L.R .ESWARI பிரபல பின்னணிப் பாடகி.
பிறப்பு டிசம்பர் 7,1939
எல். ஆர். ஈஸ்வரி (பின்னணிப் பாடகி.) தமிழ்நாட்டின் பிரபலமான ஒரு திரைப்படப் பின்னணிப் பாடகி. 1958 ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் பாடி வரும் இவர் ஆயிரக்கணக்கான பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ளார்.
வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]
பரமக்குடிக்கு அருகே இளையான்குடி என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தோனி தேவராஜ், ரெஜினாமேரி நிர்மலா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார் ஈசுவரி. இவரது தாயார் எம். ஆர். நிர்மலா ஜெமினி ஸ்டூடியோவில் குழுப்பாடகியாக இருந்தவர். ஈஸ்வரியின் இயற்பெயர் "லூர்துமேரி ராஜேஸ்வரி". எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இளம் வயதிலேயே தந்தை (36) இறந்து விட்டார். அமல்ராஜ் என்ற தம்பியும், எல். ஆர். அஞ்சலி என்ற தங்கையும் இவருக்கு உண்டு.
திரையுலகில்[தொகு]
மனோகரா (1954) படத்திற்காக எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைப்பில் "இன்ப நாளிலே இதயம் பாடுதே" என்ற பாடலை ஜிக்கி குழுவினர் பாடினர். அப்பாடலில் தாய் நிர்மலாவுடன் இணைந்து ஈஸ்வரியும் குழுவினருடன் சேர்ந்து பாடினார்.[1] அன்று முதல் இவரும் குழுப் பாடகியானார். முதன் முதலில் தனியாகப் பாடும் சந்தர்ப்பம் நல்ல இடத்துச் சம்பந்தம் (1958) திரைப்படத்துக்காக கே. வி. மகாதேவனின் இசையமைப்பில் இவரே தான் அவரே அவரே தான் இவரே என்ற பாடலைப் பாடினார். இதுவே இவரது முதல் பாடலாகும். இப்படத்தில் ஈஸ்வரி நான்கு பாடல்களைப் பாடினார்.
இதனையடுத்து 1959 இல் வெளிவந்த நாலு வேலி நிலம் படத்துக்காக திருச்சி லோகநாதனுடன் இணைந்து ஊரார் உறங்கையிலே என்ற பாடலைப் பாடினார். இதனையும் கே.வி.மகாதேவனே இசையமைத்திருந்தார். 1961 இல் வெளிவந்த பாசமலர் திரைப்படத்தில் இவர் பாடிய வாராயென் தோழி என்ற பாடல் இவருக்கு மிகவும் புகழைத் தேடித்தந்த பாடல். இது இன்றும் திருமண விழாக்களில் ஒலிக்கும் பாடலாகும். "எலந்தைப் பழம்", முத்துக்குளிக்க வாரியளா போன்ற பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்த ஏனைய பாடல்கள்.
அவர் பாடிய மிகப்புகழ் பெற்ற பாடல்களில் சில:
'காதோடுதான் நான் பாடுவேன் மனதோடுதான் நான் பேசுவேன் விழியோடுதான் விளையாடுவேன்.'
'ஆடவரலாம் ஆடவர் எல்லாம் ஆடவரலாம் ஆடவரலாம்.'
'கண்களும் காவடி சிந்தாகட்டும், காளையர் நெஞ்சை பந்தாடட்டும்.'
'அம்மம்மா கேளடி தோழி ஆயிரம் சேதி.'
'துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை.'
'குடிமகனே பெரும் குடிமகனே.'
'பளிங்கினால் ஒரு மாளிகை, பருவத்தால் மணி மண்டபம்.'
- இப்படி எண்ணற்றப் பாடல்கள் எல்.ஆர்.ஈஸ்வரியின் புகழுக்கு புகழ் சேர்த்தன. லட்சக்கணக்கான ரசிகர்களை தேடித்தந்தன.
எல்.ஆஸ்.ஈஸ்வரி தன் திரை உலக அனுபவங்கள் பற்றி கூறியதாவது:-
'கடந்த 40 ஆண்டுகளாக நான் பாடி வருகிறேன். தமிழக அரசு எனக்கு 'கலைமாமணி' விருது கொடுத்து கவுரவித்தது.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா அரசுகள், 'நந்தி விருது' உள்பட பல விருதுகளை எனக்கு வழங்கியுள்ளன.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் 'வெண்ணிற ஆடை.' அதில் அவர் பாடும் முதல் பாடலான 'நீ என்பதென்ன... நான் என்பதென்ன...' என்ற பாடலை பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை மிகப்பெரும் பெருமையாகக் கருதுகிறேன்.
கேவி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி, வேதா ஆகியோர் இசையமைப்பில் நான் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் என்றும் சாகாவரம் பெற்றவை.
எப்படி 1961 எனக்கு திரை உலகில் ஒரு பெரிய உயர்வை கொடுத்ததோ, அதேபோல 1985-ம் ஆண்டையும் சொல்லலாம். இந்த ஆண்டில்தான் நான் அம்மன் மேல் பாடிய பாடல்கள் வரத்தொடங்கின. அதன் பிறகு தமிழ்நாட்டில் பெரும்பாலும் நான் சென்று பாடாத கோவில்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான கோவில் கச்சேரிகள் வந்தன.
எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் எல்லாம் அவர் பூரண குணம் அடைய வேண்டி விசேஷ பிரார்த்தனைகள் நடைபெற்றன. அந்த பிரார்த்தனைகளில் எல்லாம் நான் பாடிய அம்மன் பாடல்களின் கேசட்டுகள் போடப்பட்டன.
இது எனக்கு பெரிய ஆத்ம திருப்தியை கொடுத்தது.'
இவ்வாறு எல்.ஆர்.ஈஸ்வரி கூறினார்.
'உங்கள் வாழ்க்கையில் இவ்வளவு போராடி புகழின் உச்சிக்கு வந்த நீங்கள், அதன் பிறகு உங்களுக்கென்று ஒரு வாழ்க்கைத்துணையைத் தேடிக் கொள்ளாதது ஏன்?' என்ற கேள்விக்கு பதில் அளித்து எல்.ஆர்.ஈஸ்வரி கூறியதாவது:-
'வறுமையின் பிடியில் சிக்கிக் கிடந்த எனது குடும்பத்தை முன்னேறச் செய்யவும், எனது தம்பி, தங்கைக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் எனது கவனம் முழுவதும் இருந்ததால், எனது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவே இல்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை.
எனது தம்பியின் மகன், மகள்கள், பேரன் - பேத்திகள் எல்லோரும் என் மீது காட்டும் அளவு கடந்த அன்பினால் நான் மிக்க மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்' என்று கூறினார், எல்.ஆர்.ஈஸ்வரி
பக்திப் பாடல்கள்[தொகு]
பிற்காலத்தில் இவர் துள்ளிசைப் பாடல்களையே நிறையப் பாடினார். எழுபதுகளின் பிற்பகுதியில் ஈஸ்வரிக்கு திரைப்பட வாய்ப்புக் குறைந்தது. இருந்தாலும் பக்திப் பாடல்களை திரைப்படங்களிலும், வெளியிலும் அதிகம் பாடி வந்தார்.
No comments:
Post a Comment