HOW DEVAS SHARED THEIR ROLE IN KRISHNA AVATAR
HOW DEVAS SHARED THEIR ROLE IN KRISHNA AVATAR தேவர்களும் ரிஷிகளும், கடவுள் அம்சங்களும் எப்படி கிருஷ்ணாவதாரத்தில் பங்கு கொண்டார்கள் என்று ஒரு முறை ஒரு புத்தகத்தில் படித்தேன். பசு எப்போதோ சாப்பிட்ட புல்லை சுகமாக ஒரு மர நிழலில் அமர்ந்து அசை போட்டு இன்புறும். நான் எப்போதோ எழுதிவைத்ததை இப்போது போடும் அசை இது. என்ன வித்தியாசம். பசு தானே அசைபோட்டு பாலை தருகிறது. ; நான் அசைபோடும்போது கிருஷ்ணனின் எட்டு மனைவிகளில் ஒருத்தி ஜாம்பவானின் மகள் ஜாம்பவதி, அவளுக்கு பிறந்தவன் ஸ்கந்தன். ஜாம்பவதி பாதி பார்வதி அம்சம் என்பார்கள். மன்மதனும் ரதியும் எப்படி பங்கு கொண்டார்கள்? கிருஷ்ணன் ருக்மிணியின் மகன் பிரத்யும்னன் தான் மன்மதன். சம்பராசுரன் பெண் ரதி. பாரதி (சரஸ்வதி) பாணாசூரன் மகள். கிருஷ்ணனின் பேரன் (பிரத்யும்னன் மகன்) அநிருத்தனாக வருபவர் பிரம்மா. ஆதிசேஷன் தேவகி கர்பத்தில் உதித்து ரோகிணிக்கு மகனாக மாற்றப் பட்டு பலராமனாக பிறக்கிறான். ஒரு கர்பத்திலிருந்து மறு கர்ப்பத்திற்கு மாறியதால் சங்கர்ஷணன். சூர்யனின் குமாரி யமுனா காளிந்தியாக வந்து கிருஷ்ணன் மனைவியாகிறாள். லக்ஷ்மணை துளசியாகிறாள். கிருஷ்ணன் சூட்டி...