Posts

Showing posts with the label CLEAN

HOW TO PROTECT YOUR TEETH

Image
HOW TO PROTECT YOUR TEETH `பல் போனால் சொல் போகும்’ முத்துப் போன்ற பற்கள் இருந்தால், அவை முகத்தின் அழகுக்கு அழகு சேர்க்கும். பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்கள் நம்மை ஆட்டிப்படைக்கும். `பல் போனால் சொல் போகும்’ என்பார்கள் பெரியோர்கள். பற்களின் ஆரோக்கியத்தைக் காத்தால், நம் உடல் ஆரோக்கியத்தையே பாதுகாக்கலாம் என்கிறோம் மருத்துவர்கள் நாங்கள். பல் சொத்தை பல் பாதிப்புகளில் முதன்மையானது, பல் சொத்தை (Tooth Decay). இது ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவது. குறிப்பாக, பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவு, பிஸ்ெகட், மிட்டாய், சாக்லெட், ஐஸ்கிரீம், கேக், பேக்கரி பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும்போது, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து, லேக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன. இந்த அமிலம் பல்லின் வெளிப்பூச்சான எனாமலை அரித்துச் சிதைக்கிறது. இதன் விளைவால் பற்கள் சொத்தையாகின்றன. பற்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறினாலும் பாக்டீரியாக்கள் வளர்ந்து பல் சொத்தையை உண்டாக்கும். புகைபிடிப்பது, வெற்றிலை பாக்குப் ...