TAMILNADU LOAN BURDEN RS.57,500 PER HEAD
FOR 8 CRORES CITIZENS IN TAMILNADU
தமிழகத்தில் ஒவ்வொருவரின் தலையில் கடன் சுமை சுமார் 57,500 ஆக உயர்ந்துள்ளது. இதனை யார் தள்ளுபடி செய்வது..?
தமிழகத்தில் நகை கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றை தேர்தல் அறிக்கையில் போட்டிப் போட்டு தெரிவித்துள்ளீர்களே,
நீங்கள் வாங்கி வைத்துள்ள 5,லட்சம் கோடி கடனை யார் தள்ளுபடி செய்வது?
தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேல் நீங்கள்தான் ஆட்சி செய்துள்ளீர்கள்.இன்னும் விவசாயிகள் ஏன் கடன் வாங்கியே விவசாயம் செய்யும் நிலையிலேயே உள்ளனர்..?
அவர்களை இந்த நிலைமைக்கு தள்ளியது யார்? தன் வீட்டு நகைகளை அடமானம் வைத்துதான் கால காலமாக விவசாயம் செய்யும் அளவிற்கு இவர்களை கொண்டு வந்து நிறுத்தியது யார்?
2006-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இருந்து விலகிய போது தமிழக அரசின் கடன் 57,457 கோடி.
பின்னர், 2011-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சி முடியும் தருவாயில் தமிழக அரசின் கடன் 101439 கோடி.
அதன்பின்னர் ஜெயலலிதா முதல்வரானார். அவரது ஆட்சியில் 2012-13-ம் நிதியாண்டில் 1,20,204 கோடியாக கடன் இருந்தது.
எடப்பாடியார் ஆட்சி ஏற்றபோது 2016 -17-ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் அளவு 2,52,431 கோடி ரூபாயாக உயர்ந்தது
ஆனால் 2017 - 18-ம் நிதியாண்டில் 3 லட்சத்து 14,366 கோடி ரூபாயாக தமிழக அரசின் கடன் தொகை அதிகரித்தது. அதாவது ஒரே ஆண்டில் சுமார் 62 ஆயிரம் கோடி கடன் தமிழகத்திற்கு அதிகரித்தது.
2018 - 19 ஆம் நிதியாண்டில் 3,55,844 கோடி ரூபாயாக உயர்ந்தது. 2019 - 20-ம் நிதியாண்டில் 3,97,495 கோடி ரூபாயாக உயர்ந்தது.
இது 2020 - 21 ஆம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் அளவு ரூ.4,56,660 கோடி ஆக உயர்ந்திருப்பதாக தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் பெரும்பாலான மாநிலங்கள், அவர்கள் செலுத்த வேண்டிய வட்டி தொகையை கணிசமாகக் குறைத்துக்கொண்டே வருகின்றன. ஆனால், தமிழக அரசு கடனுக்கு வட்டி செலுத்துவது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துத்தான் வருகிறது.
2011-12-ம் நிதி ஆண்டு திட்ட மதிப்பீட்டில் ரூ.9,233.40 கோடியாகவும், 2016-17-ல் ரூ.19,999.45 கோடியாகவும்,2020-21-ல் 25,000. கோடி என்று கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக அரசு அதன் வருவாயில் ஆண்டுக்கு 25,000 கோடி ரூபாய் வட்டிக்காகவே செலவிட்டால், வளர்ச்சித் திட்டங்களில் நிலை..?
தமிழக அரசு கடனைத் திருப்பி செலுத்துவதற்கு வழிவகைகளைத் தேடாமல் ஒவ்வொரு ஆண்டும் கடனை அதிகரித்துக்கொண்டே செல்வது நியாயமான நடவடிக்கையா?
இலவச கலர் டிவியில் ஆரம்பித்து டிவி, ஃபேன், கிரைண்டர், மானிய விலையில் ஸ்கூட்டி, தாலிக்கு தங்கம் என பலவழிகளில் இலவசங்களை அள்ளி வீசி ஓட்டுக்களை அறுவடை செய்கின்றனர்.
ஒருவர் வீட்டுக்கு 1000, என்பதும்'இன்னொருவர் 1500 என்பதும் மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்து அவர்கள் கொள்ளையடிக்க போடும் திட்டமே இது.
ஆள்பவர்கள் மாறினாலும் கடன்சுமை தமிழர்களின் தலையில் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. வருகின்ற ஆண்டு பட்ஜெட்டில் கடன் எவ்வளவு கூடுமோ..?
அதாவது தமிழகத்தில் ஒவ்வொருவரின் தலையில் கடன் சுமை சுமார் 57,500 ஆக (மக்கள் தொகை 8 கோடி) உயர்ந்துள்ளது.
இந்த கடனை அடைக்கும் வழியை எந்த கட்சியும் சொல்லாதது ஏன்..?ஸ்டாலின் கொடுத்து இருக்கும் 500 வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எவ்வாறு..?
சிறுசேமிப்பில்லாத வீடும், சிக்கனம் இல்லாத நாடும் உருப்படாது என்று சொல்லுவார்கள். ஆனால், தமிழக அரசின் நிலைமை சேமிப்பு, சிக்கனம் தாண்டி ஒவ்வொரு நிதி ஆண்டும் கடன் என்ற நிலையிலேயே தட்டுத்தடுமாறி நீந்திச் சென்றுகொண்டிருக்கிறது. எப்பொழுது மூழ்கும் என்பதுதான் தெரியவில்லை..?
ஆதலால் இவர்களை முற்றிலுமாக அகற்றி விட்டு புதிய ஆட்சி முறையை கொண்டுவரவேண்டும்.இது மக்களாகிய நம் கையில்தான் உள்ளது.சிந்திப்போமா..?செயலில் காட்டுவோமா..?
No comments:
Post a Comment