PENICILLIN SAVED CRORES OF PEOPLE WORLD WIDE TESTED TO DAY 1942 MARCH 14
பல ஆண்டுகளுக்கு முன் லேசான காயங்கள், காய்ச்சலால்கூட உயிரிழப்பு அதிகமாக இருந்தது. பெனிசிலின் (Penicillin) எனும் 'ஆன்டிபயாடிக்' கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களில் இருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. உலகம் முழுவதும் 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ள பெனிசிலின் கண்டுபிடிப்பு, ஒரு தற்செயலான நிகழ்வு!
முதலாம் உலகப் போரில் காயமடைந்த படை வீரர்கள் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுநோய்க்குப் பலியானார்கள். இதைக் கேள்விப்பட்ட ஸ்காட்லாந்து அறிவியலாளர் அலெக்சாண்டர் ஃபிளமிங் 'பாக்டீரியாவைக் கொல்லப் புதிய மருந்தைக் கண்டுபிடிப்பேன்' என்ற சபதத்துடன் ஓர் ஆராய்ச்சியைத் தொடங்கினார்.
அந்த ஆராய்ச்சியின்போது, ஒரு விடுமுறை நாளில் ஆய்வுப் பொருட்கள் இருந்த கண்ணாடித் தட்டை மூடாமலே சென்றுவிட்டார். சில நாட்கள் கழித்து வந்து பார்த்தபோது அந்தத் தட்டில் மெல்லிய பூஞ்சை படிந்திருந்தது. பூஞ்சை படிந்த இடத்தில் கிருமிகள் முழுவதுமாக அழிந்திருந்தன. பூஞ்சைகளற்ற பகுதியில் கிருமிகள் பெருகி இருந்தன. அது என்ன பூஞ்சை என்று ஆராய்ந்தார். அது 'பெனிசிலியம் நொடேடம்' என்று கண்டுபிடித்தார். அதைப் பயன்படுத்தி, 1928, செப்டம்பர் 28ல் ஒரு மருந்து தயாரித்தார். அதற்கு 'பெனிசிலின்' என்று பெயர் வைத்தார்.
இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பின் ஃபிளமிங் ஒரு நவீன ஆய்வகத்துக்குச் சென்றார். அங்கே இருந்த ஆய்வுக் கருவிகள் பளபளப்பாகத் தூய்மையாக இருந்தன. ஆய்வகமும் சுத்தமாக இருந்தது. அங்கே இருந்த ஆராய்ச்சியாளர், ஃபிளமிங்கைப் பார்த்து, 'உங்களுக்குத்தான் ஒரு சுத்தமான ஆய்வகம் கிடைக்க அதிர்ஷ்டம் இல்லை. அப்படிக் கிடைத்து இருந்தால் இன்னும் நிறைய மருந்துகளைக் கண்டுபிடித்து இருப்பீர்கள்' என்று கிண்டல் செய்தார். அதற்கு ஃபிளமிங் அமைதியாகச் சொன்னார், “நீங்கள் சொல்லுவது சரி. ஆனால் அந்த அதிர்ஷ்டம் இருந்திருந்தால், நான் பெனிசிலினைக் கண்டுபிடித்து இருக்க முடியாது.”
மூலக்கூறு: R-C9H11N2O4S. இதில் R என்பது மாறக்கூடிய பக்கச் சங்கிலி.
ருமாட்டிக் காய்ச்சல் (Rheumatic fever), சிபிலிஸ் (Syphilis), டெட்டனஸ் (Tetanus), மூளை உறைக் காய்ச்சல் போன்றவை கடுமையான நோய்கள். அவற்றை உருவாக்கும் பாக்டீரியாக்கள் வளர 'டிரான்ஸ்பெப்டிடேஸ் (Transpeptidase)' என்னும் என்சைம் உதவுகிறது. இந்த என்சைம்களை அழிக்கும் அற்புதச் செயலைத்தான் பெனிசிலின் செய்கிறது!
No comments:
Post a Comment