NOORJAHAN, THE GREAT ADMINISTRATER DIED 1645 DECEMBER 17
NOORJAHAN, THE GREAT ADMINISTRATOR DIED 1645 DECEMBER 17 மொகலாயப் பேரரசு என்றவுடன் நம் நினைவுக்கு வரும் பெண் பெயர் மும்தாஜும் அவரது நினைவாகக் கட்டப்பட்ட தாஜ்மகாலும். ஆனால், அதே மொகலாயப் பேரரசில் அரியணையில் அமராமலேயே செல்வாக்கு செலுத்திய அரசி நூர்ஜஹான். ஆட்சி நிர்வாகம், பொருளாதாரம், கலை, அரசியல் எனப் பல துறைகளைத் தனித்துவத்துடன் கையாண்டதற்காக அவர் புகழ்பெற்றிருக்கிறார். இந்திய வரலாற்றில் செல்வாக்கு செலுத்திய மூன்று பெண்களில், மத்திய காலத்தைச் சேர்ந்த நூர்ஜஹானும் ஒருவர் என்கிறார் எழுத்தாளர் ஊர்வசி புட்டாலியா. நூர்ஜஹான் ,தற்போதைய அஆப்கானிஸ்தான் காண்டகாரில் பாரசீக பிரபு மிர்சா கியாஸ் பெக்கிற்கும்,அவரது மனைவி அஸ்மாத் பேகத்திற்கும் 1577 மே 31 இல் பிறந்தார் .மிர்சா கியாஸ் மற்றும் அஸ்மாத் பேகம் இருவருமே முறையே முஹம்மது ஷெரிப் ,ஆஹா முல்லா இனத்தை சார்ந்தவர்கள் .இவர் பெற்றோருக்கு நான்காவது பெண் குழந்தை ஆவார் . அறியப்படாத காரணங்களுக்காக, கியாஸ் பேக் குடும்பம் 1577 இல் அதிர்ஷ்டத்தை இழந்தது .எனவே அதை ஈடு கட்ட இந்தியாவிற்கு ப...