The Alfred Duraiappah Dossier MURDERED BY PRABHAKARAN OF LTTE
The Alfred Duraiappah Dossier MURDERED BY PRABHAKARAN OF LTTE யாழ்ப்பாண மாநகர மேயர் திரு.அல்பிரட் துரையப்பா 1975 ஆம் ஆண்டு யூலை 27ம் திகதி பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவில் முன்றலில் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டவர்கள் இன்றைய புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரது சகாக்களும். துரையப்பாவின் கொலை இலங்கையில் தமிழர் வரலாற்றில் முதலாவது அரசியல் கொலையாகக் கணிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் இக்கொலை தமிழர்களின் வாழ்வில் அரசியல் பயங்கரவாதத்தின் தொடக்கமாகும். இன்றைய தலைமுறையினரிடம் “துரையப்பா யார்?” என்றொரு கேள்வியைக் கேட்டால், “அவர் ஒரு தமிழினத் துரோகி” என்ற பதில் சர்வசாதாரணமாகக் கிடைக்கும். ஏனெனில் இன்று தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிப்போராக இருப்பவர்கள், அவர் சுடப்பட்ட காலத்தில் சிறுவர்களாக அல்லது அச்சமயம் பிறந்தவர்களாக இருந்ததே. துரையப்பாவை துரோகியாக இனம் காட்டிய “தளபதி” அமிர்தலிங்கமும், அவரது சகாவான “இளைஞர்களின் இதயக்கனி” யோகேஸ்வரனும் கூட பின்னர் தமிழினத் துரோகிகளாக புலிகளின் தலைவரால் இனம் காணப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர். அதுமாத்திரமின்றி, துரையப்பாவைச்...