகத் திரும்ப அனுமதி கோரினார். முதுமையடைந்துவிட்ட அரசியினால் இனி தொல்லையில்லை என்று எண்ணிய ஆங்கிலேய அரசு துலிப் சிங் இந்தியா செல்ல அனுமதி அளித்தது. அரசியிடம் இருந்து அபகரிக்கப்பட்ட அரச நகைகளை திரும்பப் பெற ஏற்பாடு செய்து கொண்ட துலிப் சிங் அவற்றுடன் கல்கத்தாவில் தனது தாயை 13 ஆண்டுகள் கழித்து, அவரது 22 ஆவது வயதில் (16/1/1861 அன்று) சந்தித்தார். தனது தாயை வணங்கிய துலிப் சிங்கின் தலையைத் தடவி ஆசீர்வதித்த அரசி சீக்கிய முறைப்படி முடி வளர்க்காது முடியை வெட்டிவிட்டு கிறித்துவராக மாறிவிட்டிருந்த மகனைக் கண்டு வேதனை அடைந்து கண்ணீர் வடித்தார். துலிப் சிங் சீக்கிய மதத்தைக் கைவிட்டதை தான் விரும்பவில்லை என வெளிப்படையாகச் சொன்னார் அரசி ஜிந்தன்.
தனது தாயை அழைத்துக் கொண்டு இங்கிலாந்து திரும்பினார் துலிப் சிங். அங்குத் தனது மகன் ஒரு ஆங்கிலேயப் பிரபு போன்ற உல்லாச வாழ்வில் காலத்தைச் செலவிடுவதைக் கண்டு வருந்திய அரசி ஜிந்தன், மன்னர் துலிப் சிங் யார் என்றும், எப்பேர்ப்பட்ட வீரத் தந்தைக்கு, பண்பு நிறைந்த ஒரு பேரரசருக்குப் பிறந்தவர் என்றும், எதையெதை எல்லாம் இழந்துவிட்டு, அந்த இழப்பின் அருமை கூடத் தெரியாமல் வருத்தமின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை எல்லாம் மகனுக்கு எடுத்துச் சொன்னார். தனது மகனுடன் வாழ்ந்து அவருக்குத் தெளிவேற்படுத்திய அந்த அன்னை அரசி ஜிந்தன் இரண்டாண்டுகள் கழித்து (1/8/1863 இல்) மறைந்துவிட்டார். அவர் இறந்த மறு ஆண்டு மீண்டும் இரண்டாவது முறையாக இந்தியா திரும்பி தனது தாயின் உடலுக்கு நாசிக், மும்பை பஞ்சவடி பகுதியில் எரியூட்டி இறுதிச் சடங்குகளைச் செய்த துலிப் சிங், தாய்க்கு ஒரு நினைவுமண்டபமும்  அங்கே எழுப்பினார். அவரது நாடான பஞ்சாப் பகுதியில் எரியூட்டவோ இறுதிச் சடங்குகளைச் செய்யவோ ஆங்கில அரசு அவருக்கு ஒப்புதல் தரவில்லை.
இங்கிலாந்து திரும்பும் வழியில்  கெய்ரோவில் ஆசிரியையாகப் பணிபுரிந்த  ‘பம்பா முல்லர்’ (Bamba Muller) என்ற பெண்ணை  (7/6/1864 அன்று) எகிப்தில் மணந்து, தனது மனைவியுடன் இங்கிலாந்தில் தனது ‘எல்விடன் ஹவுஸ்’ (Elveden House) இல் வாழத் தொடங்கினார் துலிப் சிங். தனது இளமைக்கால அரசவாழ்க்கையை நினைவூட்டும் வகையில் மாளிகையை அலங்கரித்து, அரசவாழ்க்கை வாழ முயன்றார். அவருக்கு மூன்று மகன்களும், மூன்று மகள்களும் பிறந்தனர். அவரது ஆடம்பரவாழ்வு வாழும் முறைக்குச்  செலவு கட்டுப்படியாகாமல் அரசு மானியத்தை அதிகரிக்க அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். அவரது குடும்பத்துடன் நெருக்கமான உறவில் இருந்த இங்கிலாந்து அரசி இதற்கு ஒப்புக் கொள்ள விரும்பினாலும், இங்கிலாந்து அரசு ஒப்புக் கொள்ளவில்லை. தனது சீக்கிய அரசின் மதிப்பையும், அவரது இழப்பின் அளவையும் உணர்ந்திருந்த துலிப் சிங்கிற்கு இங்கிலாந்தின் இந்த முடிவு சினம் ஏற்படுத்தியது. பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து தனது பஞ்சாப் அரசை மீட்க உதவி கோரினார். ‘சூரியன் மறையாத அரசு’ என்ற பெயர் பெற்று வல்லரசு நிலையில் இருக்கும் இங்கிலாந்தை பகைத்துக் கொண்டு உதவ யாரும் முன்வராததால் அவரது சந்திப்புகள் தோல்வியில் முடிந்தன. இந்தியாவிற்குக் குடும்பத்துடன் திரும்பிவிட எண்ணி, தான் பிறந்த மண்ணுக்குத் திரும்பும் முயற்சிகளை மேற்கொண்டார். இதனை விரும்பாத இங்கிலாந்து அரசு, அவரது பயணத்தை இடையிலேயே தடை செய்தது,  அவரை ஏடனில் (21/4/1886 அன்று) வீட்டுச் சிறையில் அடைத்தது.  இதற்கிடையில் மீண்டும் சீக்கிய மதத்திற்குத் திரும்பிய மன்னர் துலிப் சிங் இங்கிலாந்து திரும்புவதை வெறுத்தார். குடும்பத்தை இங்கிலாந்திற்கு அனுப்பிவிட்டுத் தான் மட்டும் பாரிசில் தங்கினார். கணவரின்றி, பிள்ளைகளுடனும், உடைந்த மனதுடனும் இங்கிலாந்து திரும்பி, அரசு மானியத்தில் வாழ்வைத் தொடர்ந்த அரசி பம்பா மதுவுக்கு அடிமையானார்.  பிறகு சில நாட்களில் நோய் வாய்ப்பட்டிருந்த தனது மகளின் படுக்கைக்கு அருகில் இரவு முழுவதும் பணிவிடை செய்த அவர் கோமாவில் விழுந்து இறந்தார்.
kohinoor8தனது மனைவியின் மரணத்திற்கும் துலிப் சிங் இங்கிலாந்து வரவில்லை.  அவரது பிள்ளைகளை இங்கிலாந்தின் பேரரசி தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டு வளர்க்கச் செய்தார். பாரிசில் மற்றொரு பெண்ணை மணந்த துலிப் சிங்கிற்கு அத்திருமணத்தின் மூலம் மேலும் இரண்டு பெண்கள் பிறந்தனர்.  தனது இழப்புகளின் துயரில் இருந்து இறுதிவரை மீளாது தவித்த மன்னர்  துலிப் சிங் பாரிஸ் விடுதி ஒன்றில் தனித்து வறுமையில் தனது 55 ஆவது வயதில் (22/10/1893 அன்று) இறந்தார்.  அவரது உடல் இங்கிலாந்திற்கு எடுத்து வரப்பட்டு அவரது மனைவி, இறந்த மகன் ஆகியோரின் சமாதிகளுக்கு அருகிலேயே புதைக்கப்பட்டது. அவர் சீக்கியராக மாறியிருந்தாலும் அவரது இறுதிச் சடங்குகள் கிறித்துவ முறையிலேயே நிறைவேற்றப்பட்டது.  இந்திய மன்னர்களில் கிறித்துவ மதத்தைத் தழுவிய முதல் மன்னராக துலிப் சிங் கருதப்படுகிறார். அவரது வாரிசுகள் ஒருவருக்கமே சந்ததியைத் தொடரும் வகையில் குழந்தைகள் கிடையாது. மகள்களில் ஒருவரான  ‘சோஃபியா’ (Sophia) பெண்ணியம் விரும்பும் புரட்சி மங்கையாக மாறி இங்கிலாந்தில் பெண்களின் வாக்குரிமைப் போராட்டத்தில் பங்கு பெற்றார்.
கோகினூர் வைரம் இங்கிலாந்து சென்றடைய நேர்ந்தது, நாடிழந்து நாடு கடத்தப்பட்ட பஞ்சாப் மன்னர் துலிப் சிங்கால் என்பது ஒரு வரலாற்று உண்மை. அளவில் மிகப் பெரிய, 105 காரட் (21.6 கிராம்) எடையுடன் உலகிலேயே மிகப் பெரிய ஒளிவீசும் கோகினூர் வைரம் இந்தியாவின்  ஆந்திராவின் குண்டூர் பகுதியில் வெட்டிஎடுக்கப்பட்டது என்பதும் அனைவரும் அறிந்த ஓர் உண்மைதான். விலைமதிப்பற்ற அதனை அடையக்கூடியத் தகுதியும் மன்னர்களைத் தவிர வேறு எவருக்கும் இருக்கவும்  வாய்ப்பில்லை என்பதால் அரசக்குடும்பங்களில் மட்டுமே தங்கியது அந்தக் கோகினூர் வைரம். அரசுகளுக்கிடையே போர் நிகழ்வதும் மிகவும் இயல்பான ஒன்று. ஒவ்வோர் முறையும் வெற்றி பெற்ற மன்னர்கள் அதைக் கைப்பற்ற பற்பல இந்திய அரச குடும்பங்களிலும், ஆப்கானிய அரச குடும்பங்களிடமும் கோகினூர் வைரம் மாறி மாறிச் சென்றடைந்து இறுதியில் பஞ்சாப் சிங்கம் ரஞ்சித் சிங்கிடம் சென்று சேர்ந்தது.
ஆனால், சில பத்திரிக்கைச் செய்திகள் குறிப்பிடுவது போல பஞ்சாப் சிங்கம் ரஞ்சித் சிங் அதனை இங்கிலாந்தின் பேரரசிக்குப் பரிசாக வழங்கவில்லை.  மன்னர் ரஞ்சித் சிங் இறந்த பின்னர், சீக்கியப் பேரரசில் ஏற்பட்ட பதவிப் போட்டியால் அரச குடும்பத்தில் ஏற்பட்ட தகராறுகளும், அதன் தொடர்ச்சியாக நாடு பிடிக்க விரும்பிய ஆங்கில அரசின் ஆசைகாட்டுதலுக்கு மயங்கிய பஞ்சாப் அரச அதிகாரிகள் செய்த இரண்டகத்தாலும் சீக்கியப் பேரரசு ஆங்கிலேயர் வசமானது. ஆட்சியில் இருந்த பத்து வயது சிறுவனின் ஆதரவாளரான அரசியைச் சிறைப்படுத்தி, மற்றவரைச் செயலிழக்கச்செய்து வஞ்சகமாக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி பஞ்சாபை தனது பகுதியாக இணைத்துக் கொண்ட கிழக்கிந்திய நிறுவனம், கோகினூர் வைரமும் வெற்றிபெற்றவருக்கு பரிசாகக் கொடுக்கப்பட வேண்டும் என்றப்பகுதியையும்  இணைத்து பத்து வயது சிறுவனிடம் ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது.  இவ்வாறு பத்து வயது சிறுவனுடன் போட்ட ஒரு ஒப்பந்தம், அல்லது அவரது ஆதரவாளர்களைச் சிறையில் அடைத்துவிட்டு, தங்களது ஆதரவாளர்களின் கண்காணிப்பில் உள்ள சிறுவனுடன் போட்ட ஒப்பந்தத்தை, தங்களது ஆதரவாளர்கள் உதவியுடன் ஆங்கில அரசு செயல்படுத்திக் கொண்டாலும் அந்த ஒப்பந்தம் ஒரு முறையான செயலாகுமா?  அறியாச் சிறுவனாக இருந்த துலிப் சிங்கை மதமாற்றம் செய்ய வைத்ததே முறையல்ல என்றக் கருத்தும் இன்றுவரை உலவி வருகிறது.
பத்து வயது சிறுவன் தனித்து ஆட்சி செய்யவில்லை. அவன் சார்பாக அவனது பிரதிநிதிகள் நாட்டை ஆண்டிருக்கிறார்கள். அவர்கள் இடத்தில் நியமிக்கப்பட்டவர்கள் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆதரவாளர்கள் என்ற நிலையில் ஒரு நாடுபிடிக்கும் நாடகம் அரங்கேற்றப்பட்டது தெளிவாக விளங்குகிறது. கோகினூர் வைரமும் அந்த வஞ்சகமான முறையிலேயே   ‘பரிசு’ என்ற பெயரிலும் கைமாற்றப்பட்டுள்ளது என்பதும் தெளிவாக விளங்குகிறது. அதனைத் தானே இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்று ஒப்படைத்த 15 வயது சிறுவனுக்கு இழந்த தனது நாட்டின் அருமையும் தெரியாது, தான் ஒப்படைக்கும் கோகினூர் வைரத்தின் மதிப்பும் தெரியாது.  தனக்களிக்கப்பட்ட வைரத்தைத் தனது மணிமகுடத்தில் பதிக்கும் அளவிற்கு வெட்டி அதில் பதித்து அணிந்து கொண்டார் இங்கிலாந்து அரசி.  பிற்காலத்தில் தனது நாட்டையே இழந்ததை உணர்ந்து மனமுடைந்த  மன்னர் துலிப் சிங்கிற்கு, பறிபோன கோகினூர் வைரமெல்லாம் ஒரு பொருட்டாக இருந்திருக்கவும் வாய்ப்பில்லை.
kohinoor6இந்தியாவின் மதிப்புமிக்க, பெருமைமிக்க கருவூலம் கோகினூர் வைரம் என்றாலும், அதை இங்கிலாந்திடம் இருந்து  மீட்பதில் சிக்கல்களும் உள்ளன. இந்த வைரத்தை திருப்பிக் கேட்பதில் ‘பரிசாகக் கொடுத்ததை கேட்க முடியாது’ ( …. அது ஏமாற்று வேலையாக இருந்தாலுமே) என்ற சிக்கலும் உள்ளது. இங்கிலாந்து அரசின் மணிமகுடத்தில் பதிக்கப்பட்டுவிட்ட வைரத்தைப் பெயர்த்தெடுத்துக் கொடுக்கச் சொல்வதும் நடக்கக் கூடியச் செயலாகவும் தெரியவில்லை. இந்த வைரத்தினை மீட்க நினைக்கும் செயல்,  பொதுவாக அயல்நாட்டின் அருங்காட்சியகத்தில் இருக்கும் மதிப்புமிக்க  ஒரு இந்தியக் கலைச்சிற்பத்தை மீட்க நினைப்பது போன்ற சாதாரண செயல் அல்ல. மாறாக, ஒரு அரசியின் மணிமுடியுடன், ஒரு நாட்டின் இறையாண்மையுடன் தொடர்பு கொண்ட பொருளைக் கேட்பதற்கு ஒப்பாக அமைந்துள்ளது. போதாக்குறைக்கு, இந்தச் சச்சரவில் பாகிஸ்தானும் இடையில் நுழைந்து உரிமை கொண்டாடுவது மேலும் நிலைமையைச் சிக்கலாக்குகிறது. கோகினூர் வைரம் பாகிஸ்தானுக்கே சொந்தம், அதை இங்கிலாந்தில் இருந்து மீட்க வேண்டும் என்று கோரி லாகூர் நீதிமன்றத்திலும் ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது. இதற்கும் மேலாக,  ஆப்கானிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட மேலும் சில நாடுகளும் கோகினூர் வைரத்திற்கு உரிமை கொண்டாடியுள்ளன.
இங்கிலாந்து கோகினூர் வைரத்தைத் திருப்பித் தர நினைத்தாலும் அது   இந்தியாவிற்கு மட்டுமே கிடைப்பதுதான் முறை. வைரத்தை அரசியிடம் ஒப்படைத்த துலிப் சிங் பிறந்தது இக்கால பாகிஸ்தானில் உள்ள லாகூரில், அது அவரது கைநழுவிப் போன சீக்கியப் பேரரசின் பகுதி. இருப்பினும் அப்பகுதி சுதந்திரத்திற்கு முன்னர் இருந்த இந்தியாவின் பகுதிதான்.  கிழக்கிந்திய நிறுவனம், பிரிட்டிஷ் ராஜ், என்று கூறப்பட்டதும், இங்கிலாந்து அரசி தன்னை அரசியாக முடி சூட்டிக் கொண்டதும் இந்தியாவிற்குத்தான்.  பாகிஸ்தானுக்கு அல்ல. அது பின்னர் பிரிவினையால் தோன்றிய ஒரு  நாடு.  நேரு அவர் பிரதமராக இருந்த காலத்தில் கோகினூர் வைரத்தை மீட்க முயற்சிகள் செய்தாலும், இதுநாள் வரை இந்திய அரசு கோகினூர் வைரத்தை மீட்பதில்  ஆர்வம் காட்டாதிருந்தது. இப்பொழுது உச்ச நீதிமன்றத்திலிருக்கும்  வழக்கின் அடிப்படையில் இந்திய அரசு அமைதிகாக்க விரும்பும் தனது முடிவை மாற்றிக் கொண்டு கோகினூர் வைரத்தை  இங்கிலாந்திடம் இருந்து மீட்க விண்ணப்பம் வைத்தாலும், (ஒரு பேச்சுக்காகவே வைத்துக் கொண்டாலும்…) இங்கிலாந்தும் அதை இந்தியாவிற்குத் திருப்பியே தந்துவிட்டாலும் வரலாற்றின் அடிப்படையில் அது என்ன மாற்றத்தைத்தான் இந்தியாவிற்குக் கொண்டுவரும் என்பதும் புரியவில்லை.  இந்தியா ஒரு காலத்தில் இங்கிலாந்திற்கு அடிமைநாடாக இருந்தது என்ற பழி இதனால்  நீங்கிவிடுமா?