Posts

Showing posts with the label DEVAYANI

DEVAYANI -KATHAL KOTTAI

Image
 DEVAYANI -KATHAL KOTTAI அந்த இளம்பெண் அழகாக இருந்தாள். ஆனால் நாங்கள் இருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் அமர்ந்திருந்தாள். அது உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டல். 1996 ம் ஆண்டு. அவள்  அமர்ந்திருந்த டேபிளுக்கு நாலைந்து மேஜைகள் தள்ளி,  நாங்கள் நால்வரும்... நான், ஆர்ட் டைரக்டர் மோகன மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான் -  இன்னொரு டேபிளில் அமர்ந்திருந்தோம். எங்களுக்கு சற்று தொலைவில் அமர்ந்திருந்த அந்த 'பளிச்' பெண்ணை முதலில் கவனித்தவர் அகத்தியன்தான். அகத்தியன் அப்படி உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை தற்செயலாக கவனித்து விட்டார் தங்கர் பச்சான். அவரும் திரும்பி பார்த்தார். மாடர்ன் டிரஸ்சில் இருந்தாள். நாகரீகமாக இருந்தாள் ; நன்றாகவும் இருந்தாள். அவள் கூடவே இரண்டு இளைஞர்கள், அவளுக்கு எதிரே உள்ள நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள். அகத்தியன் அந்தப் பெண் மேல் வைத்த கண்ணை எடுக்கவே இல்லை. தங்கர் கேட்டார்: "என்ன அந்தப் பெண்ணையே விடாம பாக்கறீங்க?" அகத்தியன் பார்வையை அகற்றாமலே பதில் சொன்னார்: "இல்ல, அந்தப் பொண்ணு சம்மதிச்சா, நம்ம அடுத்த படத்துக்கு ஹீரோயினா ...

TEN REAL HUSBAND-WIFE OF TAMIL FILM INDUSTRY

Image
தமிழ் சினிமாவின் சூப்பர்10 காதல்ஜோடிகள் திரையில் என்னதான் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் பயாலஜியோடு நடித்தாலும் காதல் சில ஜோடிகளுக்கு இடையில் மட்டுமே தன் மாய வித்தையை காட்டி இருக்கிறது. பிரகாஷ்ராஜ் பாஷையில் சொன்னால், சிலரை பார்த்தவுடன் மட்டும் மனசுக்குள் பலப் எரிந்து காதுக்குள் மணி ஒலித்து வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறக்கத் தொடங்குகிறது. அது சரி, ஆனால் காதல் வந்த எல்லாரும் மணம் முடிப்பது இல்லையே..மணம் முடித்த அனைவரும் சேர்ந்து வாழ்வதும் இல்லை. திரையில் ஆயிரம் ஜோடிகள் டிஜிட்டல் வண்ணங்களில் ட்யூலிப் தோட்டத்துக்கு நடுவில் அஸ்கு லஸ்கா பாடினாலும் ஒன்றாக வாழும் வாழ்க்கை சில ஜோடிகளுக்கு மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் ஆரம்பகட்ட கிசு கிசுக்களை தாண்டி, போராட்டம், குழப்பம் எல்லாவற்றையும் கடந்து  நிஜத்திலும் ஒன்று சேர்ந்த சூப்பர் ஜோடிகளின் பட்டியல் இது. 10 ) ஜெமினி கணேசன்- சாவித்திரி ஆடாத மனமும் ஆடுதே... இது மிஸ்ஸியம்மா காலத்து காதல். கறுப்பு வெள்ளையில் நடந்த ரொமான்ஸ்  காவியம்.  'கண்களின் வார்த்தைகள் புரியாதோ?' என்று பை...

DEVAYANI ஜெயலலிதா படித்த பள்ளியில் டீச்சராகிவிட்ட நடிகை தேவயானி! BORN JUNE 22,1974

Image
DEVAYANI   ஜெயலலிதா படித்த பள்ளியில்  டீச்சராகிவிட்ட நடிகை தேவயானி! BORN JUNE 22,1974 தேவயானி (Devayani, பிறப்பு: சூன் 22, 1974) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் சுஷ்மா. திரையுலகிற்காக தன் பெயரை தேவயானி என மாற்றிக் கொண்டார்.  தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் வங்காள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியின் கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகை தேவயானியை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இருக்க முடியாது. போன தலைமுறை நடிகைகளில் நடிக்கத் தெரிந்த அழகிய நடிகை என்று பெயர் பெற்றவர். மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து தனது பண்பாலும், நடிப்புத் திறமையாலும் தமிழ்நாட்டுப் பெண்ணாகவே மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். 1994இல் வெளியான கே.எஸ்.அதியமானின் 'தொட்டாற்சிணுங்கி' படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானவர் தேவயானி. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு படங்களில் கிளாமர் கேரக்டர்களை ஏற்று நடித்தாலும் 'காதல் கோட்டை' படத்தில் ஏற்ற கம...