SASIKUMAR , TAMIL ACTOR BORN 1944 DECEMBER 8 - 1974 AUGUST 24
SASIKUMAR , TAMIL ACTOR BORN 1944 DECEMBER 8 - 1974 AUGUST 24 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி சசிகுமார் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் சசிகுமார் – தென்னிந்திய திரையுலகில் மறக்க இயலாத ஒரு சிறந்த நடிகர். இவரை திருமலை-தென்குமரி படத்தில் ஏ.பி.நாகராஜன் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பணத்துக்காக, அவள், ரோஷக்காரி, வெள்ளிக்கிழமை விரதம், திருடி, தாய்க்கு ஒரு பிள்ளை, தெய்வாம்சம், ராஜபார்ட் ரங்கதுரை, சமர்ப்பணம், மனிதனும் தெய்வமாகலாம், காசேதான் கடவுளடா, வீட்டுக்கு ஒரு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்தவர். 8.12.1944- இல் கும்பகோணத்தில் பிறந்த இவர் இவ்வுலகில் வாழ்ந்தது மொத்தம் முப்பது ஆண்டுகள் மட்டுமே சசிகுமார் வீட்டில் சம்பவத்தன்று காலை எண்ணூரில் நடைபெறவிருந்த காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுக் கொண்டிருந்தார் சசிகுமார். அப்போது பால் தயார் செய்து தரும்படி மனைவியிடம் கேட்க , அவரும் பம்ப் ஸ்டவ்வைப் பற்ற வைத்தார். அப்போது ஏற்பட்ட தீ இவரது மனைவியின் சேலையில் பற்றிக்கொண்டது. அப்போது எழுந்த கூக்குரலைக் கேட்டு மறு அறையில் நின்றிருந்த சசிகுமார் ஓ...