WORLD HEALTH DAY உலக சுகாதார நாள்
WORLD HEALTH DAY உலக சுகாதார நாள் சுகாதாரம் (Hygiene) அல்லது வழக்குமொழியில் சுத்தம் என்பது நலம் மற்றும் நலமான வாழ்வு கருதி ஒரு சமூகத்தால் பேணப்படும் பழக்க வழக்கங்களாகும். தற்கால மருத்துவ அறிவியலில் வெவ்வேறு நோய்நிலைகளுக்கு குறிப்பிட்ட சுகாதார சீர்தரங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் சுகாதாரம் குறித்த வரையறை வெவ்வேறு பண்பாடு, பாலினம் மற்றும் முதுமைக் குழுக்களில் மாறுபடுகின்றது. சில வழமையான சுகாதாரச் செய்கைகள் நல்ல பழக்கங்களாகவும் சுகாதாரம் பேணாமை வெறுப்பை ஊட்டுவதாகவும் மரியாதைக் குறைவாகவும் சிலநேரங்களில் அச்சுறுத்தலாகவும் சமூகத்தால் எடுத்துக்கொள்ளப் படுகிறது. ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிகள் யாருக்குத்தான் வியாதியோடு வாழ பிடிக்கும். வியாதி வரும்போது நமக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். நம்மால் பள்ளிக்குப் போக முடியாது. எந்த வேலையும் செய்ய முடியாது. வீட்டை சரியாக கவனித்துக் கொள்ள முடியாது. ஒருவேளை, நம்முடைய வருமானம் குறையலாம். அதுமட்டுமல்ல, யாராவது ஒருவர் கூடவே இருந்து நம்மை கவனித்துக் கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். சிகிச்சைக்கும் மருந்து மாத்திரைக்கும் பணத்தை வாரியிறைக்க வேண்டி...