Hongzhi Emperor 1487- 1505.........4
Hongzhi Emperor 1487- 1505 ..........4 காங் சி 1487–1505 மன்னர் காங் சி 1487–1505அப்போது ரஷ்ய மன்னராக இருந்த மகா பீட்டருடன் (பீட்டர் தி கிரேட்) நட்பாகப் பழகி வந்தார். ஒரு கட்டத்தில் ‘எங்கள் நாட்டு மாணவர்கள் பெய்ஜிங்கில் கல்வி கற்கலாமா?’’ என்று ரஷ்ய மன்னர் கேட்க, அதை ஒரு கவுரவமாக கருதிய சீன மன்னர் இதற்கு ஒப்புக் கொண்டார். மாணவர்களோடு கூடவே வந்து சேர்ந்தனர் ரஷ்ய பாதிரிமார்கள். ஐரோப்பியர்களின் வருகைக்கு சீனாவில் பிள்ளையார் சுழி போடப்பட்டது. ஐரோப்பியர்கள் தங்கள் வணிகத்தையும் சீனாவில் தொடங்கினர். இவர்களின் மரியாதையான பழக்க வழக்கங்கள் சீனர்களுக்குப் பிடித்திருந்தன. கிறிஸ்தவ மதப் பிரதிநிதிகள் வேறு விதத்திலும் சாமர்த்தியம் காட்டினார்கள். புத்த சன்யாசிகள் போல உடை உடுத்தி, சீன அதிகாரிகளின் நட்பைப் பெற்று பிறகு மெல்ல மெல்ல கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினார்கள். 1514-ல் இருந்து 1784 வரை அடுத்தடுத்து பல நாடுகள் சீனாவில் தங்கள் வணிகத்தைத் தொடங்கின. போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஹாலந்து, பிரிட்டன், பிரான்ஸ் என்று இவை வரிசைக்கிரமமாக சீனாவில் கால் பதித்தன. சீனர்களுக்குக் குழப்பம் வந்தது...