Saturday 13 March 2021

THE GREAT INDIAN KITCHEN MALAYALAM MOVIE 2021

 


THE GREAT INDIAN KITCHEN 

MALAYALAM MOVIE 2021




" கிரேட் இந்தியன் கிச்சன் "என்னும் மலையாள திரைப்படம் பார்த்தேன் .

அந்த படம் என்னை இன்னும் செழுமைப்படுத்திக் கொள்ள உதவியது.

 சாதி மத ஆதிக்கத்தை எதிர்த்த பெரியார் இல்லாத சாமியையும் சேர்த்து ஏன் எதிர்த்தார் என்பதை இப்படத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

 கதாநாயகன் ஐயப்பனுக்கு மாலை போட்டிருப்பார் வீட்டுக்கு அருகில் வண்டியிலிருந்து கீழே விழுந்து விடுவார் நாயகி ஓடி தூங்கிவிடுவாள்

 அவன் நீ  என்னை எப்படி தொட்டு  தூக்கி விடலாம்...

நீ வீட்டுக்கு தூரம் ஆன நாளில் நீ என்னை பார்க்கவே கூடாது ,

நீ  எப்படி தொடலாம் சாமி குத்தம் ஆகிவிட்டது 

இவன் போய் குருசாமி இடம் சொல்லி இதற்கு என்ன செய்ய என்று கேட்பான் 

மாட்டு சாணியை தின்னலாம் , அல்லது மாட்டு மூத்திரத்தை குடிக்கலாம் 

இப்ப எல்லாம் இப்படி செய்வதில்லை நீ தலையோட குளித்துவிடு அது போதும் என்பார்

 நாயகிக்கு குமட்டல் எடுக்கும் வீட்டில் இருக்கும் துளசி செடியில் இருந்து ஒரு இலையை எடுத்து முகர்ந்து பார்ப்பாள் 

அதைப் பார்த்த அவள் மாமனார் மவளே செடி இடம் நீ போலாமா தனியறையில் தானே மூன்று நாள் இருக்கவேண்டும் இங்கெல்லாம் ஏன்  வருகிறாய் என்று கேட்டு விட்டு போவார்

 அப்போது இவள்  செல்போனிலிருந்து ஒரு வீடியோவை பார்ப்பாள்

அதில் ஒரு பெண் ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் போவது தவறில்லை என்று பேசிய வீடியோவை பார்த்துவிட்டு பகிர்ந்து விடுவாள்

 கதாநாயகி வீட்டு முன் சில ஐயப்பனுக்கு மாலை போட்டவர்கள் வந்து உன் மனைவி பகிர்ந்த அந்த வீடியோவை நீக்க சொல் 

என்று நாயகனிடம் சொல்ல அவன் கோபமாக சென்று அந்த பதிவை நீக்கு என்பான்


 அப்படி எல்லாம் பதிவை நீக்க முடியாது என்பாள் 

 சாமியே ஐயப்பா என்று பஜனை பாடிக் கொண்டிருக்கும் அந்த கூட்டம் இவள் வீட்டுக்குள் இருப்பாள்

 சாமிகளுக்கு டீ கொண்டு வா என்று மாமனார் கேட்க

 டீ போலிருக்கும் கழிவுநீரை பிடித்துக் கொடுத்து விடுவாள்

 இப்படி செய்து விட்டாளே என்று கோபத்தில் மாலையைக் கழட்டி விட்டு அடிக்க வருவான்

 கணவன் அதன்பின் மாமனாரும் இருவர் மீதும் மிச்சமிருக்கும் கழிவு நீரை முகத்தில் ஊற்றி விட்டு அவர்களை உள்ளே வைத்து வெளியே தாழ் போட்டு விடுவாள்

 பஜனை கோஷ்டிகள் பாடிக் கொண்டே இருப்பார்கள் இவள் வெளியே போய்க் கொண்டே இருப்பாள்

 பெண் விடுதலைக்கு ஆண் மட்டும் காரணமல்ல

 இந்திய பண்பாடு


 பழக்கவழக்கம்

 சாமி   மதம்   கடவுள் எல்லாம் இருக்கிறது

 இப்படித்தான் இருக்கணும் என்று பெண்ணே கூட ஆணாதிக்க கருத்துகளை உள்வாங்கி  கொண்டவளாக இருப்பாள்

 ஒட்டுமொத்தமாக பார்க்க வேண்டும்

  கடவுளில் இருந்து 

மதத்திலிருந்து

 சாதியிலிருந்து

 குடும்பப் பெருமை யிலிருந்து 

 வெளியே வரவேண்டும் 

அந்தப் பெருமைகளை அனைத்தையும் எள்ளி நகையாடினார் பெரியார்.

நடனத்தில் பல பரிசுகளை  வாங்கிய பெண் திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்கு செல்லுகிறார் 

அங்கு நான் வேலைக்கு போகட்டுமா ..?

டான்ஸ் க்ளாஸ் போகட்டுமா ..?என்று கேட்பாள் 

அந்த வீட்டிலுள்ளவர்கள் நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது அம்மா

 அந்த குடும்பம் எப்படிப்பட்ட குடும்பம் என்றால் 

மாமனாருக்கு காலையில் பிரஸ் பேஸ்ட் கொடுத்தால்தான் பல் துவக்குவார் 

அந்த குடும்பத்துக்கு சோறு குக்கரில் ஆகக்கூடாது 

விறகு அடுப்பில் பானையில் தான் சோறு ஆக்க வேண்டும்

 மிக்ஸியில் அரைக்க கூடாது 

அம்மிக்கல்லில் தான்  அரைக்க வேண்டும்

 துணியை வாஷிங் மிஷினில் போடக்கூடாது

 கையால்தான் துவைக்க வேண்டும்

 அந்த குடும்பம் சாப்பிடும்போது உணவு மேஜை குப்பைத் தொட்டியில் கொட்டுவது போல மேலும் கீழும் கொட்டிவிட்டு செல்வார்கள்

இரவில் அவனுக்கு விருப்பம் இருந்தால் போதும் அவளுக்கு மூடு வர கூட பொறுக்க மாட்டான் 

இதைப் பற்றி அந்த பெண் பேசக்கூடாது அது இந்திய பண்பாட்டுக்கு எதிரானது 

நாயகி அவள் தாய் வீட்டுக்குப் போனபோது வெளியிலிருந்து வரும் தம்பி அக்கா தண்ணீர் கொடு என்பான்

 கையில் இருக்கும் பாத்திரத்தை எடுத்து எறிவாள் உனக்குப் கையில்லை...

காலில்லை ...

அறிவில்லை என்று அவள் கேட்பது

 அவள் தம்பிக்கு மட்டுமல்ல...

ஆ. பகலவன்


No comments:

Post a Comment