PAZHASSI RAJA , FREEDOM FIGHTER THE LION OF KERALA BORN 1753 JANUARY 3
PAZHASSI RAJA , FREEDOM FIGHTER THE LION OF KERALA BORN 1753 JANUARY 3 வீர கேரள வர்மா பழசி இராசா (Pazhassi Raja, அல்லது கேரளச் சிங்கம், சனவரி 3, 1753 – நவம்பர் 30, 1805) கேரளாவின் வடக்கில் உள்ள கண்ணூர் மாவட்டத்திலுள்ள தற்கால கூத்துப்பரம்பு பகுதியில் அமைந்துள்ள கோட்டயம்-மலபார் நாட்டின் மன்னராக இருந்தவர். பிரித்தானியக் குடியேற்றவாதத்தை எதிர்த்துப் போராடிய துவக்க கால விடுதலை வீரர்களில் ஒருவர். பிரித்தானியர்களுக்கு எதிராக அவர் நிகழ்த்திய மறைவுத் தாக்குதல்களில் உயிர்விட்டதை அடுத்து அவருக்கு வீர என்ற அடைமொழி வழங்கப்பட்டது. பழசிராசாவின் இளமைக்காலம் பற்றிய குறிப்புகள் கிடைப்பதில்லை. துவக்கத்தில் பிரித்தானியருக்கு திப்பு சுல்தானுடன் நடந்த சண்டையில் உதவிய பழசிராசா பின்னர் அவர்களுடன் பிணக்கு கொண்டார். விடுதலை போராட்டமாக இல்லாது அவர்களது வரிவிதிப்பிற்கு எதிரான புரட்சியாக 1793–1797 காலகட்டங்களில் வெடித்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. வரலாற்று பின்னணி[மூலத்தைத் தொகு] பழசி குடீரம்-வயநாட்டில் மானந்தவாடியில் பழசிராசா இறந்த இடத்தில் எழுப்பப்பட்டுள்ள நினைவகம் கேரளாவை ஹை...