Sunday 14 March 2021

INDIA`S FIRST CINEMA AGED 90,ALAM ARAA RELEASED 1931 MARCH 14

 


INDIA`S FIRST CINEMA AGED 90,ALAM ARAA 

RELEASED 1931 MARCH 14 




இந்தியாவின் முதல் பேசும் படம் ஆலம் ஆரா. (உலகத்தின் ஆபரணம் என்று அர்த்தம்) 1931 மார்ச் 14 அன்று வெளியானது. அது இந்தியில் பேசியது.


அர்தேஷிர் இரானி என்பவர் அவரது நிறுவன மான இம்பீரியல் ஃபிலிம் கம்பெனி மூலம் இதைத் தயாரித்தார். இந்தப் படத்தில் மாஸ்டர் விட்டல், சுபைதா, ஜில்லூ, சுசீலா, பிருத்விராஜ் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.“பின்பற்றுவதற்கு எங்களுக்கு எந்த முன்மாதிரியும் அன்று இருக்கவில்லை, ஒலிப்பதிவு பற்றி ஒரு மாதம் பயிற்சி பெற்றோம், பார்ஸி நாடகமேடையிலிருந்து அதன் திரைக்கதையை அமைத்துக் கொண்டோம். வசன எழுத்தாளர் இல்லை. பாடல் ஆசிரியர் இல்லை.





ஒழுங்கற்ற கிறுக்கல்கள் மீது ஒவ்வொன்றையும் திட்டமிட்டோம். ஆரம்பித்தோம். நாடக மேடையில் பாடப்பட்டு வந்த பாடல்களை நானே தேர்ந்தெடுத்தேன். மெட்டுகளைத் தேடிப்பிடித்தேன், தபேலா, ஹார்மோனியம், வயலின் இந்த மூன்றும் தான் இசைக்கருவிகள்” என்றார் அர்தேஷிர் இரானி.


ஜோசப் டேவிட் என்பவர் எழுதிய பார்ஸி நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட காதல் சினிமா இது. ஒரு இளவரசன் நாடோடிப்பெண்ணை காதலிப்பதாக அது இருந்தது. படம் வெளியான அன்று கூட்டம் சமாளிக்க முடியாததால் போலீஸாரின் பாதுகாப்பு கேட்டு வாங்கப்பட்டது. அந்தத் திரைப்படத்தின் படச்சுருள் தற்போது இல்லை. காணாமல் போய்விட்டது.



இன்று கதையே இல்லாமல் திரைப்படங்கள் வருகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திரைப்படத்துறை குழந்தையாக இருந்தபோது, பேசும்மொழி படங்கள் கிடையாது. சத்தம் கிடையாது, மௌன படம் தான் பார்க்க வேண்டும். சைகையும், உடல் அசைவும், உதட்டு அசைவுகளும் அன்று கதையை பார்வையாளர்களுக்கு உணர்த்தின. அதன்பின் தொழில்நுட்ப வளர்ச்சியால் பேசும்மொழி படங்கள் வெளிவந்தன.


'தி ஜாஸ் சிங்கர்' என்கிற திரைப்படம் தான் உலகின் முதல் முழு நீள பேசும்படம். இந்தப்படம் வெளிவந்தது 1927 அக்டோபர் மாதம். அதற்கடுத்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் முதல் பேசும்படம் வெளியானது. அந்தப்படம் ஆலம் ஆரா. இந்தியில் தான் முதன் முதலாக இந்தப்படம் வெளிவந்தது. 1931 மார்ச் 14ந்தேதி இந்த திரைப்படம் வெளிவந்தது. இந்தப்படத்தை இம்பீரியல் பிலிம் கம்பெனி என்கிற நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் அர்தசிர் இரானி என்பவர் ஆவார். இந்த படத்தை இயக்கியவரும் இவரே.





இப்படத்தின் கதை பார்ஸி மொழியில் எழுதப்பட்டது. கதையில் ஒரு மன்னர் அவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டு மனைவிகளுக்குள்ளும் தன் மகன்களை தான் இளவரசராக்க வேண்டும் என்று. இந்த நேரத்தில் இளைய இராணியோடு சேர்ந்துக்கொண்டு தளபதி திட்டமிட்டு மன்னரை கொல்வதோடு, இளையராணியையும் கொல்கிறார். இதில் இளைய ராணியின் மகள் மட்டும் தப்பிவிடுகிறார். முதல் இராணியின் மகன் சிறைவைத்துவிட்டு நாட்டை ஆள்கிறான் தளபதி. தப்பிய இளையராணியின் மகள் ஆலம்ஆரா நாடோடிகளால் வளர்க்கப்பட்டு, அந்த நாடோடிகள் மூலமாக படை திரட்டி வந்து தளபதியை வென்று இளவரசரை ஆட்சியில் அமர்த்துவதே கதை. கதையை நாடகங்களில் நடத்திக்கொண்டு இருந்தனர். அந்த கதையை வாங்கி படமாக எடுத்தார் இரானி. ஜோசப் டேவிட் என்பவர் இந்த படத்துக்கு திரைக்கதை அமைத்து தந்தார்.


பிரித்வீராஜ் கபூர் மன்னராக நடித்திருந்தார், இந்தியின் பிற்காலத்தில் பெரிய நடிகையாக இருந்த சுபைதா ஆலம்ஆராவாகவும், இளவரசராக மாஸ்டர் விட்டல், ஜில்லு, சுசீலா போன்றோர் முதல் பேசும்படத்தில் நடித்திருந்தனர்.


1931 மார்ச் 14ந்தேதி முதன் முதலாக இந்தப்படம் மும்பையில் உள்ள மெஜஸ்டிக் திரை கொட்டகையில் திரையிடப்பட்டது. முதல் பேசும் படம் என்பதால் இந்தியாவில் பெரும் ஆச்சர்யம் ஏற்பட்டது. பொம்மைங்க பேசுது பாரேன் என மக்கள் பேசும் அளவுக்கே அன்றைய பெரும்பான்மை மக்களின் புரிதல் இருந்தாலும் இந்தப்படம் பெரும் வெற்றி பெற்றது.



இந்த படத்தின் பிரிதி ஒன்றை புனோவில் உள்ள இந்திய திரைப்பட ஆவண காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுயிருந்தது. 2003ல் ஏற்பட்ட தீ விபத்தில் ஆலம் ஆராவின் பிலிம் ரோல் தீக்கு இறையானது. இதனால் இந்தியாவின் முதல் பேசும்படத்தின் பிரிண்ட் இப்போது இந்தியாவில் எங்கும்மில்லை என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment