HOW DEVAS SHARED THEIR
ROLE IN KRISHNA AVATAR
தேவர்களும் ரிஷிகளும், கடவுள் அம்சங்களும் எப்படி கிருஷ்ணாவதாரத்தில் பங்கு கொண்டார்கள் என்று ஒரு முறை ஒரு புத்தகத்தில் படித்தேன்.
பசு எப்போதோ சாப்பிட்ட புல்லை சுகமாக ஒரு மர நிழலில் அமர்ந்து அசை போட்டு இன்புறும். நான் எப்போதோ எழுதிவைத்ததை இப்போது போடும் அசை இது. என்ன வித்தியாசம். பசு தானே அசைபோட்டு பாலை தருகிறது. ; நான் அசைபோடும்போது
கிருஷ்ணனின் எட்டு மனைவிகளில் ஒருத்தி ஜாம்பவானின் மகள் ஜாம்பவதி, அவளுக்கு பிறந்தவன் ஸ்கந்தன். ஜாம்பவதி பாதி பார்வதி அம்சம் என்பார்கள்.மன்மதனும் ரதியும் எப்படி பங்கு கொண்டார்கள்? கிருஷ்ணன் ருக்மிணியின் மகன்பிரத்யும்னன் தான் மன்மதன். சம்பராசுரன் பெண் ரதி.
பாரதி (சரஸ்வதி) பாணாசூரன் மகள்.கிருஷ்ணனின் பேரன் (பிரத்யும்னன் மகன்) அநிருத்தனாக வருபவர் பிரம்மா.ஆதிசேஷன் தேவகி கர்பத்தில் உதித்து ரோகிணிக்கு மகனாக மாற்றப் பட்டு பலராமனாக பிறக்கிறான். ஒரு கர்பத்திலிருந்து மறு கர்ப்பத்திற்கு மாறியதால் சங்கர்ஷணன்.
சூர்யனின் குமாரி யமுனா காளிந்தியாக வந்து கிருஷ்ணன் மனைவியாகிறாள்.லக்ஷ்மணை துளசியாகிறாள். கிருஷ்ணன் சூட்டிகொள்கிறான்.வசுதா தான் சத்யபாமா. சரஸ்வதி சாயாவாகிறாள். ஸ்வாஹா தேவி குசேலன் மனைவி சுசீலா .
ரத்னமாலா சூரியனின் மனைவி சஞ்சனாவாக தோன்றுகிறாள்.தாமரை இதழ்கள் 16000 கோபியராக கிருஷ்ணனின் ஜோடிகளாகிறார்கள்.தர்ம தேவதை யுதிஷ்டிரனாக உருவெடுக்கிறான்.
வாயு தேவன் பீமனாகிறான். கேட்கவே வேண்டாம். இந்திரனின் அம்சம் அர்ஜுனன்.அஸ்வினி குமாரர்கள் நகுல சஹாதேவர்கள்.யமதர்மன் விதுரன். கர்ணன் சூர்யனின் அம்சம்.காளி தான் துர்யோதனன். சமுத்ரதேவன் தான் சந்தனு மகாராஜா.
சந்திரன் தான் அபிமன்யு.அஷ்டவசுக்களில் எட்டாவது வாசு பிரபாசன் தான் பீஷ்மன். காச்யபர் தான் வசுதேவன். கிருஷ்ணனின் தந்தை ரோல் அவருக்கு. அதிதி அப்படிஎன்றால் தேவகி தானே.வசுவும் வசுபத்னியும் நந்தகோபன் யசோதா எனும் கிருஷ்ணனின் வளர்ப்பு தந்தையும் தாயும்.தாமரையின் அம்சம் திரௌபதி. யாக குண்டத்தில் பிறக்கிறாள் .த்ருஷ்டத்யும்னனும் அவ்வாறே பிறக்கிறான்.
சுபத்ரா ஷதரூபா அம்சம். தேவகி கர்பத்தில் உதயம்.விட்டுப்போன அனைத்து தேவர்கள் தேவ பத்னிக்கள் எல்லோருமே கோப கோபியர்கள். எல்லாமே கிருஷ்ணன் ஏற்பாடு தானே.கர்க ரிஷி கிருஷ்ணனுக்கு நாமகரணம் செய்கிறார்.
''க'' காரம் பிரம்ம வாசகம்.
''ரு'' ‘கரம் அனந்த (சேஷ) வாசகம்.
''ஷ ''காரம் சிவன்
''ண'' கரம் தர்ம வாசகம்
.''அ ''காரம் விஷ்ணுவாசகம்.
விஸர்கம் நர நாராயண அர்த்த போதகம்.கிருஷ்ணன் என்கிற பெயர் இதால் என்ன விளக்குகிறது? சர்வ ஸ்வரூபன். எல்லா(ரு )மே சேர்ந்தது என்று காட்டுகிறது. சர்வ ஆதாரம், சர்வ பீஜம். ''கிருஷ் '' சப்தமே நிர்வாண வாசகம். ''ண '' வாசகம் ஒரு மோக்ஷ போதகம்.கிருஷ்ணன் மோக்ஷம் (நிர்வாணம்) அளிப்பவன். ''கிரிஷ் '' என்ற சொல் நிஷ் சேஷ்ட (ஒன்றுமே பண்ணாமல் சும்மா நிற்பது) என்றும் பொருள் படுகிறது. ''ண '' என்றால் பக்தி 'ஆ'' சேரும்போது பக்தி உண்டாக்குபவன் என்று அர்த்தம் கொடுக்கிறது.பகவான் நிஷ்காம தாதா. அதாவது நாம் செயல்களை பலன் எதிர்பார்க்காமல் செய்ய அருள்பவன் என்று புரிகிறதா? நந்தகோபன் என்னென்ன பேர் எல்லாம் வைத்தான் கிருஷ்ணனுக்கு என்று உங்களுக்கு தெரியாவிட்டால் கீழே லிஸ்ட் தருகிறேன்.
கிருஷ்ணன், பீதாம்பரன், கம்ச த்வம்ஸி , தேவகி நந்தன் , யசோத நந்தன், ஹரி, சர்வேஷன், சர்வரூபன், சர்வாதாரன், சர்வ கதி, சர்வ காரணன். இன்னும் எத்தனையோ....
பலராமனுக்கு நந்தகோபன் இட்ட பெயர்களைப் பார்ப்போமா:ஹலதாரி, சங்கர்ஷணன், அனந்தன், பலதேவன், நீலாம்பரன்,முசலி, ரேவதிரமணன், ரோஹிணீயன்.
கிருஷ்ணனை பற்றி எதை தெரிந்துகொண்டாலும் மனதுக்கு இனிக்கிறதல்லவா !!
No comments:
Post a Comment