2021மார்ச் 9ம் தேதி ரெப்கோவங்கி தலைமையகம் முற்றுகை போராட்டம். தாயகம் திரும்பி மக்களுக்காக உருவாக்கப்பட்டது கூட்டுறவு சங்கமான ரெப்கோவை வங்கி என அழைப்பது சட்டவிரோதமானது எனவும், மத்திய அரசின்தொழில் நிறுவனம் என குறிப்பிடுவது தவறான செயல் என அதன் நிர்வாக உறுப்பினர்களின் ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் செந்தில்குமார் ஐ.ஏ.எஸ் , ரெப்கோ வங்கியின் நிர்வாக தலைவராக நியமிக்கப்பட்டது முறைகேடானது,
செந்தில்குமார் ஐ.ஏ.எஸ் தலைமையில் ரெப்கோ வங்கி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியவர்கள்...மோசடி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை அதிகாரியின் மகளுக்கு வேலை வழங்கியதால் விசாரணை கைவிடப்பட்டது என தெரிவித்தனர். ரெப்கோ கூட்டுறவு சங்கத்தை சுய நலத்திற்காகவும் மோசடிகளுக்காகவும் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிமுற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வங்கியின் ஒரு பிரிவு உறுப்பினர்கள் தெரிவித்து உள்ளனர்.
No comments:
Post a Comment