HIV -AIDS ,WHERE INTRODUCED 1981,JUNE 5 IN AMERICA
HIV -AIDS ,WHERE INTRODUCED 1981,JUNE 5 IN AMERICA எச்.ஐ.வி / எய்ட்ஸ் சமூகத்தில் பன்னெடுகாலமாக உற்று நோக்கினால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நோய்கள் மனித சமூகத்திற்க்கு அச்சுறுத்தலாகவே இருந்து வந்துள்ளது. அம்மை, காலரா, பிளேக், தொழுநோய் என பட்டியலிடலாம். அந்த வரிசையில்தான் எச்.ஐ.வி /எய்ட்ஸ் மனித சமூகத்திற்கு அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் உள்ளது எச்.ஐ.வி என்றால் என்ன? HUMAN IMMUNO DEFICIENCY VIRUS என்பதைத்தான் சுருக்கமாக எச்.ஐ.வி எனக் கூறுகிறோம். அதாவது, மனித உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை குறைத்திடும் வைரஸ் கிருமி உள்ள நபரையே எச்.ஐ.வி தொற்றுள்ள நபர் என்கிறோம். நமது உடலில் இயற்கயாகவே ரத்தத்தில் நோயை எதிர்க்கும் வெள்ளை அணுக்கள் உள்ளது. நோய் வராமல் தடுப்பது வெள்ளை அணுக்களின் பணியே. நோய்கிருமிகள் நமது உடலின் எந்த பகுதியிலாவது நுழைந்து விட்டால், வெள்ளை அணுக்கள் ஒன்று திரண்டு நோயை உருவாக்கும் நோய்க்கிருமிகளை போராடி அழித்து நம்மை நோயிலிருந்து காக்கும். ஆனால் எச்.ஐ.வி கிருமியானது நமது விந்து / ரத்தம்/ நிணநீர் வழிபாக உள்ளே நுழையும் போது வெள்ளை அணுக்களைப் போல, தன்னை மாற்றி...