POL POT DICTATOR OF COMBODIA BORN 1925 MAY 19 -1998 APRIL 15
POL POT DICTATOR OF COMBODIA BORN 1925 MAY 19 -1998 APRIL 15 கம்போடியாவில் ஹிட்லரின் ஒரு வாரிசு August 3, 2010 By தஞ்சை வெ.கோபாலன் tuol-sleng-survivor-vann-nath-paints-pictures-of-his-tortureஇரண்டாம் உலக யுத்தத்தில் ஜெர்மனியில் நாஜி ஹிட்லரின் உத்தரவின் பேரில் பல லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட வரலாறு உலகத்தாரை அதிர்ச்சியில் உறைய வைத்தது என்பதும் அந்த நாஜி, குற்றவாளிகளனைவருக்கும்- ஆல்ஃபிரட் ஈச்மன் உட்பட அனைவரும்- நியுரம்பர்க் விசாரணையில் மரண தண்டனை வழங்கப்பட்டதும் உலகமே அறியும். ஐரோப்பாவில் நிகழ்த்தப்பட்ட இதுபோன்ற படுகொலை சமீபகாலத்தில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் கம்போடியா என வழங்கப்படும் ஆசிய நாட்டிலும் நிறைவேறியது. அந்தப் படுகொலை ‘போல் பாட்’ (Pol Pat) எனும் சர்வாதிகாரியின் ஆட்சியில் கேமர் ரூஜ் (Khmer Rouge) எனும் இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டது. ஒரு சிறைக்கூடத்தில் அந்தச் சிறையின் அதிகாரியாக இருந்த ஒருவன் விசாரணை என்ற பெயரில் அப்பாவி கம்போடியர்களைச் சித்திரவதை செய்து கொன்று குவித்திருக்கிறான். பெரியவர்கள் பட்டினியாலும், சித்திரவதையினாலும் மாண்டனர். ம...