FIRST BATTLE OF BADR FOR MOHAMED NABI 624 MARCH 13

 

FIRST BATTLE OF BADR  

FOR MOHAMED NABI 624 MARCH 13



பதுருப் போர் (Battle of Badr, பத்ர் போர், அரபு மொழி: غزوة بدر, மார்ச் 17, கிபி 624) இசுலாமிய வரலாற்றில் முசுலிம்கள் இசுலாத்தின் பகைவர்களைப் படைமோதல் வழியாக எதிர்த்துப் போராடிய முதலாவது போர் ஆகும். இந்தப் போர் தென் அரேபியாவின் (இன்றைய சவூதி அரேபியா) ஹிஜாஸ் (Hijaz) பகுதியில் இசுலாமிய நாட்காட்டியில் (ஹிஜ்ரி) 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மக்காவில் இசுலாத்தை எதிர்த்த குறைசியர்களுடன் இடம்பெற்ற இப்போர் முகம்மது நபிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.[1] முசுலிம்கள் பதுருச் சண்டையில் மிகக் குறைந்த எண்ணிக்கையோடும் ஆயுதப் வலிமையோடும் வெற்றி பெற்றமைக்கான அடிப்படைக் காரணம் அவர்களிடம் காணப்பட்ட இறை நம்பிக்கையின் வலிமையும் இறைவனின் உதவியுமே என இசுலாமிய வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது. குர்ஆனிற் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில போர்களில் பதுருப் போரும் ஒன்றாகும்.



இப்போருக்கு முன்னரும், முசுலிம்களும் குறைசியர்களும் சில சிறிய சமர்களில் 623 இன் கடைசிப் பகுதியிலும் 624 இன் முதற் பகுதியிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் பத்ரு என்ற இடத்தில் இடம்பெற்ற போரே இவ்விரண்டு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பெருஞ் சமர் ஆகும். முகம்மது நபியின் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட படையினர் மக்காவின் குறைசிப் படையினரை ஊடறுத்துத் தாக்கிப் பல குறைசித் தலைவர்களைக் கொன்றனர்.


மக்காவில் உள்ள எதிரிகளை அழிப்பதற்கு இப்போரை அன்றைய முசுலிம்கள் ஒரு திருப்புமுனையாகக் கண்டனர். அக்காலகட்டத்தில் அரபு நாட்டின் வலிமை மிக்கதும், செல்வச் செழிப்பு மிக்கதுமாகத் திகழ்ந்த நகரமாக மக்கா விளங்கியது. முசுலிம்களின் படை வலிமையை விட மூன்று மடங்கு படையினரை மக்காக் குறைசியர்கள் கொண்டிருந்தனர். முசுலிம்கள் பத்ருப் போரிற் பெற்ற வெற்றி அரபு நாட்டில் ஒரு புதிய வல்லரசு உருவாகி வருவதை ஏனைய இனத்தவருக்கு அறிவுறுத்தியது. இது மதீனாவிற் பிரிந்திருந்த பிரிவினரிடையே முகம்மது நபியின் தலைமைத்துவத்துக்கு உறுதியாக அமைந்தது.

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER