RANA SANGA AND BATTLE OF KHANWA HELD 1527,MARCH 17
RANA SANGA AND BATTLE OF KHANWA HELD 1527,MARCH 17 இந்தியாவில் முகலாயப்பேரரசை நிறுவியவர் பாபர். அவரது இயற்பெயர் சாகிருதீன் முகமது. தனது தந்தை வழியில் தைமூருக்கும், தாய் வழியில் செங்கிஸ்கானுக்கும் உறவினர். பாபர் தனது தந்தை உமர் ஷேக் மீர்சாவின் பர்கானாவிற்கு வாரிசாகப் பொறுப்பேற்றார். ஆனால் அவரது தூரத்து உறவினர் ஒருவரால் அது தட்டிப்பறிக்கப்படவே பாபர் தனது ஆட்சிப் பகுதியை இழந்தார். சிறிது காலம் நாடோடியாகத் திரிந்த அவர், தனது மாமன்கள் ஒருவரிடமிருந்து காபூலைக் கைப்பற்றினார், பின்னர், இந்தியாவைக் கைப்பற்றும் ஆசையை வளர்த்துக் கொண்ட . பாபர் 1519 முதல் 1523 வரையிலான காலத்தில் நான்கு படையெடுப்புகளையும் மேற்கொண்டார். போர் வெற்றிகள் பாபர் படையெடுத்தபோது இந்தியாவில் ஐந்து முக்கிய முஸ்லிம் அரசுகளும் டெல்லி, குஜராத், மாளவம், வங்காளம், தக்காணம், இரண்டு முக்கிய இந்து அரசுகளும் - மேவாரின் ராண சங்கா மற்றும் விஜய நகரப் பேரரசு இருந்தன. 1525ஆம் ஆண்டு, காபூலிலிருந்து பாபர் மீண்டும் இந்தியா மீதான படையெடுப்பைத் தொடர்ந்தார். லாகூரின் ஆளுநராக இருந்த தௌலத்கான் லோடியை எளிதில் முறியடித்து அப்...