MGR AND MRR
எம்.ஜி.ஆர் தான் எனக்குத் தெரிஞ்சு நல்லா நடிக்கறவன்! சண்டைக் காட்சிகளில் கூட இங்கே நிறைய யுக்திகளைக் கொண்டு வரணும்ன்னு நினைக்கறவன்.
யாரோட பாணியையும் காப்பி அடிக்காம,,நடிக்கறது யாருன்னு கேட்டால் நான் ராமச்சந்திரனைத் தான் சொல்லுவேன்--
மேற் படிக் கருத்தை அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர்-
நடிகவேள் எம்.ஆர்.ராதா!
இயற்கை செய்த எத்தனையோ ஏடாகூடங்களில்-
எம்.ஜி.ஆர்--எம்.ஆர்.ராதா மோதலும் ஒன்று என்பேன்!
நகைச்சுவை,,யதார்த்தம்,,வில்லன் இப்படி எந்த பாத்திரத்திலும் எம்.ஆர் ராதாவின் நடிப்பு,,ஒரு ஹீரோவுக்கான நிறைவைக் கொடுக்கும்!
அன்று திரையுலகமே பயந்து,,பின் வாங்கிய குஷ்டரோகி பாத்திரத்தைத் துணிந்து ஏற்று நடித்ததோடல்லாமல் -
ரத்தக் கண்ணீர் படத்தை பெரிய அளவில்,,தன் நடிப்பினால் வெற்றி பெறச் செய்தவர் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது!
மனதில் பட்டக் கருத்தை பளிச்சென்று கூறுவது இவர் பாங்கு!
நாத்திகராக இருந்தாலும்,,காட்சிக்கு ஏற்பக் கடவுள் பக்தராகவும் வந்து அசத்துவார்!
அது பாகப்பிரிவினை படத்தின் வெற்றி விழா!
இந்தி நடிகர் சுனில்தத்,,ராதாவைத் தனிப்பட்ட முறையில் பாராட்ட விரும்பியவர் ராதாவைக் கண்டபோது திகைத்துப் போகிறார்--
லுங்கியை மடித்துக் கட்டியபடி கரண்டியும் கையுமாக நடிகர்களுக்கான சமையலைச் செய்தபடி இருந்தவரைக் கண்டதால் வந்த திகைப்பு--
ராதாவைக் கட்டித் தழுவி பாராட்டி,,வேகமான ஆங்கிலத்தில்;உரையாடத் தொடங்க--
சுனில்தத் பேசி முடிக்கும்வரை பொறுமையாக இருந்த எம்.ஆர்.ராதா,,அருகிலிருந்தவரிடம் கேட்கிறார்--
என்னய்யா சொல்றான் இவன்??
அப்போது தான் சுனில்தத்துக்குத் தெரிகிறது,,,எம்.ஆர் ராதாவுக்கு இங்கிலீஷ் தெரியாது என்று?
மேலும் திகைப்படைகிறார் சுனில்--
காரணம்,,அந்தப் படத்தில் பிரிட்டிஷ் ஆங்கிலத்தை இலக்கணப் பிழை இல்லாமலும் சரளமாகவும் வேகமாகவும் பேசியிருப்பார் ராதா
ஒரு முறை,,தமது சொந்த நாடகத்தில்--
போலீஸைப் பார்த்து ஏன் பயப்படறே என்னும் வசனம் பேசிய ராதா,,வசனம் பேசிக் கொண்டே கூட்டத்தை நோக்கித் திரும்பி--
இங்கே பாரு,,பல போலீஸ்காரங்க ஓஸி டிக்கட் வாங்கினவங்க முன் வரிசையிலே உட்கார்ந்திருக்கானுங்க.
துட்டு குடுத்து டிக்கட் வாங்கினவங்க பின் வரிசையிலே நின்னுக் கிட்டிருக்காங்க--என்று டைமிங்-சென்ஸாக அடிக்க--
மறு நாளிலிருந்து பல ஓசி டிக்கட்டுங்க எஸ்கேப்??
ஒருமுறை ராதாவை நோக்கி ரசிகர்கள் கல்லால் அடிக்க,,அந்தக் கற்களை அவர்களை நோக்கியே திரும்ப எறிந்திருக்கிறார் ராதா??
திரையுலகம் செய்த பல அதிர்ஷ்டங்களில் எம்.ஆர் ராதாவும் ஒன்று என்பது நம் கருத்து!
உண்மை தானே உறவுகளே??
No comments:
Post a Comment