TIGER SHROFF ,HINDI ACTOR BORN MARCH 2,1990
TIGER SHROFF ,HINDI ACTOR
BORN MARCH 2,1990
டைகர் ஹேமந்த் ஷெராப் (பிறப்பு: மார்ச் 2, 1990) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர். இவர் பாலிவுட் மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் ஜாக்கி செராப்வின் மகன் ஆவார். இவர் சஜித் நதியத்வாலா இயக்கிய ஹீரோபாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகானாக அறிமுகமானார்.ஆரம்பகால வாழ்க்கை
டைகர் ஷெராப் மார்ச் 2, 1990ம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இவரின் தந்தை ஜாக்கி செராப் மற்றும் தாயார் ஆயிஷா தத் ஆவார். இவருக்கு கிருஷ்ணா காசாளர் என்ற ஒரு சகோதரி உள்ளார்.
நடிப்புத் தொழில்
இவர் 2014ம் ஆண்டு சஜித் நதியத்வாலா இயக்கிய ஹீரோபாண்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகானாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை கிரிடி சனன் நடித்துள்ளார்.
சினிமா துறை பொறுத்த வரை நடிகர் நடிகைகளின் காதல் குறித்த பல கதைகளை நாம் கேட்டுள்ளோம். அதிலும் இந்தி சினிமா துறையில் காதல் கிசுகிசுவிற்கு பஞ்சமே சினிமா இல்லை. அந்த வகையில் இந்தி சினிமா துறையில் 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நட்சத்திர ஜோடிகள் தற்போது பிரிந்துள்ளனர்.இந்தியில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தோனி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபல மடைந்தவர் நடிகை திஷா பதானி. இவர் கடந்த 3 திஷா பிரபல ஹிந்தி நடிகர் டைகர் ஷ்ராஃப் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் மிக நன்றாக பார்த்துக்கொண்டு வந்தனர். 3 வருடங்களில் நடிகர் டைகர் ஷ்ராஃப், திஷாவின் வீட்டில்தான் பெரும்பாலும் தங்கி வந்தார். மேலும்,தனது காதலி திஷா படப்பிடிப்பில் இருந்தால் தன் வீட்டில் இருந்து சாப்பாடு அனுப்பி வைப்பார் டைகர் ஷ்ராஃப். நடிகர் டைகர் ஷ்ராஃப்பின் காதலுக்கு வீட்டில் உள்ள அனைவரும் சம்மதிக்க நடிகர் டைகர் ஷ்ராஃப்பின் அம்மா மட்டும் நோ சொல்லி இருக்கிறார்.
இருப்பினும் இருவரும் காதலித்து வந்துள்ளனர் ஆனால், கடத்த சில காலமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இனிமையாக சென்று கொண்டிருந்த இவர்களது காதலில் சண்டை முற்றிப்போக கொண்டிருந்த பிரிந்து விட்டனர். தற்போது இருவரும் நடிப்பில் அவரவர் வேலையை பார்த்து வருகின்றனர் என்று பாலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை: பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃபுக்கு பெரிய அறையில் தனியாக தூங்க பயமாம்.
பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃபின் மகனான டைகர் ஷ்ராஃப் தற்போது ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். புனித் மல்ஹோத்ரா இயக்கி வரும் இந்த படத்தில் அனன்யா பாண்டே, தாரா என்று 2 ஹீரோயின்கள்.டைகர்
பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹார் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் டைகர் கலந்து கொண்டார். அவருடன் அனன்யா மற்றும் தாராவும் வந்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில் டைகர் தனது பயம் பற்றி தெரிவித்தார்.
பயம்
நான் குழந்தையாக இருந்தபோது ஹாரர் படம் ஒன்று பார்த்தேன். அதில் இருந்து பெரிய அறையில் தனியாக படுத்து தூங்க பயப்படுவேன். வீட்டில் இருந்தால் அம்மாவுடன் படுத்துக் கொள்வேன். படப்பிடிப்புக்கு சென்றால் படக்குழுவில் யாரையாவது துணைக்கு படுக்குமாறு அழைப்பேன் என்று டைகர் கரணிடம் கூறினார்.திஷா
திஷாவும், டைகரும் காதலிப்பதாக பல காலமாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியமும் இருவரும் ஜோடியாக சாப்பிட ஹோட்டலுக்கு செல்வார்கள். இது குறித்து கரண் டைகரிடம் கேள்வி எழுப்பினார்.ரொம்ப பிடிக்கும்
நானும், திஷாவும் நல்ல நண்பர்கள். அவருடன் சேர்ந்து நேரம் செலவிட பிடிக்கும். எங்களுக்கு இடையே நிறைய ஒற்றுமை இருக்கிறது. எனக்கு சினிமா துறையில் ஒரு சிலர் மட்டுமே நண்பர்கள். அதில் திஷாவும் ஒருவர் என்று கூறி கரண் எதிர்பார்த்த பதிலையே அளித்தார் டைகர்.






Comments
Post a Comment