EN THANGAI MOVIE 1952
என் தங்கை 1952 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். சி. எச். நாராயணமூர்த்தி, எம். கே. ஆர். நம்பியார் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்
எம். ஜி. இராமச்சந்திரன்
பி. வி. நரசிம்ம பாரதி
பி. எஸ். கோவிந்தன்
எம். ஜி. சக்கரபாணி
மாதுரி தேவி
ஈ. வி. சரோஜா
எம். என். ராஜம்
வி. சுசீலா அககொயோர் நடித்திருந்தனர் . இந்த படம் இலங்கை தலைநகர் கொழும்பு ஜிந்துப்பிட்டி முருகன் திரை அரங்கில் 105 வது நாளன்று பட கதாநாயகி மாதுரி தேவி இடைவேளையின் போது நேரில் தோன்றி ரசிகர்களுக்கு காட்சி அளித்தார் ,
எனது தந்தையார் சிவாஜியின் தீவிர இரசிகர் ஆனபோதிலும் என்தங்கை எம்ஜிஆர் நடிப்பை வெகுவாக பாராட்டி பேசினார் . என்தங்கை நடிப்பின் பாதிப்பால் அதன்பின் வந்த படமொன்றின் படப்பிடிப்பில் தங்கை பெயரை, என்தங்கை படத்தின் தங்கை பாத்திரத்தின் பெயரை சொல்லி அழைத்தாராம் எம்ஜிஆர் அப்பு . அந்தளவுக்கு என்தங்கையில் பெரும் ஈடுபாட்டுடன் நடித்திருந்தாராம் மக்கள் திலகம். இதைத்தானோவாகலாம் நாடகமாக சிவாஜி முருகன் திரையில் 1954 ல் நடித்தாராம் யாழ்ப்பாணத்து மூளாய் ஊரின் மருத்துவமனை கட்டிட நிதியுதவிக்காக அதில் விளைந்த 25. 000 ரூபா வசூலை அள்ளிக்கொடுத்தாராம் சிவாஜிகணேசன் அப்பு . அந்நாளில் 25.000 என்பது இன்று 25 கோடிகள் போலாகலாம் . இத்தனைக்கும் சிவாஜி அப்பு பெரிய கோடீஸ்வரனாக வராத நிலை அன்று. யாழ்ப்பாணத்து நண்டுக்குழம்பை வெகுவாக இரசித்து சுவைத்த நினைவை இறுதிவரை நெஞ்சில் அறைந்து
வைத்திருந்ததாக எனது முகநூல் நட்பான அக்கா ஒருவர் சிவாஜி அப்புவை சந்தித்த வேளை சொல்லி மகிழ்ந்தாராம். - வயதில் முதிர்ந்தவர்களை மரியாதைக்கு வேண்டி அப்பு என்று அழைப்பது யாழ்ப்பாணத்து பண்பாடு. ஆகையால் அதை கிண்டல் செய்வதாக நினைக்க வேண்டாம் அன்பர்களே பெரியோரே தாய்மாரே.



No comments:
Post a Comment