JEYALALITHA IN POLITICS 1981 - DECEMBER 5, 2016
JEYALALITHA IN POLITICS 1981 - DECEMBER 5, 2016 .தமிழ்நாட்டின் அரசியல் வானம் தற்போது டிசம்பர் மாத காலநிலை போன்று இருண்டு கிடக்கிறது. சுமார் 34 ஆண்டு காலம் தமிழ்நாட்டு அரசியலில் அதிரடி நாயகியாக இருந்த ஒருவரின் மரணம் தான் அதற்கு காரணம். இத்தனை ஆண்டுகாலமாக இரு கட்சிகள் சார்ந்த இருமை நிலையாக தமிழ்நாடு இருப்பதன் காரணமாக ஏற்பட்ட விளைவு இது . ஜெயலலிதா என்ற பிம்பம் தமிழ்நாட்டின் முந்தைய பிம்பமான எம்ஜிஆரை விட அதிக காலம் மக்கள் மத்தியில் உயிர்ப்புடன் இருந்தது. இந்திய அரசியலின் எல்லா தரப்பையும் திரும்பி பார்க்க வைத்த ஒன்றாகவும் அது இருந்தது. அது சாதிய ரீதியாகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது என்பதும் கவனிக்கத்தக்கது. அந்த அடையாளம் தான் அவருக்கு பல விதங்களில் தன்னை தமிழ்நாட்டின் அசைக்க முடியாத சக்தியாக நிலைநிறுத்த உதவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.1987 டிசம்பர் 24 ல் எம்.ஜி.ஆர் மறைவதற்கு முந்தைய நாள் வரை அதிமுகவின் தலைமை பொறுப்பிற்கு ஜெயலலிதா வருவார் என்று யாருமே எதிர்பார்க்காத நிலையில் அவரின் அரசியல் வாழ்க்கை சறுக்கல்களையும், உயர மேற்றல்களையு...