MANJU DYNASTY 1627-44............3
MANJU DYNASTY 1627-44 ...........3 சீனாவில் வடகிழக்கிலிருந்த மஞ்சூக்கள் சீனாவை ஆக்கிரமிக்க முற்பட்டார்கள். இதை அறிந்ததும் மிங் வம்ச சக்ரவர்த்தி தனது திறமையான தளபதி ஒருவரின் தலைமையில் ஒரு பெரும் படையை வடக்கு நோக்கி அனுப்பினார். அந்தத் தளபதியின் பெயர் வூ சான் குயீ. இந்த சமயத்தில் லீ சூ செங் என்பவர் தன் கொள்ளைக் கூட்டத்துடன் பெய்ஜிங்கில் நுழைந்தார். சீன ராணுவத்தில் பணியாற்றியவர். உள்நாட்டுக் கலகம் ஒன்றில் தனது ஒரு கண்ணை இழுந்தவர். சீனாவை ஆள வேண்டும் என்ற தாங்க முடியாத ஆர்வம் கொண்டவர். (இனி அந்தத் தளபதியை வூ என்றும் கொள்ளைக் கூட்டத் தலைவனை லீ என்றும் சுருக்கமாகக் குறிப்பிடுவோம்) வூ மஞ்சூரியாவை நோக்கிச் செல்ல, இதுவே சரியான சமயம் என்று பெய்ஜிங் நகருக்குள் நுழைந்தார் லீ. (பரப்பளவில் மிகப் பெரிய நாடு என்றால் இதுபோன்ற ஆபத்துகளும் உண்டு!) சக்ரவர்த்தி பதறினார். ஏற்கெனவே கஜானாவின் நிதி நிலைமை சரியில்லை. திருநங்கைகளின் கெடுபிடிகள் அதிகமான தால் மக்களுக்குப் பெரும் அதிருப்தி. மக்கள் ஆதரவும் இல்லாத நிலையில் தளபதியை அனுப்பி விட்டோமே! அவசரமாக தளபதியை மீண்டும் அழைத்தார். ஆனால் அதற...