Posts

Showing posts with the label ONE HOUR

NINE MURDERS IN ONE HOUR -MECHCHERI MAMMATTIYAAN 1959 AUGUST 2

Image
  *ஒன்பது கொலைகள்! ஒரு மணி நேரத்தில்  *  மேச்சேரி மம்பட்டியான்,1959 AUGUST 2 02.8.1959 அன்று மாலை மேச்சேரி மாரியம்மன் கோவிலுக்குப் போன மம்பட்டியான் குழுவினர் சாமி கும்பிட்டனர். கோயிலுக்குப் பக்கத்திலிருந்த பொரிக் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த முத்துசாமி மீது தாக்குதல் தொடுத்தனர். முத்துசாமியின் தலை உருண்டது. அவருடைய மகன் பரமசிவம் லேசான காயத்துடன் தப்பினார். மம்பட்டியான் அணி அவரைத் துரத்தியது. பின்பக்கத் தெருவுக்கு ஓடி திறந்திருந்த ஒரு வீட்டுக்குள் புகுந்தார். அந்த வீட்டுப் பெண்ணொருவர் வீட்டு முற்றத்திலிருந்த பெரிய மூங்கில் கூடையைப் போட்டு பரமசிவத்தை மூடினார். பரமசிவத்தைக் காணாமல் திரும்பியவர்கள் அந்தக் கடையின் பின்பக்கம் இருந்த முத்துசாமியின் வீட்டுக்குச் சென்றனர். அங்கிருந்த முத்துசாமியின் மகன்கள் வேலாயுதம், சின்னக்குட்டி, வைத்தி என மூன்று பேரைப் பிடித்து, தெருவுக்குக் கொண்டு வந்து வெட்டிக் கொன்றனர். நான்கு உயிர்களைப் பலி கொண்டும் வெறி அடங்கவில்லை. மம்பட்டியான் குழு கோல்காரனூருக்குச் சென்றது.  கோரைப்பாய் தறிக்கூடத்தில் சுப்பிரமணியம் நெசவு நெய்து கொண்டிருந்தா...