K.JAMUNA RANI ,LEGENDARY SINGER BORN 1938 MAY 17
K.JAMUNA RANI ,LEGENDARY SINGER BORN 1938 MAY 17 .கே. ஜமுனா ராணி (K. Jamuna Rani, பிறப்பு: 17 மே 1938) தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் சிங்கள மொழிகளில் 6,000இற்கும் அதிகமான திரைப்படப் பாடல்களை இவர் பாடியுள்ளார்.வாழ்கை ஜமுனா ராணி ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் வரதலாஜுலு, திரௌபதி ஆகிய இணையருக்கு 1938 மே 17 அன்று பிறந்தார். இவரது தாயார் ஒரு வீணை இசைக்கலைஞராவார். இவர் பெண்களைக் கொண்ட ஒரு இசைக்குழுவை நடத்திவந்தார். ஜமுனா ராணி தன் ஏழுவயதில் தியாகய்யா என்ற தெலுங்குத் திரைப்படத்தில் முதன்முதலில் பாடினார். தமிழில் கல்யாணி திரைப்படத்தில் சக்சஸ் சக்சஸ், ஒன் டூ திரீ என இருபாடல்களைப் பாடி பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.[1] . கே.ஜமுனாராணி [பின்னணிப் பாடகி] தமிழில் பிரபலமான துள்ளிசைப் பாடகியர்களுள் இவரும் ஒருவர். பாடல் பதிவின் போதோ, மேடை நிகழ்ச்சிகளின் போதோ இவர் ஆடிக்கொண்டே பாடுவதில்லை என்பது சிறப்பு. ”திரைப்படங்களில் பின்னணிப் பாடுவதில் ஒரு புது வகையைச் செய்ய இவருக்கு வாய்ப்பு கிட்டியது. ச...